• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பியூட்டி – விமர்சனம்

by Tamil2daynews
March 12, 2023
in விமர்சனம்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பியூட்டி – விமர்சனம்

 

வங்கியில் வேலை செய்யும் ரிஷிக்கு அழகான பெண்களை கண்டாலே வெறுக்கும் குணத்தோடு வளர்ந்தவர். அழகில்லாத பெண் அல்லது ஊனமுற்ற பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற நினைக்கிறார். வங்கிக்கு வரும் கரீனா ஷாவை பார்க்கிறார். கரீனா முகம் தீயினால் பாதிக்கப்பட்டிருக்க, அவளையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு காதலிக்க தொடங்குகிறார். இதனிடையே முன்னர் மிஸ் சென்னையாக இருந்த கரீனா ஷா, விபத்திற்கு பிறகு தன் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்து அழகாக்குகிறார். ரிஷியிடம் மகிழ்ச்சியாக கரீனா இந்த விஷயத்தை சொல்ல வருகிறார். கரீனாவை பார்த்தவுடன் அதிர்ச்சியாகும் ரிஷி தன் காதலி கரீனாவின் முகத்தை சிதைக்க நினைத்து பல வழிகளில் முயல்கிறார். இவரின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் டாக்டர், கரீனாவை காப்பாற்ற முயல்கிறார். இறுதியில் ரிஷியின் த்pட்டம் பலித்ததா? டாக்டர், கரீனாவை காப்பாற்றினாரா? ரிஷி ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்? தந்தையின் கடந்தகாலத்தில் நடந்தது என்ன? ரிஷி பாதிக்கப்பட காரணம் என்ன? ரிஷியின் மோசமான திட்டத்தை தெரிந்து கொள்ளும் கரீனா என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரிஷி பண்ணையார் தந்தையாகவும், நகரத்து மகனாகவும் இரு வேடங்களில் மாறுபட்ட நடை, உடை, பாவனையில் தந்தையின் சொல்லை மீற முடியாமல், காதலியையும் விட்டு பிரிய மனமில்லாமல் தவிக்கும் தவிப்பில் வித்தியாசத்தை காட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.அழகான மாடர்ன் பெண்ணாகவும், விபத்தில் தழும்புடன் காதலியாகவும், கரீனா ஷா மகிழ்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்தி இறுதியில் எடுக்கும் முடிவால் காதலனின் மனதை மாற்றி படத்தின் முக்கிய புள்ளியாக இருந்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன், சிங்கமுத்து அனைவரும் நிறைவாக செய்திருக்கிறார்கள். இவர்களுடன் கோ.ஆன்ந்த் சிவாவும் சிறு பங்களிப்பை கொடுத்துள்ளார்.தயாரித்து, ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆர். தீபக்குமார் காட்சிக் கோணங்கள் கச்சிதம் மற்றும் வெ.இறையன்பு, தமிழ் முருகன் ஆகியேரின் பாடல்களை ரசிக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் இலக்கியன்.எடிட்டிங்-சங்கர்.கே, நடனம்-கூல் ஜெயந்த், சண்டை- ஃபயர் கார்த்திக், கலை-ரவிவர்மா ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு துணை செய்துள்ளது.அழகு வெளிதோற்றத்தில் அல்ல, உள்மனத்தோற்றத்தில் தான் உள்ளது என்பதையும், அழகு ஆபத்தானது என்பதை நம்பும் இளைஞனை மாற்றி அவனின் மனஅழுத்தத்தை போக்கி திருந்தும் வகையில் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் கோ.ஆனந்த் சிவா.மொத்தத்தில் ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்திருக்கும் பியூட்டி அழகு ஆபத்தானது அல்ல என்பதை காதலனுக்கு உணர்த்தும் படம்.

Previous Post

அகிலன் – விமர்சனம்

Next Post

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது

Next Post

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.