ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட்

by Tamil2daynews
April 17, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட்

படத்தின் தொடக்க விழா அன்று வெளியிடப்பட்ட டைட்டில் மற்றும் ப்ரி லுக் போஸ்டர்கள் மூலமே பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள ‘டைகர் நாகேஷ்வரராவ்’படத்துக்கு ரூ.7 கோடியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது.

மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படமான ‘டைகர் நாகேஷ்வரராவ்’ படத்தை வம்சி இயக்கவுள்ளார். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் கனவுப்படமான இதை அவரது அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் பிரி புரடக்‌ஷன் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ள நிலையில் 70 களில் இருந்த ஸ்டூவர்ட்புரம் கிராமத்தை சித்தரிக்கும் வகையில் ரூ 7 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது.. 70 களீல் மிகவும் அறியப்பட்ட, ஸ்டூவர்ட்புரத்தைச் சேர்ந்த பிரபல திருடனான டைகர் நாகேஷ்வரராவின் வாழ்க்கைச் சித்திரமே இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாநதி, ஜெர்சி, எவரு, ஷியாம் சிங்க ராய் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களுக்கு முன்பு பணியாற்றிய தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா, 70களில் ஸ்டூவர்ட்புரத்தை சித்தரிக்கும் அந்த  பிரம்மாண்டமான செட் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டு வருகிறார். 7 கோடி மதிப்பிலான அந்த செட் ஷம்ஷாபாத் அருகே 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது.

இப்படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் ரவி தேஜாவின் உடல்மொழி, வசன உச்சரிப்பு, அவரது தோற்றம் ஆகியவை முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும். அவர் முன்னெப்போதும் இதுபோன்ற பாத்திரத்தில் நடித்ததில்லை என்பதால் கூடுதல் ஆர்வத்துடன் காத்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது.

ஆர் மதி ஐ.எஸ்.சி ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளர். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

நடிகர்கள்: ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர்
எழுத்தாளர், இயக்குனர்: வம்சி
தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால்
பேனர்: அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால்
இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா
வசனங்கள்: ஸ்ரீகாந்த் விசா
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்
DOP: ஆர் மதி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
Previous Post

நியூயார்க் திரைப்பட விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படம்..!

Next Post

பீஸ்ட் படத்தில் காவியை கிழித்துக்கொண்டு ஹீரோ வருவது போல நாங்கள் எந்த மதத்தையும் கிழிப்பதற்கு வரவில்லை. ; அர்ஜுன் சம்பத்

Next Post

பீஸ்ட் படத்தில் காவியை கிழித்துக்கொண்டு ஹீரோ வருவது போல நாங்கள் எந்த மதத்தையும் கிழிப்பதற்கு வரவில்லை. ; அர்ஜுன் சம்பத்

Popular News

  • இரண்டு பாகங்களாக தயாராகும் “பொன்னியின் செல்வன்” ..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்து கவுரவித்த தளபதி விஜய் மக்கள் இயக்கம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

July 6, 2022

பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்து கவுரவித்த தளபதி விஜய் மக்கள் இயக்கம்

July 6, 2022

பன்னிக்குட்டி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

July 6, 2022

தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

July 5, 2022

உலக அங்கீகாரத்தின் ஆரம்பத்தில் “இரவின் நிழல்” ..!

July 5, 2022

தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

July 5, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.