• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மூக்குத்தி அம்மன் -2 – விமர்சனம்

by Tamil2daynews
November 8, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மூக்குத்தி அம்மன் -2 – விமர்சனம் 

 

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ திரைப்படம் இன்று தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2020-ல் வெளியான முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். நயன்தாரா அம்மனாக நடிக்கும் இப்படத்தில் ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, சினேகா, யோகி பாபு, இனியா, அபிநயா, மைனா நந்தினி, துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் நடிகை நயன்தாராவுக்கு இரவில் புரியாத புதிராக கனவுகள் வருகின்றன. இந்த கனவில் வரும் அமானுஷ்யங்கள் நயன்தாராவை மயிலாஞ்சி என்கிற ஊருக்கு போக சொல்கிறது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், மயிலாஞ்சி தனது அம்மாவுடன் செல்ல முடிவு செய்கிறார்.

நயன்தாரா அங்கு வரும் நேரத்தில், 2000 ஆண்டுகளாக ஜீவசமாதியில் உள்ள ரெஜினாவை மந்திரவாதி சுனில் தனது சக்தியால் மீண்டும் உயிர்ப்பிக்கிறார். உயிர்த்தெழும் ரெஜினா தனது கணவரை தேடி கண்டுபிடித்து, நயன்தாராவை பலி கொடுக்க முடிவு செய்கிறார்.
Mookuthi Amman 2' movie review: Nayanthara's Amman has divine powers, but cannot defeat bad filmmaking - The Hindu

பலி கொடுக்க அவரை அழைத்து வரும்போது நயன்தாராவை காப்பாற்ற மூக்குத்தி அம்மன் என்ட்ரி தருகிறார். அப்போதுதான் தெரிகிறது, மக்களை காப்பாற்ற மூக்குத்தி அம்மன்தான் மறுபிறப்பு எடுத்துள்ளார் என்று. ஆனால், இது நயன்தாராவுக்கு தெரியவில்லை.

தான் மூக்குத்தி அம்மனின் மறுபிறப்பு என்றே தெரியாமல் இருக்கும் நயன்தாரா எப்படி தீயசக்தியான ரெஜினாவை அழித்து மீண்டும் ஊர் மக்களை காப்பாற்றினார் என்பதே இப்படத்தின் மீதி கதை.

மூக்குத்தி அம்மனாக வரும் நடிகை நயன்தாரா மொத்த திரைப்படத்தையும் தனது தோளில் சுமக்கிறார். அப்பாவி பெண்ணாக ஒருபுறமும், சூலம் ஏந்திய அம்மனாக மறுபுறமும் என ஆரம்பம் முதல் இறுதி வரை தனது கதாபாத்திரத்தை சிறப்பாக எடுத்து சென்றுள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் மூக்குத்தி அம்மனாக இவர் வரும் காட்சிகள் எல்லாம் பிளாஸ்ட்.

வில்லியாக களமிறங்கி அனைவரையும் மிரள வைத்துவிட்டார் நடிகை ரெஜினா. இவருடைய ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் வேற லெவல். அதில் அவர் காட்டிய ஆட்டிட்யூட் செம. அம்மனுக்கு இணையான வில்லி என்றால், அது இவர்தான் என்று சொல்லும் வகையில் கச்சிதமாக அந்த கதாபாத்திரத்தில் பொருந்தியுள்ளார்.

ஊர்வசிக்கு வலுவான கதாபாத்திரம் அமையவில்லை. அது சற்று வருத்தத்தை தருகிறது. துனியா விஜய் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டிவிட்டார். மற்ற அனைத்து நடிகர், நடிகைகளின் பங்களிப்பும் படத்திற்கு பலம்.

இயக்குநர் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக திரையில் வழங்கியுள்ளார். அம்மன் வரும் காட்சிகளில் எல்லாம் அவ்வளவு பிரம்மாண்டம் கொட்டிக்கிடக்கிறது. மேலும், ரெஜினா கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளார்.
This Week in Theatres: Ramayana, Scene, Mookuthi Amman 2, and More Must-Watch Releases

ஆனால், முதல் பாதி திரைக்கதை சுவாரஸ்யமாக அமையவில்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதாகவே கணிக்க முடிகிறது. அதேபோல், எமோஷனல் கனெக்ட் ஆகாதது படத்திற்கு மைனஸாக அமைகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயங்கள் இரண்டாம் பாதியில் காட்டிய விதம் அருமை. ஃபிளாஷ்பேக் கதைக்களம் விறுவிறுப்பாக இருந்தது. இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் சுந்தர் சி. இதனால், தனது திரைப்படங்களில் அதிகம் ரசிக்கப்படும் நகைச்சுவை காட்சிகளை கூட அவர் பெரிதாக இப்படத்தில் வைக்கவில்லை. முழுமையாக அம்மன் vs சாத்தான் என்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.

சர்ப்ரைஸாக இரண்டு நட்சத்திரங்கள் இப்படத்தில் கேமியோவாக கொண்டு வரப்பட்டு, அவர்களின் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் சிறப்பு. ஒளிப்பதிவு மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. டெக்னிகல் ஒர்க் எல்லாம் சூப்பர். குறிப்பாக CG ஒர்க்ஸ் வேற லெவல்.

குடும்பத்துடன் இந்த தீபாவளி விடுமுறை காண அருமையான திரைப்படம்.

மொத்தத்தில் இந்த தீபாவளிக்கு மூக்குத்தி அம்மனை  தரிசனம் செய்யலாம்.
Previous Post

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

Next Post

சீன் – விமர்சனம்

Next Post

சீன் - விமர்சனம்

Popular News

  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.