சீன் – விமர்சனம்
சூர்யாவிற்கு இந்த வருடம் பெரும் கொண்டாட்டமான வருடம்தான் ஜாக்பாட் அடித்திருக்கிறார் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு படம் ஜாலியாக செல்கிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே நஸ்லான் எவ்ளோ பெரிய சைக்கோ என்பதற்கு லீட் கொடுத்து தொடங்குகின்றனர், அப்படியே கதை சூர்யா பக்கம் வருகிறது, தனக்கென ஒரு ரூல் போட்டு இஷ்டத்துக்கு போலிஸ் ஸ்டேஷனில் இருந்து வருகிறார் சூர்யா.
சில வருடங்களுக்கு முன்பு சூர்யா கண்டிபிடித்த சைக்கோ கொலையாளி ஒருவர் தற்போது சிறையில் உள்ளார், ஆனால் மறுபடியும் அதே பேட்டனில் கொலை நடக்கிறது.

சூர்யாவின் ஈகோவை இது சீண்டிகொண்டே இருக்க, தன் பிரச்சனைகாக நஸ்ரியாவை கூடையே வைத்துகொண்டு, தன் அப்பா, அம்மாவை மீண்டும் தன் வீட்டிற்கு வர வைத்து நஸ்லானை பிடித்தாரா என்பதே மீதிக்கதை.
சூர்யா மனுஷன் பீக் புடிச்சுடார்னு சொல்ற மாதிரி பின்னி பெடல் பெர்ப்பாமன்ஸ் தான், அதிலும் தன் பிரச்சனை அறிந்து நஸ்ரியாவுடன் கைகோர்த்து அவர் செய்யும் வேலைகள் அட்டகாசம், அதிலும் செகண்ட் ஆப்-ல் நஸ்லானை சந்திக்கும் இடம் பட்டாசு.
நஸ்லான் தமிழ் சினிமாவிற்கு செம எண்ட்ரி, கலக்கிவிட்டார், 100-க்கு மேற்பட்ட கொலை செய்த சைக்கோ அதிலும் இண்டலிஜண்ட் சைக்கோவாக தன் அலட்டலே இல்லாத நடிப்பில் அடி தூள் செய்துவிட்டார்.
நஸ்ரியா ஆரம்பத்தில் அவர் வரும் காட்சிகள் தான் கொஞ்சம் போர் என்றாலும் இரண்டாம் பாதி செம கம்பேக் கொடுக்கிறார், இவர்களை தவிற மனநிலை சரியில்லாத அப்பாவாக ஆனந்த் ராஜ், குடிகார அம்மா, போலிஸ் ஆபிஸர்கள் ராஜ் பிரியன், வினோத் ஆக நடித்தவர் எல்லாமே சிறப்பு.

அதன் பிறகு சூர்யா வெஸ் நஸ்லான் ஒன் டூ ஒன் கேட் அண்ட் மவுஸ் கேம் சரவெடி தான், ஜீது மாதவன் அவருக்கு உரிய ஸ்டைலில் நஸ்ரியா கை நடுங்கி தண்ணி குடிக்க, சூர்யா அம்மா கை நடுங்கி சரக்கு அடிக்க என அவர் டச் படம் முழுவதும் உள்ளது. டெக்னிக்கல் விஷமாக பார்த்தால் கண்டிப்பாக ஒளிப்பதிவு கலக்கல், அதை விட சுஷின் பேக்ரவுன் மியூஸிக் செம பலம்.
இப்படி ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன் கதையை இதுபோல ஜாலியாகவும் தரலாம் என ஜித்து மாதவன் நிரூபித்திருக்கிறார்.
சூர்யா இதற்கு முந்திய இரண்டு படங்களை விட இதில் நடிப்பில் செம மெருகேற்றம்.








