• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

1000 வருடத்திற்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் – ரகசியத்தை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்!

by Tamil2daynews
October 17, 2021
in சினிமா செய்திகள்
0
1000 வருடத்திற்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் – ரகசியத்தை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்!
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp


கோலிவுட்டில் அறிமுக இயக்குநர்கள் பலர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள். இதற்கு காரணம், அவர்கள்
கையாளும் கதைக்களமும் அதை திரைப்படமாக கொடுக்கும் விதமும் தான். அந்த வரிசையில் விரைவில் இடம் பிடிக்கப்
போகிறார் ஜி.வி.பெருமாள் வரதன்.

‘மரகத நாணயம்’ , ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’
படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை
சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

 

வரலாற்று சம்பவத்தை மையப்படுத்திய சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் நகைச்சுவையை சேர்த்து இவர் எழுதியிருக்கும்
திரைக்கதையை கேட்ட பல பிரபலங்கள், படம் நிச்சயம் வெற்றி பெறும், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதால், இப்படக்குழு
பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதனிடம் கேட்ட போது, “பல்லவ மன்னர்களில் முக்கியமமானவர் நந்தி வர்மன்.
அவரைப் பற்றிய உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறேன். இதில், 75
சதவீதம் உண்மையும், 25 சதவீதம் கற்பனையும் இருக்கும்.

1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நந்தி வர்மன், சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில்
அவர் வாழ்ந்த அந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது. அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல்
பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதால், தற்போது அந்த ஊரில் வசிக்கும் மக்கள் 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு
வெளியே வர மாட்டார்கள்.

இதற்கிடையே, அந்த ஊரில் புதைந்த நந்தி வர்மனின் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தொல்லியல்துறையினர் வருகிறார்கள்.
அவர்களும் ஒருவர் ஒருவராக மர்மமாண முறையில் மரணம் அடைகிறார்கள். அதன் பின்னணி என்ன என்பதை,
சுவாரஸ்யமான வரலாற்று கதையுடன், சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்லப்போகிறோம். என் கதையை கேட்டு பலர்
பாராட்டி வருகிறார்கள். படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். படத்தில் இடம்பெறும் நகைச்சுவை
காட்சிகளும் ரசிகர்களை கவரும். ‘மரகத நாணயம்’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய படங்களை ஒன்று சேர்த்தால்
எப்படிப்பட்ட உணர்வு இருக்குமோ, அப்படிப்பட்ட உணர்வை என் படம் கொடுக்கும்.” என்றார்.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்களையும், அடாவடித்தனத்தை வெளிக்காட்டும்
கதாப்பாத்திரத்தில் நடித்த சுரேஷ் ரவி, இப்படத்தில் காவல்துறையின் பெருமையையும், அவர்களுடைய நேர்மையையும்
வெளிக்காட்டும் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷா கவுடா நடிக்கிறார்.

நிழல்கல் ரவி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை – கோதண்டம், மீசை
ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன்,  ஜே.எஸ்.கே கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். கிருஷ்ண மூர்த்தி
ஒளிப்பதிவு செய்ய, மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, முனிராஜ் கலையை
நிர்மாணிக்கிறார். நடன காட்சிகளை சந்தோஷ் வடிவமைக்கிறார்.

சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிஞ்சி, செஞ்சி ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று
பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ராம்குமார், ரவிகுமார், விருமாண்டி, கெளதம், மோகன்.ஜி, ’மான்ஸ்டர்’ நெல்சன், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர்கள் கோகுல் பெனாய், பி.வி.சங்கர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன், சுரேஷ் ரவி, தயாரிப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

Previous Post

ராணா புரொடக்‌ஷன்ஸ் விஷால் நடிக்க, ஐந்து மொழிகளில் “லத்தி” .

Next Post

83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் ” அஸ்திவாரம்”

Next Post
83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் ” அஸ்திவாரம்”

83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் " அஸ்திவாரம்"

Popular News

  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சிங்கம் புலி!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் ஆட்சி செய்வது ஏன்..?

    0 shares
    Share 0 Tweet 0
  • L G M – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அதர்வா வின் புதிய பட பூஜை..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.