• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

by Tamil2daynews
November 18, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

 

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘’சிட்டுக்குறிஞ்சி’. ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களத்தில், இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் மாரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஹங்கேரியைச் சேர்ந்த புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவினரும் பங்களித்துள்ளனர். கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகளை உருவாக்கிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம், தயாரிப்பாளர்  டி. ஜூட் ஆனந்த், நடிகர்கள் ரஜித் சிஆர், ஆதவன், ஜி.எம். குமார், நக்ஷா சரண், ஸ்ரீராம் கார்த்திக், வெங்கடேஷ், வி.ஜே. பப்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆர்.வி. உதயகுமார் கலந்துகொண்டார்.

இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் பேசுகையில், தனது கல்லூரி நாட்களில் ‘இளங்கதிர்’ கையெழுத்துப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார். ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி தன்னை இயக்குவதாகக் குறிப்பிட்டார். பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 20 ஆண்டுகாலப் பயணம் பல்வேறு சவால்களும் போராட்டங்களும் நிறைந்ததாக இருந்ததாகத் தெரிவித்தார். படத்தின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், அந்தப் பயணத்தை ஊடகங்களின் ஆதரவுடன்தான் கடக்க முடியும் என்றும் கூறி, அனைவரின் பேராதரவையும் கேட்டுக்கொண்டார்.

நடிகர் தோழர் எல்.வி. ஆதவன் பேசுகையில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கடின உழைப்பைப் பாராட்டினார். ‘சிட்டுக்குறிஞ்சி’ என்ற அழகான தமிழ்ப் பெயரைப் படத்திற்குச் சூட்டியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். ஹங்கேரியைச் சேர்ந்த புடாபெஸ்ட் இசைக்குழுவின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாகத் தெரிவித்தார். கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய கிராமத்தையே உருவாக்கி, ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. உள்ளிட்ட படக்குழுவினர் மேற்கொண்ட பிரம்மாண்டமான பணிகளையும் பாராட்டினார். “வாத்தியாரால் மாணவர்களுக்குப் பெருமை இல்லை; மாணவரால்தான் வாத்தியாருக்குப் பெருமை” என்று குறிப்பிட்ட அவர், இப்படம் முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகியுள்ளதால் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. பேசுகையில், ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் காதல், ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் அம்சங்கள் நிறைந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். 1983 மற்றும் 2025 போன்ற காலக்கட்டங்களுடன் தொடர்புபடுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். படத்தின் திரைக்கதை அமைப்பு மிகவும் வித்தியாசமாக இருப்பதாகவும், படத்தொகுப்புப் பணிகளை மகேந்திரன் கணேசனும், இசைப் பணிகளை மாராவும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று கூறி, அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மூத்த நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், பெரிய திரைப்படங்களின் விளம்பரங்கள் எளிதில் மக்களைச் சென்றடையும் நிலையில், சிறிய திரைப்படங்களை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார். தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த் மற்றும் படக்குழுவினர் பல்வேறு சவால்களைக் கடந்து இப்படத்தை உருவாக்கியுள்ள தைரியத்தைப் பாராட்டினார். சிறிய திரைப்படங்களுக்கும் திரையரங்குகளில் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு, அவை வெற்றிகரமாக ஓடுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் டா ஜூட் அனந்த் ஆகியோரின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தார்.

