• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடிய இயக்குநர் பா.இரஞ்சித்*

by Tamil2daynews
January 2, 2020
in சினிமா செய்திகள்
0
*புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடிய இயக்குநர் பா.இரஞ்சித்*
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ்த்திரை உலகைப் பொறுத்தவரையில் இயக்குநர் பா.இரஞ்சித் முற்றிலும் மாறுபட்டவர். பொழுதுபோக்கிற்காக சினிமா என்பதைத் தாண்டி, மக்களை சிந்திக்க வைப்பதே சினிமா என்று பயணிப்பவர். சமூக அடுக்குகளையும், முரண்களையும் தன் படைப்புகளின் மைய உரையாடலாக எப்போதும் கையாள்பவர்.
“நீலம் பண்பாட்டு மையம்”, ” தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “கூகை திரைப்பட இயக்கம்” என சமூக சமத்துவத்தை நோக்கமாக கொண்டு அவர் உருவாக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
புத்தாண்டு மற்றும் பீம்கோரேகான் நாளான ஜனவரி முதல் நாளில், ஓசூர் மற்றும் அதனையொட்டி உள்ள கர்நாடகா பகுதிகளில் இயக்குநர் பா.இரஞ்சித் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு “நீலம் பண்பாட்டு மையம்” ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ள “அம்பேத்கர் அரசியல் பள்ளி”,  “சட்ட ஆலோசனை மையம்”, “விளையாட்டு மற்றும் கலைத்திறமைகள் பயிற்சி பள்ளிகள்”, “அம்பேத்கர் நூலகங்கள்”, “வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்குவோர் ஆலோசனை மையம்” போன்றவற்றை துவக்கி வைத்தார்.
வெவ்வேறு கிராமங்களில் நடந்த இந்நிகழ்வுகளில் இயக்குநர் பா.இரஞ்சித் முக்கியமாக முன்வைத்து பேசியதவாது,
“இந்தியாவில் மதத்தாலும், சாதியாலும் மக்களை பிரித்தாளுகிற சூழ்ச்சியானது நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே போகிறது. இந்த சூழலில் நமக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடியது புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் தான். அம்பேத்கர் தான் ஒளி. அவரை பின்பற்றினால் மட்டுமே நமக்கான விடுதலை சாத்தியம். நமக்குள் இருக்கிற முரண்களை களைந்துவிட்டு, நாம் எல்லோரும் ஓரணியில் திரண்டாக வேண்டிய மிகமுக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். எனவே தான் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் இவற்றையெல்லாம் செய்கிறோம். விரைவில் தமிழகம் முழுவதும் இதுபோல முன்னெடுப்புகளை செய்யவிருக்கிறோம். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பீம்கோரேகான் நாள் வாழ்த்துகள்” என்றார்.
இந்நிகழ்வுகளில் கர்நாடக   மற்றும் தமிழக அரசியல் ஆளுமைகள் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பயணத்தின் போது பா.இரஞ்சித் திறந்து வைத்த “Jaibheem Law Clinic” இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாதது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: PA Ranjith
Previous Post

“கோஸ்ட் ஸ்டோரிஸ்” படத்திற்காக வாழ்த்து மழையில் நனையும் ஜான்வி கபூர்! 

Next Post

தமிழில் கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள்

Next Post
தமிழில் கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள்

தமிழில் கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள்

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.