• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ 

by Tamil2daynews
October 1, 2021
in சினிமா செய்திகள்
0
முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ 
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 ‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.

 இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

 மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை  உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார்

தம்பி இராமையா அவர்கள், ‘இந்த கதை அனைத்து மக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலை முடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்’ என்றார்.

முனிஸ்காந்த் அவர்கள் கூறுகையில், ‘சமுத்திரகனி இயக்கத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. முண்டாசுப்பட்டி, பசங்க 2, மாநகரம், மரகதநாணயம் படங்களை போல் இப்படமும் எனக்கு நல்ல பெயரை பெற்று தரும்’ என்றார்.

 சஞ்சிதா ஷெட்டி அவர்கள், ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் இந்த படத்தை முழுமையாக விரும்புவார்கள். இது ஒரு குடும்ப பொழுதுபோக்காக இருக்கும்.  இந்த படத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”.

 தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள், ‘”தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனது குடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும்  தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’. இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என்றார்.

ஜீ5 ஒரிஜினல் படமான ‘விநோதய சித்தம்’ அக்டோபர் 13  அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது

Previous Post

” ரஜினி ” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Next Post

20th Century Studios much awaited magnum opus *THE LAST DUEL*

Next Post
20th Century Studios much awaited magnum opus *THE LAST DUEL*

20th Century Studios much awaited magnum opus *THE LAST DUEL*

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.