படத்தொகுப்பாளர் மகேந்திரன் கணேசன் பேசுகையில், ‘யாத்திசை’ திரைப்படத்திற்குப் பிறகு தான் பணியாற்றியுள்ள திரைப்படம் ‘சிட்டுக்குறிஞ்சி’ என்று குறிப்பிட்டார். பிளாக் அண்ட் ஒயிட் ஸ்டுடியோ தனது குடும்பத்தைப் போன்றது என்று கூறிய அவர், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர்  டி. ஜூட் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களில் பயணிக்கும் ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதையாக, வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இசையமைப்பாளர் மாரா பேசுகையில், இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா போன்ற உலகப் புகழ்பெற்ற இசைக்குழுவுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய மற்றும் அரிய வாய்ப்பு என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். படக்குழுவினரின் கடின உழைப்பைப் பாராட்டிய அவர், இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடிகை நக்ஷா சரண் பேசுகையில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம்,  டி. ஜூட் ஆனந்த் மற்றும் தண்டபாணி பாஸ்கரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இசையமைப்பாளர் மாரா மற்றும் ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. ஆகியோரின் உழைப்பைப் பாராட்டினார். வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தயாரிப்பாளர்  டி. ஜூட் ஆனந்த்
பேசுகையில், இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கிய காலகட்டத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்தார். அந்தச் சூழலில் உதவியாக இருந்த ஏ.வி. சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. ராஜேஷ், அனகாபுத்தூர் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கே.எஸ். செந்தில் மற்றும் திரு. பீட்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரத்தின் கதையும், பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்துப் படமாக்கிய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று கண்டு ரசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர் ராஜித் பேசுகையில், இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘நினைத்தது யாரோ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனது பயணத்தை நினைவுகூர்ந்தார்.இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நேர்கோட்டில் நகரும் கதைக்களம் மீண்டும் மீண்டும் படத்தைப் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். படத்தின் இசை மற்றும் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளதாகப் பாராட்டிய அவர், இப்படத்தை உருவாக்குவதில் தயாரிப்பாளர் டா ஜூட் அனந்தின் ஆதரவு மிகவும் முக்கியமானதாக இருந்ததாகத் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், படத்தின் டிரெய்லரைப் பார்க்காததால் கதைக்களம் குறித்து முழுமையாகத் தனக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார். இருப்பினும், இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களைப் பாராட்டினார். பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸின் தேசியப் பொதுச்செயலாளர் சுபாஷைப் பாராட்டிப் பேசிய அவர், நாயகன் ரஜித் சிஆர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இணைந்து இப்படத்தைச் சிறப்பாக உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக்
பேசுகையில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் கூறிய இரண்டு மணி நேரக் கதை தங்களை வேறொரு உலகத்திற்கே அழைத்துச் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்ததால் இப்படத்தில் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து தயக்கம் இருந்ததாகவும், இருப்பினும் ரஜித் சிஆருக்காகவும், ஏற்கெனவே ‘மயிலாஞ்சி’ திரைப்படத்தில் தனக்கு நல்ல கதாபாத்திரம் வழங்கிய வி.ஜே. மீனாட்சி சுந்தரத்திற்காகவும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். புதுமையான கதைக்களம் அனைவரையும் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த் மற்றும் இசையமைப்பாளர் மாராவின் பணிகளைப் பாராட்டி, படத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வெங்கடேஷ்
பேசுகையில், விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இயக்குநர் குமார், ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோருக்கும், ஊடகத் துறையில் பல ஆண்டுகளாகத் தன்னுடன் பயணித்து வரும் ஆதவன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், ‘சிட்டுக்குறிஞ்சி’ என்ற தலைப்பு வித்தியாசமாக இருப்பதாகப் பாராட்டினார். ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார். ஊடகத்துறையினர் இப்படம் குறித்த நேர்மறையான கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, படத்தின் வெற்றிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடன அமைப்பாளர் தீனா
பேசுகையில், இப்படத்தின் இயக்குநர் திரைக்கதையை மூன்று முறை தனக்குச் சொன்னதாகவும், அந்த அளவுக்கு அதன் ஸ்கிரிப்ட் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் தெரிவித்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே மிகவும் எனர்ஜிட்டிக்காகவும் கிரேஸ்ஃபுல்லாகவும் வரவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஷான் ரோல்டன் இசையில் படத்தின் கிளைமாக்ஸ் பாடல் மிக அற்புதமாக வந்திருப்பதாகவும், அதைக் கேட்டு திரையரங்கில் பார்வையாளர்கள் அழுதுவிட்டதாகவும் தன் வியப்பை வெளிப்படுத்தினார். மேலும், இப்படத்தில் நக்ஷாவும் ரிஷி ப்ரோவும் மிகச் சிறப்பாகப் செய்திருப்பதாகப் பாராட்டிய அவர், இப்படத்தில் ஸ்ரீராம் பிரதர்ஸும் இணைந்து பணியாற்றியிருப்பதைச் சுட்டிக்காட்டி, இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று கூறி  ஆதரவையும் வேண்டியுள்ளார்.

இசையமைப்பாளர் தீனா பேசுகையில்,
தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த் அவர்கள் படத்தின் விஷுவல்ஸ், ஸ்டுடியோ ப்ராசஸ் மற்றும் DI போன்ற அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துகொண்டு, சென்னையில் ஒரு பிரம்மாண்டமான ஸ்டுடியோவையே கட்டிவிட்டு இப்படத்தைத் தயாரித்துள்ளதாகப் பாராட்டினார். தயாரிப்பாளருக்குப் படத்தின் வரவு-செலவு குறித்த முழுமையான கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்றும், இப்படத்தின் தயாரிப்பாளர் அந்த அடிப்படையைச் சரியாக உருவாக்கியுள்ளதால் இப்படம் எப்போதுமே நட்டமடையாது என்றும் குறிப்பிட்டார். மேலும், இப்படத்தில் முதல்முறையாக புகழ்பெற்ற ‘புத்தாபெஸ்ட் பில்ஹார்மோனிக் ஆர்ச்சஸ்ட்ரா’வை (Budapest Philharmonic Orchestra) பயன்படுத்தி மிகச் சிறந்த இசையைத் தந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழ் சினிமா இசைக் கலைஞர்களின் பங்கை எப்போது மறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

