• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

by Tamil2daynews
September 19, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

 

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் வெளியான போதே, முழுமையான காதல் கதையாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் வேறொரு கோணத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

காதலை மையமாகக் கொண்டு தொடங்கும் டிரெய்லர், வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்க முயற்சிக்கும் காதலர்களின் பிரச்சனைகளைப் பேசுவது போல ஆரம்பமாகிறது. காதலர்களின் உறவு, குடும்பத்தின் எதிர்ப்பு என இயல்பான காதல் கதைக்கான களத்துடன் நகரும் டிரெய்லர், பாதியில் திடீரென யூடர்ன் அடிக்கிறது.

அதன்பிறகு, காதலர்கள் எதிர்பாராத ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்வதும், அந்தப் பிரச்சனை என்ன என்பது குறித்து எந்தத் தகவலையும் முழுமையாக வெளிப்படுத்தாமல், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மூலம் அடுத்த கட்டக் கதையை காட்டுவதும் டிரெய்லரின் முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது. காதல் கதையாகத் தொடங்கும் படம் எந்தச் சூழ்நிலையில் ஆக்ஷன் பாதைக்குள் செல்கிறது என்ற கேள்வியை டிரெய்லர் எழுப்பியுள்ளது.
குறிப்பாக, இதுவரை வெளியான பாடல்கள் படத்தின் காதல் மற்றும் மென்மையான உணர்வுகளை முன்னிலைப்படுத்தியிருந்த நிலையில், டிரெய்லரில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன. கதையின் முக்கியமான பிரச்சனை என்ன? காதலர்களுக்கு என்ன நடக்கிறது? அவர்கள் எதிர்கொள்ளும் சவால் என்ன? என்பதற்கான விடைகளை திரையரங்கில் தெரிந்துகொள்ளும் வகையில் டிரெய்லர் அமைந்துள்ளது.

இளம் ரசிகர்களை கவரும் வகையில் காதல், அழகான உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஆக்ஷனும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை டிரெய்லர் உணர்த்தியுள்ளது. இதனால் ‘அன்பில் அவன்’ ஒரு வழக்கமான காதல் திரைப்படமாக மட்டும் இல்லாமல், காதலுக்குள் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்ட படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

‘அன்பில் அவன்’ படத்தை  ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ படப்புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் கவனம் ஈர்த்துள்ளது. காதல் கதையாகத் தொடங்கி எதிர்பாராத ஆக்ஷன் திருப்பத்தை காட்டியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

https://www.youtube.com/watch?v=dttG5wtkgCw
Previous Post

‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

September 19, 2026

‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 19, 2026

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

September 19, 2026

சண்டைக்காரி – விமர்சனம்

September 19, 2026

சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

September 19, 2026

பாரிஸ் கபே – விமர்சனம்

September 19, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.