• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரை நட்சத்திரங்கள் 6 பேர் வெளியிட்ட ‘AGP’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

by Tamil2daynews
October 12, 2021
in சினிமா செய்திகள்
0
திரை நட்சத்திரங்கள் 6 பேர் வெளியிட்ட  ‘AGP’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்!
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகை லட்சுமி மேனன் இதுவரை ஒரு வணிகரீதியிலான கதாநாயகியாகப் படங்களில் வலம் வந்தவர். இப்போது புதிய பாத்திரங்களில் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். வித்தியாசமான சவாலான இதுவரை ஏற்றிராத ,யாரும் கற்பனை செய்ய முடியாத மாதிரியான கதாபாத்திரங்களுடன் கதை சொல்பவர்களுக்கு முன்னுரிமை தருகிறார் .அவ்வகையில்  கதையும் பாத்திரமும் கவர்ந்து நடிக்கும் தமிழ்ப்படம்தான் ‘ஏஜிபி’.
இதில்  ஸ்கீசஃப்ரீனியா (Schizophrenia) என்கிற மனச்சிக்கல் கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.அது என்ன ஸ்கிசஃப்ரீனியா ?
கற்பனை உலகையும் மெய்யான உலகையும் ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதலும், பெரும்பாலும் விசித்திரமான, எதிர்பாராத முறைகளில் நடந்துகொள்ளுதலும் ஆகிய கடுமையான மனநோய் வகை இது.எண்ணம், உணர்வு, செயல் ஆகியவை ஒன்றோடொன்று முரண்படுதலும் மாயத் தோற்றங்களுக்கு ஆட்படுதலுமான மனக் கோளாறு இது.
இதன்படி ஒரு பாத்திரம் நடந்ததை நடக்காததாகச் சொல்லும். நடக்காததை நடந்ததாகச் சொல்லும். கண்முன் இருப்பவர்களை இல்லாதவர்கள் போலவும் இல்லாதவர்களை இருப்பவர்கள் போலவும் பாவனை செய்து கொள்ளும். இது ஒரு கொடுமையான மனக்கோளாறாகும். இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார்.
ஒரே மனிதருக்குள் மூன்று கதாபாத்திரங்கள் உள்நுழைந்து அந்த மனிதரை ஆட்டிவைக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் தான் இந்தப் படம்.இப்படி மூன்று பாத்திரங்கள் உள்நுழைந்து பாதிப்புக்குள்ளாகும் பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார்.
இப்படத்தை இயக்குபவர் ரமேஷ் சுப்ரமணியன். இவர் ‘நாய்கள் ஜாக்கிரதை ‘ போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனிடம் சினிமா கற்றவர் .மேலும் பல படங்களில் பணியாற்றியவர்.இந்தக் கதையைக் கேட்டு லட்சுமிமேனன்  பாராட்டியதுடன், இதற்கு முன்பு, தான் 13 கதைகள் கேட்டதாகவும், பலரும் தனக்குப் பிடிக்காத கதைகளைக் கூறியதாகவும் கூறியுள்ளவர், இக்கதை கேட்டு உடனே ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார். இயக்குநரை ஊக்கப்படுத்தியும் இருக்கிறார்.
‘AGP  ‘என்றால் அஞ்சலி , கெளதம், பூஜா என்கிற மூன்று பிரதான பாத்திரங்களின் முதல் எழுத்தை வைத்துப் படத்தலைப்பு உருவாகியுள்ளது.
இந்த மூவர் தவிர, இன்னொரு முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரமும் உண்டு. இப்படி நான்கு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றிக் கதை செல்கிறது.
லட்சுமிமேனன் முகம் தெரிந்த நடிகை.  பரதன் பிலிம்ஸ் ஆர்.வி.பரதன், சாய் ஜீவிதா என்கிற குழந்தை நட்சத்திரம், மோத்தீஸ்வர் ஆகிய நான்கு பேர் நடிக்கிறார்கள். மற்றும் பலர் தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
 இப்படத்திற்கு ஒளிப்பதிவு  சந்தோஷ் பாண்டி. இவர் ‘நிஷா ‘ என்கிற வெப்சீரிஸ் ஒளிப்பதிவு செய்தவர். அதற்காக விருதுகளையும் பெற்றவர்.
இசை ஜெய்கிரிஷ் .இவர் பல குறும்படங்களுக்கு  இசையமைத்தவர். கலை இயக்கம் சரவண அபிராமன், எடிட்டிங் -சந்திரகுமார் .ஜி.
கே.எஸ்.ஆர் ஸ்டுடியோ சார்பில் கே.எஸ்.ஆர்.இந்த படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள்  வெளியிட்டார்கள். நடிகர்கள் விஜய்சேதுபதி ,ஆர்யா, விமல், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள்
சக்தி சௌந்தர்ராஜன் இயக்குநர்
 சிம்புதேவன் , ஆகிய 6 பேர் இந்தப் படத்தின்  பர்ஸ்ட் லுக்கை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் .
ஒரு புதிய படத்திற்கு நம்பிக்கை தரும் வகையில் ஏழு நட்சத்திரங்களும் வெளியிட்டிருப்பது படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியாக்கி இருக்கிறது. அது மட்டுமல்ல படம் பற்றிய எதிர்பார்ப்பையும் இப்போதே ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.
Previous Post

சாதியை மையப்படுத்திய படம் எடுப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வா பகண்டையா’

Next Post

மறைந்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்துக்கு நடிகர் சிவகுமாரின் நினைவஞ்சலி…

Next Post
மறைந்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்துக்கு நடிகர் சிவகுமாரின் நினைவஞ்சலி…

மறைந்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்துக்கு நடிகர் சிவகுமாரின் நினைவஞ்சலி...

Popular News

  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.