• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக அசோக் – தி லயன் மற்றும் ராஜசிங்கம் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது   கலர்ஸ் தமிழ்

by Tamil2daynews
October 1, 2021
in சினிமா செய்திகள்
0
உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக அசோக் – தி லயன் மற்றும் ராஜசிங்கம் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது   கலர்ஸ் தமிழ்
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அக்டோபர் 3 -ம் தேதி ஞாயிறன்று, பிற்பகல் 12:30 மற்றும் 3:30 மணிக்கு சண்டே சினி காம்போ நிகழ்வின் கீழ் இத்திரைப்படங்களை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்
சென்னை, செப்டம்பர் 30, 2021: தமிழகத்தின் சிறந்த பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், வரும் ஞாயிறன்று அசோக் தி லயன் மற்றும் ராஜசிங்கம் என்ற பிரபல திரைப்படங்களை உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்புவதன் மூலம் உங்களை தன்வசப்படுத்துவது நிச்சயம். இந்த சேனலின் சண்டே சினி காம்போ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்படவுள்ள இந்த திரைப்படங்கள், ரொமான்டிக் – ஆக்‌ஷன் மற்றும் வரலாற்றுப் பின்னணியிலான ஆக்‌ஷன் என்ற வகையினங்களைச் சேர்ந்தவை. அக்டோபர் 3 ஆம் தேதி, இந்த ஞாயிறன்று பிற்பகல் 12:30 மற்றும் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் சிறப்பான இத்திரைப்படங்களை கண்டு மகிழ மறக்காதீர்கள்.
அசோக் – தி லயன் என்ற திரைப்படம், சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ரொமான்டிக் – ஆக்‌ஷன் கலந்த திரைப்படமாகும். ஜுனியர் என்டிஆர், சமீரா ரெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் சோனு சூட் ஆகிய பிரபல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரங்களில் இதில் நடித்திருக்கின்றனர்.  இத்திரைக்கதையானது, அசோக் என்ற இளைஞன் (ஜுனியர் என்டிஆர் நடிப்பில்), அவனது பாட்டியின் இறப்பிற்கு காரணமானவன் என்று பழி சுமத்தப்பட்ட பிறகு அதிலிருந்து எப்படி மீண்டான் என்பதைச் சுற்றி நகர்கிறது.  திறமை வாய்ந்த ஒரு டான்சரான அஞ்சலி (சமீரா ரெட்டி) உடன் காதலில் விழுகிறான் அசோக்.  அசோக்கின்     துயரையும், சிரமத்தையும் புரிந்துகொள்ளும் அஞ்சலி, ரௌடியான கே.கே. (சோனு சூட் – ன் நடிப்பில்) செய்யும் ஒரு கொடுமையான குற்றத்தை நேரில் கண்ட சாட்சியாக இருக்க அஞ்சலியை சிக்கவைக்க கேகே முயற்சிக்கிறார்.  அஞ்சலியைப் பாதுகாப்பதற்காக கேகே உடன் அசோக் தொடங்கும் யுத்தத்தை சுற்றி கதையின் பிற்பகுதி நகர்கிறது.
இயக்குனர் கே.வி. விஜயயேந்திர பிரசாத்தின் சிறப்பான இயக்கத்தில் 2011 – ம் ஆண்டு வெளிவந்த ராஜசிங்கம், ஒரு வரலாற்று திரைக்கதையாகும். அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த இதில், நாகார்ஜுனா, ஸ்நேகா மற்றும் பேபி ஆனி ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  மனதை உருக்கும் கதை, சண்டை மற்றும் வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த இத்திரைப்படம், மல்லம்மா (பேபி ஆனி – ன் நடிப்பில்) என்ற ஒரு ஆதரவற்ற சிறுமியைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது.  அவளது கிராமத் தலைவரின் வெறுப்பு மற்றும் ஆட்சேபனையின் காரணமாக பாடுகின்ற சுதந்திரத்தை இழக்கிறாள் இச்சிறுமி.  இதற்கிடையே, அவளது சுதந்திரத்திற்காகப் போராடுமாறு அவளை ஊக்குவிப்பதற்கு மல்லம்மாவிற்கு இசை கற்றுத்தரும் ஆசிரியர் ராஜசிங்கத்தின் (நாகார்ஜுனாவின் நடிப்பில்) கதையை அவளுக்கு சொல்கிறார்.  ராஜசிங்கத்தின் வீரதீர பராக்கிரம செயல்களால் உத்வேகம் பெறும் மல்லம்மா, எப்படி அவளது சிரமங்களையும் தடைகளையும்   வென்று சாதிக்கிறாள் என்பதே கதையின் மையமாகும்.
உங்கள் வார இறுதி நாட்களை ஆனந்தமாக கழிக்க அக்டோபர் 3, இந்த ஞாயிறு பிற்பகல் 12:30 மற்றும் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்ய மறவாதீர்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். தங்களது சௌகரியத்திற்கேற்றவாறு எந்த நேரத்திலும் கலர்ஸ் தமிழின் நிகழ்ச்சிகளைக் கண்டுமகிழ VOOT – ஐ பார்வையாளர்கள் டியூன் செய்யலாம்.
Previous Post

தடைகள் பல தாண்டி திரையில் “ருத்ரதண்டவம்”

Next Post

Lift Streaming now only on DisneyPlus Hot Star

Next Post
Lift Streaming now only on DisneyPlus Hot Star

Lift Streaming now only on DisneyPlus Hot Star

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

    0 shares
    Share 0 Tweet 0
  • அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.