• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு!

by Tamil2daynews
November 22, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு!

 

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு மோகன் ராஜன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ முதல் பாடல் தந்தை – மகன் உறவின் அன்பையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ பாடல் கணவன் – மனைவி இடையிலான காதலையும் ரொமான்ஸையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

மென்மையான இசையுடன் அழகான மெலடியாக உருவாகியுள்ள இப்பாடல், புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கு இடையிலான காதல், நெருக்கம், ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் அன்பு மற்றும் அவர்களுடைய அழகான இல்லற வாழ்க்கையைப் பேசுகிறது. கணவன் – மனைவி இடையிலான ரொமான்ஸ் மற்றும் அன்பான நெருக்கத்தையும் அழகிய காட்சிகளின் வழியாக வெளிப்படுத்தும் இப்பாடல், எந்தவித விரசமும் இல்லாமல் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கதையின் முக்கியமான திருப்பங்களையும் கதாபாத்திரங்களின் வாழ்க்கைப் பயணத்தையும் பாடலின் காட்சிகளுக்குள்ளேயே சொல்லியிருப்பது இதன் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.கதையின் முக்கியத் திருப்புமுனையாகவும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் தொகுப்பாகவும் இப்பாடல் அமைந்துள்ளது. லாரி ஓட்டுநராக இருக்கும் நாயகனுக்கும், சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாயகிக்கும் இடையே மலரும் காதலும், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கோயிலில் திருமணம் செய்துகொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்து வீட்டில் அவர்கள் தொடங்கும் புதிய வாழ்க்கையுமே இப்பாடலின் மையக்கருவாகும்.

புதுமணத் தம்பதிகளின் அன்றாட ரொமான்ஸ், கர்ப்பமடையும் மகிழ்ச்சியான தருணம் என அழகாக நகரும் அவர்களின் வாழ்க்கையில், நாயகியின் அம்மாவிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் ஏற்படுத்தும் மெல்லிய மாற்றங்களையும் இப்பாடல் சுவாரசியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. மேலும், படம் முடிவடைவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனம் மற்றும் OTT உரிமையை Zee5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் பாடல்  இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

https://www.youtube.com/watch?v=0l9VTSNSqV0
Previous Post

எனர்ஜெட்டிக் ஸ்டார் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RaPo23 திரைப்படத்தின் சுவாரஸ்யமான ப்ரீ-லுக் வெளியீடு – ‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ – விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியீடு!

Next Post

தேசிய விருது பெற்ற சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் – ரெடாக்டட் ஸ்டுடியோஸுடன் இணைந்து தெலுங்கு – தமிழில் உருவாகும் புதிய காதல் திரைப்படம்!

Next Post

தேசிய விருது பெற்ற சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் – ரெடாக்டட் ஸ்டுடியோஸுடன் இணைந்து தெலுங்கு - தமிழில் உருவாகும் புதிய காதல் திரைப்படம்!

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.