• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஓரம் போ, ஓரம் போ!! ‘டோரதி’ வண்டி வருது!

by Tamil2daynews
September 20, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஓரம் போ, ஓரம் போ!! ‘டோரதி’ வண்டி வருது!

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. மதுரையில் இருந்து ஸ்பெஷலான லாரி ரோடு ட்ரிப் தொடங்கியுள்ளது. திரைப்படத்தின் உலகையும், மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையையும் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை ஒளியின் வேகத்தைவிட வேகமாகப் பயணித்து வருகிறது. தலைமுறைகள், புவியியல் எல்லைகள், மொழிகள் என அனைத்தையும் கடந்து அனைவருடனும் கலந்துள்ள அந்த இசை, இப்போது ‘டோரதி’ திரைப்படத்திற்கும் சிறப்பு சேர்த்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேரவன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கிறது.

‘டோரதி’ திரைப்படத்தின் கதையுலகில் முக்கியமான இடம்பெறும் ஒன்றால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கேரவன், திரைப்பட விளம்பரப் பயணத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இல்லாமல், மேஸ்ட்ரோ இளையராஜாவின் ஒரிஜினல் ஸ்கோர் இசையையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறது. நகரங்கள் மற்றும் ஊர்கள் வழியாக இந்தக் கேரவன் பயணிக்கும்போது, இளையராஜாவின் இசையும் ‘டோரதி’யுடன் இணைந்து பயணிக்கிறது. இதன் மூலம் திரைப்படம் திரையரங்குகளை அடைவதற்கு முன்பே ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தரும். மதுரையில் தொடங்கிய இந்த ரோடு ட்ரிப் நிகழ்வில், திரைப்படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான ரிஷிகாந்த்,  இந்த லாரியை ஓட்டியபடி பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

இன்று மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் வழியாகப் பயணிக்கும் இந்த கேரவன், நாளை பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் நோக்கிச் செல்கிறது. மதுரையில் இருந்து புறப்படும் இந்தக் கேரவன், மேஸ்ட்ரோ இளையராஜா பிறந்த ஊரான தேனி வழியாகச் சென்று, பின்னர் ‘டோரதி’ திரைப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட திண்டுக்கல் பகுதிக்குச் செல்கிறது. எனவே, திரைப்படத்தின் கதையுலகம், படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை என ரசிகர்களை கவர இருக்கிறது.
’டோரதி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் சிறப்புத் திரையிடல்களில் திரைப்படம் பங்கேற்றிருப்பதும் சமீபத்தியில் வெளியான படத்தின் டிரெய்லரும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘டோரதி’ திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாக இசைஞானி இளையராஜாவின் இசையும் அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இசை மற்றும் ஒரிஜினல் சவுண்ட் டிராக், இசை ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேஸ்ட்ரோவின் இசை, கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கியுள்ள உலகிற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த் மற்றும் ரிஷிகாந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை வழங்குகின்றன. சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். கணேஷ் சிவா படத்தொகுப்பாளராகவும், பவன் நரேந்திரா நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை சரவணன் சந்திரன் எழுதியுள்ளார். தொழில்நுட்பக் குழுவில் ஆக்ஷன் இயக்குநர் தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநர் ஷெரிஃப் எம்., ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா, சிங்க் சவுண்ட் டிசைனர் தாமஸ் குரியன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் குமார் கங்கப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 
Previous Post

மதுரையில் கிடைத்த அன்பு… ‘லெனின் பாண்டியன்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

Next Post

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

Next Post

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.