• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

by Tamil2daynews
October 23, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

 

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஆர். ரவீந்திரன் தலைமையிலான டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 22வது திரைப்படத்தை தொடங்கியுள்ளது. இப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் & மீடியா எல் எல் பி பேனர்களில் சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து ஆர். ரவீந்திரன் தயாரிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பிரபல கன்னட இயக்குநரும் பாடலாசிரியருமான ஹரி சந்தோஷ் இயக்க சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். சுவாசிகா, நரேன், அஞ்சலி நாயர், நந்திதா ஸ்வேதா, ஹரிஷங்கர், ஹரீஷ் பேரடி, தேனப்பன், வையாபுரி, ஆனந்த் நாக் மற்றும் வசந்தி குரு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Imageபடப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஹரி சந்தோஷ், “இது ஒரு புதுமையான குடும்ப திரில்லர் வகையை சேர்ந்த கதை ஆகும். ஒரு திரில்லரில் இதர அம்சங்களை சரியான விகிதங்களில் சேர்த்து பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் வழங்கவுள்ளோம். தமிழில் எனது முதல் திரைப்படத்திற்காக டிரெடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் சசிகுமார் உள்ளிட்டோரோடு இணைவது மிக்க மகிழ்ச்சி,” என்றார்.
Imageகிருஷ் ஜே நாக்ரேச்சா இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார். சஞ்சய் விஜய்ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். ஜிப்ரான் இசையைமக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு: சான் லோகேஷ், கலை: துரைராஜ், உடைகள் வடிவமைப்பு: துர்கா, ஒப்பனை & சிகை அலங்காரம்: மாலிக், , சண்டைப் பயிற்சி: அபிஷேக், பப்ளிசிட்டி டிசைன்ஸ்: வியாகி, பாடல்கள்: கார்த்திக் நேத்தா, வசனம்: மந்த்ரா, மக்கள் தொடர்பு: நிகில் முருகன், கிரியேட்டிவ் புரோமோஷன்ஸ்: ஹரிஹரன் ஜெ (லக்ஸெரான் ஸ்டூடியோஸ்), மார்க்கெட்டிங் & புரோமோஷன்ஸ்: ஏகேடி‍ ‍ ‍- லின்க்.

டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் பேனர்களில்  ஆர். ரவீந்திரன், சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் தயாரிப்பில் ஹரி சந்தோஷ் இயக்கத்தில்  சசிகுமார், சுவாசிகா, நரேன், நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர் நடிக்கும் குடும்ப திரில்லர் திரைப்படத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்து வெளியிட படகுழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Previous Post

ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

Next Post

ஹைக்கூ – விமர்சனம்

Next Post

ஹைக்கூ - விமர்சனம்

Popular News

  • துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

    0 shares
    Share 0 Tweet 0
  • முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹைக்கூ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.