டி.எஸ்.ஆர். சுபாஷ் பேசுகையில், கோயம்புத்தூரில் இருந்து வருகை தந்த தனது குருநாதர் ஆர்.வி. உதயகுமார் சாருக்கு மரியாதை செலுத்தியதுடன், பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சோலுசன்ஸ் மற்றும் பிளாக் அண்ட் ஒயிட் ஸ்டுடியோஸ் (Black & White Studios) ஒரு அருமையான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வருவதைப் பாராட்டினார். இப்படத்தின் இயக்குநர் மீனாட்சி சுந்தரத்தையும், படக்குழுவினரையும் பாராட்டிய அவர், இப்படத்தின் பாடல்கள் கவிஞர் கண்ணதாசனின் வரிகளைப் போல காதலை மையமாகக் கொண்டு மிக ஆழமாகவும் வித்தியாசமான கோணத்திலும் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இப்படத்தின் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக வந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ் திரைப்படத் துறை மற்றும் சிறிய படங்களை ஆதரிக்க வேண்டும் என்றும், சிறிய படங்களுக்குத் திரையரங்குகளில் உரிய இடமும் முறையான காட்சியமைப்புகளும் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வி.ஜே. பப்பு பேசுகையில், மூத்த பத்திரிகையாளர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார். இப்படத்தில் மலையாள மொழியில் பேசி நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். படத்தில் நடித்துள்ள அனைவரின் நடிப்பும் மிகவும் இயல்பாகவும் உயிரோட்டமாகவும் இருக்கும் என்று தெரிவித்தார். ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்கும்போது கிடைக்கும் உணர்வை இப்படத்தைப் பார்க்கும்போதும் ரசிகர்கள் பெறுவார்கள் என்று குறிப்பிட்டார். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தை அனைவரும் பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தயாரிப்பாளர்  டி. ஜூட் ஆனந்த் பேசுகையில், படத்தின் கதை மற்றும் திரைக்கதை வித்தியாசமான முறையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தனர். பாடல்கள் மற்றும் நடனக் காட்சிகளை உற்சாகமாகவும் அழகாகவும் அமைக்கும் வகையில் நடன இயக்குநர் தீனா பணியாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டனர். ஜி.எம். குமார், மாரா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளதாகப் பாராட்டினர். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் இசை அரங்கில் இருந்தவர்களைக் கண்கலங்கச் செய்ததாகவும் தெரிவித்தனர். படத்தின் டீசரைப் பார்த்த ஸ்ரீராம் பிரதர்ஸ் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், வித்தியாசமான ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களம், பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள் மற்றும் புடாபெஸ்ட் இசைக்குழுவின் பங்களிப்பு ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

நடிகர்கள்

ராஜித் மேனன்
ஸ்ரீராம் கார்த்திக்
தீப்ஷிகா
நக்ஷா சரண்
VJ பப்பு
GM குமார்
தோழர் L.V. ஆதவன்
பூ ராமச்சந்திரன்
ஹலோ கந்தசாமி
தேனி முருகன்
சுஜாதா
கராத்தே ராஜா
வழக்கறிஞர் பாபு
ஈஸ்வர்பாபு
மஞ்சு

தொழில்நுட்பக் கலைஞர்கள்
எழுத்து மற்றும் இயக்கம்: VJ மீனாட்சி சுந்தரம்
தயாரிப்பு நிறுவனம்: பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ்
தயாரிப்பாளர்: டி. ஜூட் ஆனந்த்
இணைத் தயாரிப்பாளர்கள்: R. ராஜேஷ், Dr. K.S. செந்தில் (Sasiram Pictures), கடையனேந்தல் R.A. பீட்டர்
இசை: மாரா
ஒளிப்பதிவு: A. பிரான்சிஸ் ராஜ்குமார்
படத்தொகுப்பு: மகேந்திரன் கணேசன்
கலை இயக்கம்: ராம்ஜி
நடன அமைப்பு: தீனா
ஒலிப்பதிவு: டோனி J
சிறப்பு ஒலி விளைவுகள் (SFX): கிஷோர் காமராஜ்
ஃபோலி: தினேஷ் நாராயணன்
டப்பிங் பொறியாளர்: முகமது ரிஸ்வான்
VFX: R. ஜீவரத்தினம்
ஆடை வடிவமைப்பு: ஹரிவர்தினி
ஆடைப் பொறுப்பாளர்: S. P. சுகுமார்
ஒப்பனை: வேல்முருகன்
விளம்பர வடிவமைப்பு: தமிழ்ச்செழியன்
புகைப்படங்கள்: அஜய்
நிர்வாகத் தயாரிப்பாளர்: N. குழந்தைவேலு (Manju Cine Equipments)
லைன் புரொட்யூசர்: குருவேல் கார்த்திக்
தயாரிப்பு மேலாளர்: A V பழனிசாமி
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அகமது, பாரஸ் ரியாஸ்
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: A. S. பக்தீஸ்வரன், RJ முகமது ரஃபி மீரான், ஸ்ரீநிதி பக்தீஸ்வரன்

இதர விவரங்கள்
டிஜிட்டல் கூட்டாளர்கள்: Uyire Media, Infinity Plus Digital, Media Cinemax
ஆடியோ உரிமை: Saregama India Ltd. (RPSG Group)
விநியோகக் கூட்டாளர்: Shaalini Cine Creations

Previous Post

நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

Next Post

தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

Next Post

தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்... அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

November 18, 2026

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

November 18, 2026

தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

November 18, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

November 18, 2026

நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

November 18, 2026

துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு!

November 18, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.