• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

IFFI விழாவில் திரையிடப்பட்ட ‘கூடு- KOODU’ திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

by Tamil2daynews
November 29, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
IFFI விழாவில் திரையிடப்பட்ட ‘கூடு- KOODU’  திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

ஆனந்தக் கண்ணீர் – ஆரவாரமான கரவொலி- இருக்கையில் எழுந்து நின்று வழங்கப்பட்ட படைப்பிற்கான கௌரவம்  – என IFFI விழாவில் பிரம்மாண்டமான பாராட்டுகளை குவித்த’ கூடு- KOODU’

கோவா : சில திரைப்படங்கள் பாராட்டுகளைப் பெறுகின்றன. ஆனால் சில திரைப்படங்கள் ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகவே மாறுகின்றன. அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கிய ‘கூடு- KOODU’ எனும் தமிழ் திரைப்படம் இதில் இரண்டாவது வகையை சார்ந்தது.

பிரம்மாண்டமான 57வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‘காலா பிரீமியர்- Gala Premiere பிரிவில் கூடு – KOODU எனும் தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்தப் பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்ட ஒரே தமிழ் திரைப்படம் இது என்பதும் கவனிக்கத்தக்கது. இப்படத்தின் திரையிடல் நிறைவடைந்த பிறகு அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் விண்ணதிர கரவொலியை எழுப்பினர். புன்னகைகளாலும், கண்ணீராலும், தங்களுடைய மனப்பூர்வமான உரையாடல்களாலும்.. அந்த அரங்கத்தை கடலைப் போல் மாற்றினர்.

இது வழக்கமான ஒரு திரைப்பட விழா காட்சியை விட முற்றிலும் மாறுபட்ட நிகழ்வாக அங்கு அரங்கேறியது. அங்கு கூடியிருந்தவர்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள்- சினிமா ஆர்வலர்கள்- மட்டுமல்ல பிரதிநிதிகள் -அவர்களது குடும்பங்கள்- மாணவர்கள்- திரையுலக வல்லுநர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அந்த திரைப்படத்தை பார்த்து ரசித்து அனுபவித்தனர்.

அரங்கம் முழுவதும் சிரிப்பொலிகள் எதிரொலித்தன. உணர்ச்சிகரமான காட்சிகள் திரையில் தோன்றிய போது அரங்கம் முழு அமைதியில் உறைந்தது. படம் அதன் நெகிழ்ச்சியான இறுதி கட்டத்தை எட்டிய போது பல பார்வையாளர்கள் தங்கள் கண்களில் இருந்து வழிந்தோடிய கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தனர். திரையில் படக் குழுவினரின் பெயர்கள் தோன்றத் தொடங்கியதும்.. அந்த அமைதி கலைந்து பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பி, தங்களது அன்பையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

திரையரங்கின் மின் விளக்குகள் ஒளிர தொடங்கிய பிறகு அந்த பாராட்டு மழையும்.. உற்சாகமும்.. கொஞ்சமும் குறையவில்லை. பார்வையாளர்கள் படக்குழுவினரை சூழ்ந்து கொண்டு தங்களுக்கு பிடித்த காட்சிகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். படம் தங்களை எந்த அளவிற்கு ஆழமாக பாதிப்பினை ஏற்படுத்தியது என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினர். இந்த ஆண்டு திரைப்பட விழாவிலேயே மிகவும் மன நிறைவை தந்த அனுபவங்களில் ஒன்றாக ‘கூடு ‘ திரைப்படத்தை குறிப்பிடுவோர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது.

அந்த மாலைப் பொழுது… பார்வையாளர்களுக்கும் படக் குழுவினருக்கும் இடையேயான விறுவிறுப்பான கலந்துரையாடலுடன் நிறைவு பெற்றது.

