• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு

by Tamil2daynews
October 20, 2020
in சினிமா செய்திகள்
0
கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் ” பேய்மாமா “

இந்த படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா,ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு             –          MV.பன்னீர்செல்வம்.Bsc.D.F.Tech

இசை                             –          ராஜ் ஆர்யன்

கலை                            –            R.ஜனார்த்தனன்

எடிட்டிங்                     –            பிரீத்தம்

வசனம்                        –            சாய் ராஜகோபால்

ஸ்டண்ட்                   –            தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ்

நடனம்                         –            நோபல்

பாடல்கள்                                  –          ஷக்தி சிதம்பரம், ஏக்நாத்

தயாரிப்பு மேற்பார்வை  – ஷங்கர்.ஜி

மக்கள் தொடர்பு  – மௌனம் ரவி – மணவை புவன்

தயாரிப்பு –     விக்னேஷ் ஏலப்பன்

கதை, திரைக்கதை, இயக்கம் –  ஷக்தி சிதம்பரம்

படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது..

வடிவேலுவை இரட்டை வேடங்களில் நடிக்க வெச்சு இந்த படத்தை எடுக்கலாம் என்று முதலில் யோசித்திருந்தேன். சில பல காரணங்களால் அது நடக்கவில்லை. அப்போதான் இம்சை அரசன் படத்தில் வடிவேலுவுக்கு பதில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக செய்தி வந்தது ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை, ஆனால் அந்த செய்தி மூலமாக நாம ஏன் யோகிபாபுவை இந்த படத்தில் நடிக்க வைக்க கூடாதுன்னு தோணுச்சு அவரிடம் பேசினேன், இது வடிவேலுவுக்கு பண்ணின கதை’ன்னு  சொன்னதும் முதலில் தயங்கினார் பிறகு ஓகே சொல்லிவிட்டார்.

இந்த படத்தில் யோகிபாபு ஒரு பிக் பாக்கெட் அடிக்கிறவர். அவரோட வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்கள் தான் படம். இதில் கொரோனா மாதிரி ஒரு விஷயமும் இருக்கு.வெளிநாட்டு மருத்துவக் கம்பெனியுடன் சேர்ந்துக்கிட்டு இங்கே இருக்குற ஒருசிலர் ஒரு வைரஸை மக்களிடையே பரப்புகிறார்கள். அந்த வைரஸுக்கான மருந்தும் அவர்களிடம் இருக்கும். ஆனால் அதை உடனே வெளியிடாமல் நோய் அதிகமாக பரவவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தலைமுறை தலைமுறையாக சித்த மருத்துவ சேவையை செய்கின்ற குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர் அந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார். இதை அறிந்த அந்த வெளிநாட்டு மருத்துவக்குழு அந்த சித்த மருத்துவக் குடும்ப்பதையே கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களது ஆவி யோகிபாபுவுடன் சேர்ந்து எதிரிகளை பழிவாங்கி எப்படி மக்களை வைரஸிலிருந்து காப்பாற்றினார்கள், என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு 2019 நவம்பர் மாதத்திலேயே  முடித்துவிட்டோம். ஆனால் பிப்ரவரி, மார்ச்சில் தான் கொரோனாவே வந்துச்சு, இப்போ இருக்கிற நிலைமையும் எங்கள் கதைக்களமும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. படம் நிச்சயமாக படம் ( OTT  ) ஒன்லி தியேட்டர் தான்  என்கிறார் ஷக்திசிதம்பரம்.

Previous Post

அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான் பேய்மாமா இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு

Next Post

Ravi Teja, Ramesh Varma, Satyanarayana Koneru’s Khiladi First Look Unveiled

Next Post
Ravi Teja, Ramesh Varma, Satyanarayana Koneru’s Khiladi First Look Unveiled

Ravi Teja, Ramesh Varma, Satyanarayana Koneru’s Khiladi First Look Unveiled

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.