ஆக்டோபஸ் – விமர்சனம்
முற்றிலும் வித்தியாசமான பரபர திரைக்கதையுடன் ஓடிட்டியில் களம் இறங்கி இருக்கும் வெப் சீரிஸ்.
விழுப்புரம் ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு சிறிய குடியிருப்புதான் கதையின் மையம். ஐந்தாறு குடும்பங்கள் ஒற்றுமையாகவும் நெருக்கமாகவும் வாழும் அந்த இடத்துக்குப் புதிதாக ஒரு தம்பதி குடியேறுகின்றனர். அவர்களின் வருகைக்குப் பிறகு குடியிருப்பில் அடுத்தடுத்து எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன.
புதிதாக வந்த கணவன் தனது மனைவியைக் கட்டுப்படுத்துவதுடன், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்துகிறான். மற்றவர்களுடன் பேசிப் பழகுவதற்கும் தடைகள் விதிக்கிறான். இந்தச் சூழலில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் திடீரெனக் காணாமல் போகிறார். அவர் எங்கே சென்றார், அவருக்கு என்ன நடந்தது, இதற்குப் பின்னால் இருப்பது யார் என்ற கேள்விகளுடன் கதை நகர்கிறது.
திரில்லர் காட்சிகளுக்கு நடுவே இடம்பெறும் நீதிமன்றக் காட்சிகளும் நகைச்சுவை தருணங்களும் கதைக்கு வேறுபட்ட சுவையைச் சேர்க்கின்றன. பதற்றமான சூழலுக்கு இடையே வரும் நகைச்சுவை, தொடரின் நகர்வை ஒரே மாதிரியாக இல்லாமல் மாற்றுகிறது.
நடிப்பு, தொழில்நுட்பம் எப்படி?
கண்ணா ஆர்-இன் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகளும் இருள் சூழ்ந்த இடங்களும் மர்ம உணர்வை அதிகரிக்கின்றன. படத்தொகுப்பும் கதையின் வேகத்தைத் தக்கவைக்க உதவுகிறது.
சமீபமாக பார்த்த எவ்வளவு திரைப்படங்களில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் கதைகளத்தில் வந்த இந்த ஆக்டோபஸ் திரைக்கதை போல் எந்த படத்திலும் காணவில்லை என்பது உண்மை.








