• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கெளதம் கார்த்தியின் புதிய பட அறிவிப்பு..!

by Tamil2daynews
November 2, 2020
in சினிமா செய்திகள்
0
கெளதம் கார்த்தியின் புதிய பட அறிவிப்பு..!
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Positive Print Studios LLP நிறுவனம் தாயாரிக்கும் “தயாரிப்பு எண் 2”,  கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகிறது !
தங்கள் தயாரிப்பில்  ஒரு இயக்குநரின் படம் வெளியாகும் முன்னரே, அவரை புதிய படத்திற்கும்  ஒரு தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்வது, தமிழ் சினிமாவில்  அரிதாக நிகழும் சம்பவம். Positive Print Studios LLP நிறுவன தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார் இருவரும், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தின் இறுதி வடிவத்தை பார்த்து, வியந்து, அவரை தங்களது அடுத்த,  புதிய படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இந்த புதிய படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.
Positive Print Studios LLP நிறுவன தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார்  இது குறித்து கூறியதாவது…
 எங்கள் மனதை கவர்ந்த இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் உடன்  மேலும் ஒரு புதிய படத்தில் இணைவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அவருடைய இயக்கத்தில்  நாங்கள் தயாரித்த முதல் படம், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவான  “பிளான் பண்ணி பண்ணனும்” எங்களுக்கு மிகப்பெரும் திருப்தியை தந்துள்ளது. “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தின் இறுதி வடிவம்  ஒரு தயாரிப்பாளாரக எங்கள் எதிர்பார்ப்பை பலமடங்கு பூர்த்தி செய்து, பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. உலகளாவிய வகையில் அனைத்து ரசிகர்களையும் இப்படம் கண்டிப்பாக கவரும். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் தன்மை கொண்ட, மற்றுமொரு அட்டகாசமான திரைக்கதையுடன் அவர் எங்களை அனுகியபோது,  உடனடியாக அவருடன் மீண்டும் இணைந்து பணிபுரிய ஒப்புக்கொண்டோம். எந்தவகையான கதாப்பாத்திரத்திலும் கலக்கும் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் இப்படத்தில் இணைந்திருப்பது மெலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்படம் இதுவரை அவர் திரைவாழ்வில் செய்திராத,  முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரத்தில் அவரை காட்டும் படமாக இருக்கும்.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது….
முதலில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெரும் ஆதரவாக இருந்து, புதிய படத்தை துவக்கவும் காரணமாக இருக்கும் தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.  இருவரும் எனது புதிய  திரைக்கதையால் கவரப்பட்டார்கள். இந்த கடினமான சூழல் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் கடும் பிரச்சனைகளை தந்து வருகிறது என்பதால் படத்தின் பட்ஜெட்டை மாற்றியமைக்கும் எண்ணத்தில் இருந்தேன், ஆனால் இருவருமே அதை மறுத்து, திரைக்கதை கேட்பதை அப்படியே எடுப்போம். இறுதி வடிவமே முக்கியம் என்றார்கள். சினிமா மீதான அவர்களின் காதலும், என் மீதும் திரைக்கதை மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் எனக்கு பெரும் மகிழ்வை தந்தது. அவர்களுக்கு நான் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இளமை நாயகனாகவும் திறமை வாய்ந்த நடிகராகவும் கலக்கி வரும் கௌதம் கார்த்திக்குடன் இப்படத்தில் இணைந்த்திருப்பது பெரும் மகிழ்ச்சி.
தற்போதைய நிலையில் “தயாரிப்பு எண் 2” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது. 2021 மார்ச் மாதம் படத்தின் பணிகளை  முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் நடிகர்கள் குழு பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக மிகவிரைவில் வெளியிடப்படும்.
Previous Post

பாக்கியராஜின் சிஷ்யர் இயக்கிய “அல்வா” 

Next Post

ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் ! 

Next Post
ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் ! 

ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் ! 

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.