• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

by Tamil2daynews
September 10, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

 

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீசரை ரொமாண்டிக் ஹீரோ ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். கண்ணைக் கவரும் பிரமாண்டமான காட்சியமைப்புகள், இளமைத் துள்ளல் நிறைந்த தருணங்கள் மற்றும் ரசிக்க வைக்கும் காதல் உணர்வுகளுடன், புத்துணர்ச்சியான ஒரு காதல் உலகத்தை இந்த டீசர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த அழகான கதையில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரியும், உணர்வுப்பூர்வமான நடிப்பும் டீசரின் சிறப்பம்சங்களில் ஒன்று. ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் தனது இயல்பான மற்றும் கிராமத்து கதாபாத்திர நடிப்பால் பாராட்டைப் பெற்ற ஏகன், இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், நவீனமான, கூலான மற்றும் அப்பாவித்தனம் நிறைந்த இளைஞராக நடித்துள்ளார். அவருக்கு இணையாக ஸ்ரீதேவியும், ஃபெமினா ஜார்ஜூம் தங்களது அழகான நடிப்பால் கவனம் ஈர்க்கின்றனர். இவர்களுக்கிடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி டீசரின் இனிமையான தருணங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது. மேலும், டீசரின் ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டும் விதமாக ஃபெமினா ஜார்ஜ் வருகிறார். குறுகிய நேரமே தோன்றினாலும், தனது அழுத்தமான தோற்றத்தின் மூலம் உடனடியாக கவனம் ஈர்க்கிறார்.

‘ஹைக்கூ’ படத்தின் காதல் உணர்வுகளுக்கு சித்து குமாரின் இசை கூடுதல் உயிர் கொடுக்கிறது. குறிப்பாக, கிளாசிக்கல் ராகங்களுடன் இணைந்த மென்மையான வயலின் இசையும், நவீன ஃபியூஷன் இசையும் டீசரின் இதமான காட்சியமைப்புடன் அழகாகப் பொருந்துகின்றன. அவரது பின்னணி இசை, டீசருக்கு மயக்கும் இசை அனுபவத்தை வழங்குகிறது. குறுகிய நேரத்தில், பார்வையாளர்களை ஒரு வண்ணமயமான காதல் உலகிற்குள் அழைத்துச் செல்லும் அனுபவத்தை டீசர் உருவாக்குகிறது. எழுத்தாளர் மற்றும் இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் புதுமையான திரை அணுகுமுறை, அனைவருக்கும் பரிச்சயமான காதல் உணர்வுகளை புத்துணர்ச்சியுடன் தருகிறது.காதல் கதைகள் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனி கவனம் பெற்று வரும் நிலையில், ‘ஹைக்கூ’ டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.  இளம் நடிகர்கள், வண்ணமயமான காட்சிகள், மனதை வருடும் இசை மற்றும் புத்துணர்ச்சியான திரை அணுகுமுறை ஆகியவற்றுடன், இந்தப் படம் காதல் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம், படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே கைப்பற்றியுள்ளது. படத்தின் புதுமையான கதை மற்றும் தனித்துவமான திரை அணுகுமுறை ஓடிடி தளத்தின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, இந்த டிஜிட்டல் உரிமை கணிசமான தொகைக்கு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை டாக்டர் டி. அருளானந்து மற்றும் மாத்யூ அருளானந்து ஆகியோர் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். பிரேம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

காதல் உலகத்தின் அழகிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் வெளியாகியுள்ள டீசரை தொடர்ந்து, ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Previous Post

’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

Next Post

‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

Next Post

'சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

Popular News

  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி

    0 shares
    Share 0 Tweet 0
  • இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

    0 shares
    Share 0 Tweet 0
  • “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

October 30, 2026

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

October 30, 2026

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

October 30, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

October 30, 2026

‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

October 30, 2026
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.