கதையின் ஊற்றுக்கண்ணாக அமைந்த நிஜ வாழ்க்கை சம்பவம் – படப்பிடிப்பு அனுபவங்கள் – படத்தில் இடம்பெற்ற கிராமம் – பறவைகள்-  நடிகர்களின் பங்களிப்பு மற்றும் இவ்வளவு தனித்துவமான அதேசமயம் அனைவரிடமும் ஒன்றிணைய கூடிய ஒரு கதையை திரையில் கொண்டு வருவதில் இருந்த சவால்கள்-  என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

திரையிடலுக்குப் பிந்தைய உரையாடல்களில் இது மிகவும் ஈடுப்பாட்டுடன் கூடிய நிகழ்வாகவும் அமைந்தது. பார்வையாளர்கள் அந்த மாலை பொழுது முடிவடைவதையே விரும்பாத அளவிற்கு மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்து உரையாடினர். சமூக வீரத்தின் வியக்கத்தக்க உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘கூடு’ – அரிய வகை பறவைகளின் கூடுகளை பாதுகாப்பதற்காக.. ஒரு முழு கிராமமே 35 நாட்களுக்கு மின்சாரம் இன்றி வாழ முன்வரும் ஒரு உன்னதமான கதையை சொல்கிறது. கருணை- தியாகம்- சுகவாழ்வு – ஆகியவற்றின் வேர்களைக் கொண்ட இத்திரைப்படம்… சாதாரண மனிதர்கள் ஒரு அசாதாரணமான நோக்கத்திற்காக ஒன்றிணையும் போது… மனிதாபிமானம் எவ்வளவு பிரகாசமாக ஒளிர்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

இது தொடர்பாக இயக்குநர் ஜோயல் விஜய் பேசுகையில்

”திரைப்பட இயக்குநர்களாகிய நாங்கள் எப்போதும் மக்களுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தவே விரும்புகிறோம். ஆனால் இந்திய சர்வதேச திரைப்பட விழா நிகழ்வில் நடந்தவை, எங்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தின. அந்நியர்கள் ஒன்றாக சிரிப்பதையும், கண்ணீர் விடுவதையும், படம் முடிந்த பிறகும் அங்கேயே இருந்து அதைப்பற்றி உரையாடுவதையும், காண்பது நாங்கள் பெற்ற மிகப்பெரிய பரிசாகும். இந்த வரவேற்பு – எங்கள் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், மேலும் ‘கூடு’ திரைப்படத்திற்கு ஊக்கமளித்த அந்த அற்புதமான நிஜ வாழ்க்கை சமூகத்திற்கும் உரியது” என்றார்.
பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின்‌ தலைவர் – தயாரிப்பாளர்  குமார் மங்கட் பதக்  பேசுகையில்

”மொழி மற்றும் நிலவியல் எல்லைகளைக் கடந்து மக்களை உணர்வு பூர்வமாக ஈர்க்கும் போது தான் சினிமா அதன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் மிகப் பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றில் பார்வையாளர்கள் ‘கூடு’ திரைப்படத்திற்கு இவ்வளவு உண்மையான உணர்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தது… எமக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. நேர்மையான கதைகள் எப்போதும் தமக்கான பார்வையாளர்களை சென்றடையும் என்ற எங்கள் நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்றார்.

பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் – தயாரிப்பாளர் அபிஷேக் பதக் பேசுகையில்,

”IFFI விழாவில் கிடைத்த வரவேற்பு அபாரமானது. பார்வையாளர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பியதும், அவர்களின் உணர்ச்சிகரமான எதிர்வினைகளும், திரையிடலுக்கு பிறகு நடைபெற்ற உரையாடல்களும், ‘கூடு’ திரைப்படம் அனைவரையும் சென்றடைந்ததற்கான சிறந்த சான்றாகும். மனிதாபிமானத்தை இவ்வளவு அழகாகவும்… சுவராசியமாகவும்… கொண்டாடும் ஒரு திரைப்படத்தை நாங்கள் உருவாக்கியதில் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் எம் கணேஷ் பேசுகையில்,

”இந்த கதையை முதலில் கேட்ட போதே இது மிகப்பெரிய மேடையில் சொல்லப்பட வேண்டிய கதை என்று நாங்கள் நம்பினோம். பார்வையாளர்கள் ‘கூடு’ திரைப்படத்தை சிரிப்பு – கண்ணீர் மற்றும் கைத்தட்டல்களுடன் வரவேற்றதை கண்டபோது, இந்தப் பயணத்தில் நாங்கள் சந்தித்த அனைத்து சவால்களும் அர்த்தமுள்ளதாக மாறின. இப்படத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் இது ஒரு பெருமைக்குரிய தருணமாகும் ”என்றார்.

