ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் பின்னணி இசையுடன் இயக்குநர் அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ டீசர் வெளியாகியுள்ளது!

by Tamil2daynews
July 4, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் பின்னணி இசையுடன் இயக்குநர் அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ டீசர் வெளியாகியுள்ளது!

தீவிரமான கதைக்கரு கொண்ட படங்களை இயக்குவதில் ஆர்வமுள்ள இயக்குநரான அஜய் பூபதி மற்றுமொரு கிராமிய ஆக்‌ஷன் த்ரில்லர் படமான  ‘செவ்வாய்கிழமை’ மூலம் அனைவரையும் கவர இருக்கிறார். முன்னதாக வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் படத்தின் உள்ளடக்கத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இப்போது, படக்குழு ஒரு அற்புதமான டீசர் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

டீசருக்கு ‘Fear In Eyes’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றாற்போல, டீசரில் கிராமவாசிகளின் கண்களில் பயத்தை காட்டும் மிரட்டும் காட்சிகளுடனும் முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் வகையிலும் டீசர் வெளியாகியுள்ளது. ‘காந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை டீசரின் காட்சிகளுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் டீசரில் சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே, அஜய் பூபதியின் இந்த கிராமத்து ஆக்‌ஷன் த்ரில்லர் கதையான ‘செவ்வாய்கிழமை’ படத்துக்கு இருந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தற்போது வெளியாகியுள்ள டீசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

தயாரிப்பாளர்கள் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் பேசுகையில், “தான் ஒரு திறமையான இயக்குநர் என்பதை அஜய் பூபதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். சிறந்த உள்ளடக்கத்துடன் கூடிய கமர்ஷியல் படத்தை உருவாக்கியுள்ளார். இது தெலுங்கில் இருந்து அடுத்த கட்ட படமாக இருக்கும். தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் படத்தின் டீசரே இதற்கு சான்று. படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை முழு வேகத்தில் செய்து வருகிறோம். படம் குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும்” என்றனர்.Ajay Bhupathi's 'Mangalavaaram' Teaser: Breathtaking Visuals and BGM

இயக்குநர் அஜய் பூபதி பேசுகையில், “எங்களது ‘செவ்வாய்கிழமை’ திரைப்படம்  கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. நம் மண்ணுடன் கலந்த உண்மையான உணர்ச்சிகளுடன் கதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ‘காந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசை படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்” என்றார்.

அஜய் பூபதியின் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் மற்றும் சுவாதி ரெட்டி குணுபதி, சுரேஷ் வர்மா எம்-ன் முத்ரா மீடியா ஒர்க்ஸ் ஆகியவை இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய அளவில் படம் வெளியாக உள்ளது.

தொழில்நுட்பக்குழு விவரம்:
தயாரிப்பாளர்கள்: சுவாதி ரெட்டி குணுபதி, சுரேஷ் வர்மா எம்,
இயக்குநர்: அஜய் பூபதி,
இசையமைப்பாளர்: பி. அஜனீஷ் லோக்நாத்,
ஒளிப்பதிவு: சிவேந்திர தசரதி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ரகு குலகர்னி,
கலை இயக்குநர்: மோகன் தல்லூரி,
ஃபைட் மாஸ்டர்கள்: ரியல் சதீஷ், ப்ருத்வி,
நடன இயக்குநர்: பானு,
எடிட்டர்: மாதவ் குமார் குலப்பள்ளி,
வசனகர்த்தா: தாஜுதீன் சையத், கல்யாண் ராகவ்,
நிர்வாக தயாரிப்பாளர்: சாய்குமார் யாதவில்லி,
ஆடை வடிவமைப்பாளர்: முடாசர் முகமது.

Previous Post

#BoyapatiRAPO படத்தின் தலைப்பு ‘ஸ்கந்தா’ என அறிவிக்கப்பட்டு டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது!

Next Post

ஜானி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கும் காப் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘ரன்னர்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

Next Post

ஜானி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கும் காப் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'ரன்னர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியாக மேக்னா நடிக்கும் ‘நான் வேற மாதிரி’..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகேஷ் எனும் மகா கலைஞன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

September 20, 2023

“சீரன்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

September 20, 2023

திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

September 20, 2023

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

September 20, 2023
மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 18, 2023

கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட “பூங்கா நகரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

September 18, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!