• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனை படைத்தது!

by Tamil2daynews
September 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனை படைத்தது!

 

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் வி. அருண்குமார் (எ) அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’, சினிமா தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான நபர்களை நிகழ்நேரத்தில் (Real-Time) Motion Capture செய்ததற்காக இப்படம் கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றுள்ளது.

இந்த உலக சாதனை கடந்த பிப்ரவரி 2026-ல் நிகழ்த்தப்பட்டது. ஒரே நேரத்தில் 37 கலைஞர்களை நிகழ்நேரத்தில் Motion Capture செய்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்ப சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் 15 செப்டம்பர் 2026 அன்று வழங்கப்பட்டது.

கின்னஸ் உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோரிடம் கின்னஸ் உலக சாதனையின் மூத்த நடுவர் ஸ்வப்னில் டாங்ரிகர் வழங்கினார். படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்ற நெருக்கமான விழாவில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த சாதனை குறித்து அல்லு அர்ஜுன் கூறுகையில்..,
“சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தி, உலக அளவில் புதிய அளவுகோலை உருவாக்கும் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் பெருமையான தருணம். இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து எங்களது முயற்சிகளை கௌரவித்த கின்னஸ் உலக சாதனை நிறுவனத்திற்கு நன்றி.
எனது இயக்குநர் அட்லீயின்  தொலைநோக்கு பார்வையும் வழிகாட்டுதலும், ஒட்டுமொத்த படக்குழுவினரின் அசாத்திய உழைப்பும் இல்லாமல் இந்த சாதனை சாத்தியமாகியிருக்காது. இவ்வளவு பிரம்மாண்டமான கனவுடன் உருவாகும் இந்தப் படைப்பிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இது எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பான தருணம்” என்றார்.

இயக்குநர் அட்லீ கூறுகையில்..,
“சிறுவயதில் கின்னஸ் உலக சாதனைகள் குறித்து மிகுந்த ஆச்சரியத்துடன் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு நாள் நாமே ஒரு சாதனையைப் படைப்போம் என்று அப்போது நினைத்துக்கூட பார்த்ததில்லை.

ஒரே படப்பிடிப்பில் 37 Motion Capture Assets-ஐ ஒன்றிணைத்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது எனக்கு இன்னும் கனவு போலவே இருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியையும் பணிவையும் அளிக்கிறது. நாம் பெரிய கனவு கண்டு, முழுமையான நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து உழைத்தால், சில நேரங்களில் சாத்தியமற்றதாகத் தோன்றுவதையும் சாத்தியமாக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும்.

இறைவனின் அருளால் இந்தக் கனவில் நம்பிக்கை வைத்து, அதை நனவாக்கிய எனது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.

‘ராக்கா’ திரைப்படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த பிரம்மாண்டமான Motion Capture பணியில் 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை 37 கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒரே அமர்வில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரே Capture Volume-க்குள் 37 பேரின் தனித்தனி நடிப்பையும் ஒரே நேரத்தில் துல்லியமாகப் பதிவு செய்து, அதன் தனித்தன்மை பாதிக்காமல் பாதுகாப்பதே இந்த முயற்சியின் மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது.

இதற்காக, படத்தின் VFX தயாரிப்பாளர், ‘ராக்கா’ படத்தின் பிரம்மாண்டத்திற்கும் தொழில்நுட்பத் தேவைகளுக்கும் ஏற்ப புதிய மோஷன் கேப்சர் பைப்லைன் மற்றும் வொர்க்ஃப்ளோ ஒன்றை உருவாக்கியுள்ளார். கின்னஸ் உலக சாதனை முயற்சிக்காக 92 ஆப்டிக்கல் மோஷன் கேப்சர் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கேப்சர், கேலிப்ரேஷன், நெட்வொர்க்கிங், சிங்க்ரனைசேஷன், ரியல்-டைம் அன்ரியல் விஷுவலைசேஷன், விட்னஸ் கேமராக்கள், ஃபேஷியல் கேப்சர் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பு, அட்லீயின் தொலைநோக்கு பார்வை, எல்லைகளைத் தாண்டி நடிப்பை வெளிப்படுத்தும் அல்லு அர்ஜுனின் அர்ப்பணிப்பு, Apple Art Studio-வின் தொழில்நுட்பத் திறன், படத்தின் மேம்பட்ட VFX தொழில்நுட்பம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் கூட்டு முயற்சி ஆகியவை இந்த சாதனை சாத்தியமாக முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

இந்த கின்னஸ் சாதனை, உலக அரங்கில் இந்திய சினிமாவின் தொழில்நுட்பத் திறன் மற்றும் பிரம்மாண்டமான படைப்பாற்றலை வெளிப்படுத்தும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. இந்திய படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமையால் உருவாக்கப்பட்ட இந்த சாதனை, நவீன திரைப்படத் தொழில்நுட்பத்தில் இந்திய சினிமா எட்டியுள்ள புதிய உயரத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

‘ராக்கா’ மூலம் இந்திய சினிமா மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் தனது படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப சாத்தியங்களைப் பறைசாற்றியுள்ளது.

Previous Post

ஒரு மாவீரன். இதிகாச நாயகன். பெருங்காப்பியத் தலைவன் திரையில் உயிர்பெறுகிறான்.

Next Post

சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’!

Next Post

சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’!

Popular News

  • ‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனை படைத்தது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’!

    0 shares
    Share 0 Tweet 0
  • LK அக்ஷய் குமாரின் அடுத்த அதிரடி ஆட்டம்… கிரைம் டிராமாவாக உருவாகும் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி டார்க் ஹெவன்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆர்எக்ஸ் 100’ நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டாவின் புதிய திரைப்படம் ‘கம்பேக்’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.