தயாரிப்பாளர் ஆதித்யா ஜோஷி பேசுகையில்,

”எங்களைப் பொறுத்தவரை ‘கூடு’ என்பது- சாதாரண ஒரு திரைப்பட மட்டுமல்ல. இந்த சமூகத்தில் இன்றும் நிலைத்திருக்கும் நற்பண்புகளைக் கொண்டாடும் ஒரு முயற்சி. தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் உருவான இந்தக் கதையுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பார்வையாளர்கள் இவ்வளவு ஆழமாக ஒன்றிணைந்ததை காணும் போது.. மிகுந்த உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. இது போன்ற தருணங்களே நாங்கள் ஏன் கதைகளை சொல்பவர்களாக மாறினோம் என்பதை மீண்டும் நினைவூட்டுகின்றன. IFFI விழாவில் கிடைத்த இந்த வரவேற்பு நாங்கள் எப்போதும் போற்றி நினைவு கூறும் ஒரு தருணமாக இருக்கும்” என்றார்.

பனோரமா ஸ்டுடியோஸ்- ஸ்கை முன் என்டர்டெய்ன்மென்ட் – கல்ட் டிஜிட்டல்- ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான ‘கூடு’ திரைப்படம் – திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வலிமையான வரவேற்பை பெற்று வருகிறது. இதன் IFFI விழாவின் ‘காலா பிரிமியர்’ நிகழ்வின் திரையிடலில் …கலாச்சாரத்தில் வேரூன்றிய மனதைத் தொடும் கதைகள் எல்லா மொழி மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த திரைப்படத்தை ஸ்கைமூன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனத்துடன் இணைந்து பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.

தயாரிப்பாளர்கள்:

குமார் மங்கட் பதக் – அபிஷேக் பதக் – எம். கணேஷ்- சுனில் ஜெயின் – ஆதித்யா ஜோஷி-  லிஷா பி. சந்திரன்

இணை தயாரிப்பாளர் :

ராஜேஷ் மேனன்

கிரியேட்டிவ் புரொடியூசர் :

அபிநவ் மெஹ்ரோத்ரா

எழுத்து & இயக்கம் : ஜோயல் விஜய்

இசை : மனோஜ் கிருஷ்ணா
Previous Post

பேசில் ஜோசப்- LK அக்ஷய் குமார் இணைந்து மிரட்டும் ‘ராவடி- Raawadi ‘ படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு

Next Post

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தின் ‘டிரெயின் ஆன் வீல்ஸ்’ விளம்பரப் பயணம் தொடக்கம்! டிசம்பர் 4-ம் தேதி ரிலீஸ்!

Next Post

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தின் ‘டிரெயின் ஆன் வீல்ஸ்’ விளம்பரப் பயணம் தொடக்கம்! டிசம்பர் 4-ம் தேதி ரிலீஸ்!

Popular News

  • சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நடன அசைவுகளை துல்லியமாக ஆடுவதை விட அதை ரசித்து ஆடுவேன்’ – சாய் பல்லவி

    0 shares
    Share 0 Tweet 0
  • IFFI விழாவில் திரையிடப்பட்ட ‘கூடு- KOODU’ திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தின் ‘டிரெயின் ஆன் வீல்ஸ்’ விளம்பரப் பயணம் தொடக்கம்! டிசம்பர் 4-ம் தேதி ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்திகேயன் சந்தானம், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணியில் உருவாகும் ‘மேயாத மான் 2’

November 29, 2026

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தின் ‘டிரெயின் ஆன் வீல்ஸ்’ விளம்பரப் பயணம் தொடக்கம்! டிசம்பர் 4-ம் தேதி ரிலீஸ்!

November 29, 2026

IFFI விழாவில் திரையிடப்பட்ட ‘கூடு- KOODU’ திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

November 29, 2026

பேசில் ஜோசப்- LK அக்ஷய் குமார் இணைந்து மிரட்டும் ‘ராவடி- Raawadi ‘ படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு

November 29, 2026

இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைக் காணிக்கை: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பின்னணியிலான திரைப்படம் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்

November 29, 2026

மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் ரசிகர்களுக்காகக் களமிறங்கும் மலையாளத் திரைப்படங்கள்!

November 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.