• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

டைடானிக் – விமர்சனம்

by Tamil2daynews
November 15, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
டைடானிக் – விமர்சனம் 

ராகவ் விஜய், தனது திருமணத்திற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் பெங்களூர் செல்கிறார். சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு சென்ற தனது மனைவியை அழைத்து வருவதற்காக பெங்களூர் செல்லும் காளி வெங்கட்டும் அதே ரயிலில் பயணிக்கிறார். பல வருடங்களாக தன்னைவிட்டு விலகியிருக்கும் காதலியை தேடி செல்லும் கலையரசனும் அதே ரயிலில் பெங்களூர் பயணிக்கிறார். இவர்கள் மூன்று பேரும் ரயிலில் நண்பர்களாகி, தங்களது காதல் கதைகளை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

ஒருவருக்கு பள்ளிக் காதல், ஒருவருக்கு கல்லூரி காதல், மற்றொருவருக்கு அலுவலக காதல் என்று மூன்று பேரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் காதலித்தாலும் மூன்று பேரின் காதலும் கவுந்து போகிறது. அது ஏன் ?, அதன் பிறகு இவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது ? ஆகிய கேள்விகளுக்கான பதிலையும், தற்போதைய இவர்களது சந்திப்பினால் ஏற்பட இருக்கும் எதிர்பார்க்காத திருப்பத்தையும், காமெடியாகவும், காதல் உணர்வோடும் சொல்வது தான் ‘டைடானிக்’.

கலையரசன், காளி வெங்கட் மற்றும் ராகவ் விஜய் மூன்று பேரும் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். ரயிலில் நண்பர்களாகி தங்களது காதல் கதைகளை பகிர்ந்துக் கொள்ளும் காட்சிகளாகட்டும், மூன்று பேரின் காதல் கதை என அனைத்திலும் அவர்களது அளவான நடிப்பு காட்சிகளை ரசிக்க வைக்கிறது.

பல வருடங்களாக 10ம் வகுப்பு படித்து வரும் காளி வெங்கட் சக மாணவியான கயல் ஆனந்தியை ஒருதலையாக காதலிப்பது நகைச்சுவையாக இருந்தாலும், அவரது காதல் பார்வை, காதல் பிரிவுக்குப் பிறகான ஏக்கம் போன்றவற்றை மிக சிறப்பாக தனது நடிப்பில் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
Kalaiyarasan's Titanic gets release date

கல்லூரியில் கயல் ஆனந்தியை காதலிக்கும் கலையரசன், குடும்ப சூழ்நிலை காரணமாக அவரை பிரிந்தாலும், அவரது நினைவாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் தனது உண்மையான காதல் உணர்வை வெளிப்படுத்தும் காட்சிகளில் பார்வையாளர்கள் மனதை தொட்டு விடுகிறார்.

அலுவலகத்தில் ஆஷ்னா சாவேரியை கண்டதும் காதல் கொள்ளும் ராகவ் விஜய், அவருடனான மோதலால் அவரை பிரிந்து பெற்றோர் பார்க்கும் பெண்ணை மணக்க தயாரானாலும், முன்னாள் காதலால் கல்யாண வாழ்க்கையில் எதாவது பிரச்சனை வந்துவிடுமோ, என்ற குழப்பமான மனநிலையை தன் நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி, கதாபாத்திரத்தின் வெகுளித்தனத்தையும், குழந்தைத்தனமான குறும்புகளையும் மிகைப்படுத்தாமல் இயல்பான உடல்மொழியால் கண்முன் நிறுத்துகிறார். காதலருடன் ஏற்படும் சின்னச் சின்ன சண்டைகள் மற்றும் ஈகோ மோதல்களில் கோபம், ஏக்கம் என மாறுபட்ட உணர்ச்சிகளைத் துல்லியமாகக் கடத்தியிருக்கும் கயல் ஆனந்தி, தனது துருதுருப்பான கண்களாலேயே காதலையும் குழப்பத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சாவேரி, கதைக்குத் தேவைப்படும் இடங்களில் முதிர்ச்சியான உணர்ச்சிகளையும், சோகத்தையும் முகபாவனைகளில் நேர்த்தியாகக் கடத்துவதோடு, பாடல் காட்சிகளிலும், முக்கியத் திருப்பங்கள் நிறைந்த காட்சிகளிலும் தனது துடிப்பான நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.

மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி, சு.செந்தில் குமார், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி மோகன், காயத்ரி உள்ளிட்ட அனைவரும் சிறிய அளவில் முகம் காட்டியிருந்தாலும், திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் விதத்தில் பயணித்திருக்கிறார்கள்.Titanic - Kadhalum Kavunthu Pogum tamil Movie - Overview

ஒளிப்பதிவாளர் பல்லுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை. குளோஷப் ஷாட்களை படம் முழுவதும் நிரப்பியிருப்பவர், காட்சிகளை வண்ணமயமாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் மனதை வருடுகிறது. பின்னணி இசை காதல் உணர்வுகளை பார்வையாளர் மனதில் கடத்தும் விதத்தில் மென்மையாக பயணித்து படத்திற்கு பலம் சேர்க்கிறது.

மூன்று பேரின் காதல் கதைகளின் தொகுப்பு தான் கதை என்றாலும், அதை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் வகையில் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்கள் ராதாகிருஷ்ணன் தனபால் மற்றும் இக்னேஷியஸ் அஸ்வின். படம் முழுவதும் வசனக் காட்சிகள் தான் அதிகம் என்றாலும் படம் தொய்வில்லாமல் நகர்வதற்கு இவர்களது பணி பெரிதும் கைகொடுத்திருக்கிறது.

காதல் மற்றும் காதலுக்குப் பிறகான வாழ்க்கை பற்றி பாடம் நடத்தியிருக்கும் இயக்குநர் எம்.ஜானகிராமன், காதலுக்குப் பிறகான வாழ்க்கையையும், அதில் எழும் நடைமுறைச் சிக்கல்களையும் யதார்த்தமாகவும், முதிர்ச்சியாகவும் பேசியிருப்பதோடு, பார்வையாளர்கள் மனதில் காதல் உணர்வுகளையும் கடத்தியிருக்கிறார்.

காதலிக்கும்போது இருக்கும் ஈர்ப்பும், கொண்டாட்டமும், காதலுக்குப் பிறகான வாழ்வில் எப்படிப் பொறுப்புகளாகவும், புரிதல்களாகவும் மாறுகின்றன என்பதை இயக்குநர் மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
Titanic - Kadhalum Kavunthu Pogum Tamil Movie - Photo Gallery

வழக்கமான சினிமாத்தனமான திருப்பங்களோடு படம் முடிவது திரைக்கதையின் பலவீனமாக இருந்தாலும், நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சின்னச் சின்ன ஊடல்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் மனக்கசப்புகளைக் கதையாக்கிய விதமும், கல்யாணத்திற்குப் பிறகு மனைவியிடம் முன்னாள் காதல் பற்றி சொல்வதால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை நகைச்சுவையாக சொல்லி சிரிக்க வைத்தாலும், சிந்திக்கும்படி எச்சரித்த விதம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

எந்தவொரு கதாபாத்திரத்தையும் நல்லவர், கெட்டவர் என முத்திரை குத்தாமல், சூழ்நிலைகளின் அழுத்தத்தை நடுநிலையோடு கையாண்டிருக்கும் இயக்குநர் எம்.ஜானகிராமன், காதல் என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல, அது ஒரு நீண்ட பயணம் என்பதை யதார்த்தமாக பேசி, பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

படத்தில் அத்தனை கதாபாத்திரங்களும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு

மொத்தத்தில் ஆங்கில டைட்டானிக் கவுந்தாலும் தமிழ் டைட்டானிக் கைகொடுக்கும்.
Previous Post

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ – முதல் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது!

Next Post

பிளாக் கோல்டு படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ் – ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் புதிய பயணம்!

Next Post

பிளாக் கோல்டு படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ் – ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் புதிய பயணம்!

Popular News

  • கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ – முதல் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns) டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!

November 15, 2026

தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு

November 15, 2026

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

November 15, 2026

கண்ணன் ரவி குழுமத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 15, 2026

ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye)!

November 15, 2026

ஃப்ளாக் (FLAG) – விமர்சனம்

November 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.