• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும்   – வாணி போஜன் ! 

Actress Vani Bhojan on Oh My Kadavule

by Tamil2daynews
February 11, 2020
in சினிமா செய்திகள்
0
“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும்   – வாணி போஜன் ! 
0
SHARES
100
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சின்னத்திரை மூலம் கோடிக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற நடிகை வாணி போஜன் “ஓ மை கடவுளே” படம் வழியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். அவரின் பங்களிப்பு “ஓ மை கடவுளே” படத்தின்  பெரும் பலமாக மாறியிருக்கிறது. ரசிகர்கள் அவரை பெரிய திரையில் காண பெரும் ஆவலுடன் உள்ளனர்.

படம் குறித்து நடிகை வாணி போஜன் கூறியதாவது….

“ஓ மை கடவுளே” என்னென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான  படமாக இருக்கும். பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தெர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறேன். தெலுங்கில் ஒரு மிகப்பெரும் ஹிட் அறிமுகத்துக்கு பிறகு தமிழில் ஒரு அற்புதமான வாய்ப்பாக,  எனக்கு மிகப்பரும் ஆசிர்வாதமாக  “ஓ மை கடவுளே” படம் அமைந்திருக்கிறது. காதல் கதைகளுக்கென்றே ஒரு வடிவம் இருக்கும் ஆனால் இயக்குநர் அஷ்வத் அதில் ஃபேண்டஸி தன்மையை புகுத்தி படத்தை மேலும் வெகு அழகாக மாற்றிவிட்டார். மேலும் இப்படம் பேசும் தார்மீக தத்துவ நியாயங்கள் எனை இப்படம் நோக்கி வெகுவாக ஈர்த்தது.

இப்படம் புதிதாக காதலிக்கும் இளைஞர்கள், காதலில் வெகு காலம் பயணம் செய்பவர்கள், காதல் தம்பதியர் என அனைவருக்கும் வாழ்வுன் பார்வையை மாற்றித்தரும் பெரு விருந்தாக அமையும். அசோக் செல்வனின் மிகச்சிறந்த,  அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு இப்படத்திற்கு பிறகு வெகுவாக பேசப்படும். இப்படத்திற்கு பிறகு அவர் பெரும் உயரங்களுக்கு செல்வார். ரித்திகா சிங்கின் துடிப்பான நடிப்பு அவரை அனைவர் மனங்களிலும்  குடியிருக்க செய்யும். இப்படத்தில் சாரா அற்புதமான பங்கை அளித்துள்ளார். அவரது காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பு இதுவரையிலான அவரது அடையாளத்தையே மாற்றிவிடும் என்றார்.

குறும்படங்கள் மூலம் கவனம் வென்ற இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே படத்தை இயக்கியுள்ளார்.
2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

அசோக்செல்வன் நாயகனாக நடிக்க ரித்திகா சிங் நாயகியாக நடித்துள்ளார்.
வாணி போஜன், M S பாஸ்கர், சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு  – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

Tags: Oh My KadavuleVani Bhojanஓ மை கடவுளேவாணி போஜன்
Previous Post

Server Sundaram – Kannaal Modhadhey Video Song

Next Post

Marijuana Movie – Orey Oru Dhaba Video

Next Post
Marijuana Movie –  Orey Oru Dhaba Video

Marijuana Movie - Orey Oru Dhaba Video

Popular News

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இம்மார்ட்டல் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.