• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சைஃப் அலிகான் ‘என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்!

by Tamil2daynews
April 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சைஃப் அலிகான் ‘என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்!

 

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக ‘என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். மேலும் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர்  மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

’NTR 30’ திரைப்படம்  தெலுங்கு மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்படும்  ஆக்‌ஷன்- ட்ராமா திரைப்படம். இதில் சைஃப் அலிகான், ஜூனியர் என்டிஆர் உடன்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அற்புதமான கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு காட்சி விருந்தைக் கொடுக்கும் என்பது உறுதி.
Image’என்டிஆர் 30’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படம் மூலம் நடிகர் சைஃப் அலிகானை அதிகாரப்பூர்வமாக தங்கள் அணிக்கு வரவேற்று உள்ளனர்.

கடந்த மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்த பூஜைக்குப் பிறகு ’NTR 30’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. இந்த படம் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து ‘என்டிஆர் 30’ படத்தைத் தயாரிக்கிறது மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் படத்தை வழங்குகிறார். மேலும், ஏப்ரல் 5, 2024 அன்று படம் பான் இந்திய அளவில் வெளியாகிறது.

தொழில்நுட்பக்குழு விவரம்:

வழங்குபவர்: நந்தமுரி கல்யாண் ராம்,
பேனர்கள்: என்டிஆர் ஆர்ட்ஸ், யுவ சுதா ஆர்ட்ஸ்,
தயாரிப்பாளர்கள்: ஹரிகிருஷ்ணா.கே, மிக்கிலினேனி சுதாகர்,
எழுதி இயக்குபவர்: கொரட்டாலா சிவா,
இசை: அனிருத் ரவிச்சந்திரன்,
ஒளிப்பதிவு: ரத்னவேலு,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சாபு சிரில்,
VFX: யுகந்தர்

Previous Post

ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

Next Post

சபரிமலையில் நடைபெற்று வரும் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு

Next Post

சபரிமலையில் நடைபெற்று வரும் யோகிபாபுவின் 'சன்னிதானம் PO' படப்பிடிப்பு

Popular News

  • ‘குப்பி’ திரைப்படத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்: மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.