• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

by Tamil2daynews
October 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

 

ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்: டிசம்பரில் உலகளாவிய வெளியீடு

‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய படமான ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படம், பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடிப்பதோடு, சுமார் 100 புதிய முகங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் அறிமுகமாகின்றனர். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

திரிசூரை பின்னணியாக கொண்டு, முக்கியமாக சாலக்குடியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக, புதிய நடிகர்கள் சுமார் நான்கு மாத காலம் சிறப்பு பயிற்சிக்கு பிறகே கேமராவுக்கு முன்பு களமிறங்கினர். இப்படத்தில் நடிக்கும் சுமார் 100 புதிய முகங்களும் வசனம் பேசும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட திரையரங்க அனுபவத்தை தரும் வகையில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது படத்தின் போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்திய சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, பிரபல தமிழ் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மேலும், தென்னிந்தியாவின் பிரபல சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்களுடன் படத்தொகுப்பாளர் மனு ஆண்டனி மற்றும் சவுண்ட் டிசைனர் அஜயன் அதத் ஆகியோரும் தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

2024-இல் வெளியாகி மாபெரும் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியையும், ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்ற ‘பனி’ படத்தை தொடர்ந்து, ஜோஜு ஜார்ஜ் இயக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.

‘மாலிகாபுறம்’, ‘2018’, ‘ரேகாசித்திரம்’, ‘ஆடு 3’ போன்ற வெற்றிகரமான படங்களை வழங்கிய காவ்யா ஃபிலிம் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்:
 ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி
 இசை: யுவன் ஷங்கர் ராஜா
 படத்தொகுப்பு: மனு ஆண்டனி
 ஒலி வடிவமைப்பு: அஜயன் அதத்
 தயாரிப்பு வடிவமைப்பு: சாபு மோகன்
 சண்டைப் பயிற்சி: அன்பறிவ் மாஸ்டர்ஸ்
 கிரியேடிவ் தயாரிப்பாளர்: ஜயன் நம்பியார்
 உடை வடிவமைப்பு: சமீரா சனீஷ்
 ஒப்பனை: ஷமீர் ஷாம்
 செயற்கை ஒப்பனை: என்.ஜி. ரோஷன்
 VFX: லிட்டில் ஹிப்போ (Little Hippo)
https://youtu.be/cfHo9hBpas8?si=PgNCUyPLM6ITwB00
Previous Post

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Next Post

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

Next Post

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” - நடிகை ஸ்ரீதேவி!

Popular News

  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

October 25, 2026

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

October 25, 2026

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

October 25, 2026

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

October 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.