

பிரபல நடிகருடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வரும் அனுபமா பரமேஸ்வரன்.. ஓபன் ஆக சொன்ன பிரபலம்
சமீபகாலமாக இளம் நடிகர் நடிகைகள் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவது சர்வ சாதாரணமாகி விட்டது போல. எங்கு திரும்பினாலும் அந்த நடிகருடன் இந்த நடிகை உள்ளார், இந்த நடிகையுடன் அந்த நடிகர் உறவில் இருக்கிறார் என்பது போன்ற செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன் தற்போது பிரபல நடிகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறாராம். அதற்காக அனுபமாவுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு வீடு ஒத்திக்கு வாங்கி கொடுத்திருக்கிறாராம்.
பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரது கதாபாத்திரத்தில் அவரே நடித்ததால் அங்கும் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கினார்.


இந்நிலையில் கேரியரின் ஆரம்பத்தில் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அதற்குள் பிரபல தெலுங்கு இளம் நடிகர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி தற்போது லிவிங் டுகெதர் வரை வந்துள்ளதாம். அடுத்ததாக கல்யாணம் நடக்குமா என்றால் கேள்விக்குறிதான் என்கிறார்கள் தெலுங்கு வட்டாரங்கள்.


இதனை பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றை ஓபன் ஆக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக பயில்வான் ரங்கநாதன் சொல்லும் ஒவ்வொரு கிசுகிசுக்களும் ரசிகர்களுக்கு நெஞ்சை அடைக்கும் வகையில் ஷாக் கொடுக்கும் விதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு :
அதென்னவோ நடிகைகளின் இரகசியத்தை உடைப்பதில் “பயில்வான்” ரங்கநாதனுக்கு அலாதி பிரியம் என்றுதான் சொல்லவேண்டும்.
கலக்குங்க பயில்வான்…