• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Amazon ஒரிஜினல் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-ன் புதிய சீசனின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக் கட்டம் துவக்கம்

by Tamil2daynews
October 21, 2021
in சினிமா செய்திகள்
0
Amazon ஒரிஜினல் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-ன் புதிய சீசனின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக் கட்டம் துவக்கம்
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மயாங்க் ஷர்மாவால் இணைந்து உருவாக்கப்பட்டு, இயக்கப்படும் இந்த உளவியல் சித்திரம், இந்த புதிய சீசனில் பல புதிய கதாபாத்திரங்கள் மற்றும் சில்லிடவைக்கும் திருப்பங்களுடன் மேலும் சிலிர்ப்பூட்டுவதாக அமையவுள்ளது. இந்தத் தொடர் 2022-ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் உருவாக்கி தயாரித்துள்ள இந்த புதிய சீசன், அபிஷேக் பச்சன் மற்றும் அமித் சத் இடையேயான மோதலை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு வருகிறது, அதே சமயம் நவீன் கஸ்தூரியாவை முக்கியக் கதாபாத்திரத்தில் சேர்ப்பதன் மூலம் கதையில் ஒரு புதிய பரிமாணம் சேர்க்கப்பட்டுள்ளது

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்‌ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்குமுன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 999 Amazon Prime உறுப்பினர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பட்டியலிடப்பட்டுள்ள Amazon-இன் தரமான உள்ளடக்கத்தைக் கண்டு ரசிக்க முடியும். Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.

மும்பை, இந்தியா, அக்டோபர்-20, 2021: பெருமளவில் பாராட்டுதலை பெற்ற உளவியல் த்ரில்லரான ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-இன் புதிய சீசனுக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக் கட்டத்தின் துவக்கத்தை Prime Video அறிவித்துள்ளது. அபிஷேக் பச்சன், அமித் சத், நித்யா மேனன் மற்றும் சயாமி கேர் ஆகியோர் நடிக்கும் இத்தொடரில், நவீன் கஸ்தூரியா முக்கிய கதாபாத்திரத்தில் இணைகிறார். அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் உருவாக்கி, தயாரித்து மயாங்க் சர்மா இயக்கியுள்ள இந்தப் புதிய சீசன் டெல்லி மற்றும் மும்பையில் தயாரிப்பைத் தொடங்கியுள்ளது. இந்தத் தொடரை 2022-இல் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் Prime Video-இல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

“ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ் பெற்ற புகழ் மற்றும் உருவாக்கிய எதிர்பார்ப்பு ஒரு புதிய சீசனின் அவசியத்தை வலியுறுத்தியது. கதைக்களம் மேலும் தீவிரமடைந்து புதிய கதாபாத்திரங்கள் கதையில் மேலும் ஆர்வத்தைச் சேர்ப்பதால், இந்த பருவத்தில் எதிர்பார்ப்புகள் மற்றும் த்ரில் அதிகமாகவே இருக்கும். இந்த விருது பெற்ற தொடரின் புதிய சீசனுக்கானஅறிவிப்பு, எல்லைகளைத் தாண்டி இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமான மற்றும் கவர்ந்திழுக்கும் கதைகளை உருவாக்கித் திரையிடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்துகிறது ”என்று Prime Video India-இன், ஹெட் ஆஃப் ஒரிஜினல்ஸ் அபர்ணா புரோஹித் கூறினார்.

அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான விக்ரம் மல்ஹோத்ரா கூறுகையில் “ Amazon Prime Video உடன் எங்கள் பயணத்தின் ஒரு புதிய அத்தியாயத்தை ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-இன் மற்றொரு பதிப்பின் மூலம் துவங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட்-இல், பார்வையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் பொழுதுபோக்கை வழங்கும் பிரிவுகளில் உள்ளடக்கத்தை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம், மேலும் மிகவும் பிரபலமான மற்றும் திறமை வாய்ந்த இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்காக மற்றொரு அற்புதமான கதையைக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மயாங்க் மீண்டும் தலைமைப் பொறுப்பில் இருப்பதோடு, ஒரு வலுவான எழுத்தாளர்கள் குழுவுடன் இணைந்து செயலாற்றுவதால் இந்த சீசனில் பல புதிய உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் இந்தச் சித்திரத்தில் பங்கேற்பர், மற்றொரு உற்சாகமான சீசனைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

Photo – https://drive.google.com/file/d/1fMxY4EzD9KglJg19r0a4uVubxbIuo0RR/view?usp=sharing

Prime Video கேடலாகில் உள்ள ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-இன் புதிய சீசனும் இணைகிறது. மும்பை டைரிஸ் 26/11, தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான், ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பாண்டிஷ் பண்டிட்ஸ், பாதாள்லோக், மிர்சாபூர், தி ஃபார்காட்டன் ஆர்மி – ஆசாதி கேலியே, சன்ஸ் ஆப் சாயில் – ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் பிளீஸ், மேட் இன் ஹெவன் மற்றும் இன்சைட் எட்ஜ் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Amazon Original series தொடர்கள் மற்றும் இந்தியத் திரைப்படங்களான ஷேர்ஷா தூஃபான், ஷேர்னி, கூலி நம்பர் 1, அன்பாஸ்ட், குலாபோ சிதாபோ, துர்காமதி, சலாங், சகுந்தலா தேவி, சார்பட்டா பரம்பரை, புத்தம் புதுக் காலை, சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், ஃபிரெஞ்ச் பிரியாணி, லா, சுஃபியூம் சுஜாதயும், பென்குயின், நிசப்தம், மாரா, வி, சி.யூ சூன்,பீமாசேன நல மகாராஜா, திருஷ்யம்-2, ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளாஸ் மெலடீஸ், ஹலோ சார்லி, மல்லிக், நாரப்பா உடன் Amazon Originals-இன் சர்வதேச திரைப்படங்களான சின்ட்ரெல்லா, வித்தவுட் ரிமோர்ஸ், தி டுமாரோ வார், போராட் சப்சிகியுவன்ட், டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், க்ரூயல் சம்மர், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்றவையும் Prime மெம்பர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கிறது. இந்தச் சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளில் பல திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் உள்ளன.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான பிரைம் வீடியோ செயலியின் மூலம் Prime உறுப்பினர்கள் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-S2-ஐ எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் காணலாம். Prime Video செயலியில், எபிசோடுகளைப் பதிவிறக்கம் செய்து மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்டுகளில் எவ்விதக் கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எங்கும் காணும் தேர்வும் Prime மெம்பர்களுக்குக் கிடைக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ₹999 அல்லது மாதத்திற்கு ₹129 என்ற கட்டணத்தில் Prime மெம்பராக இணைவோருக்கு எவ்விதக் கூடுதல் கட்டணமும் இன்றி Prime Video இலவசமாகக் கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-இல் மேலும் தகவல் பெறலாம் மற்றும் 30 நாள் இலவச சோதனைக்கு சந்தா சேரலாம்.

Previous Post

Indo Cine Appreciation Foundation are organizing a CZECH FILM FESTIVAL on 22 and 23 October 2021 at Tagore Film Centre NFDC

Next Post

*‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நடிக்கும் கேரள லாட்டரியை அடிப்படையாகக் கொண்ட தமிழ் திரைப்படம் ‘பம்பர்

Next Post
*‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நடிக்கும் கேரள லாட்டரியை அடிப்படையாகக் கொண்ட தமிழ் திரைப்படம் ‘பம்பர்

*‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நடிக்கும் கேரள லாட்டரியை அடிப்படையாகக் கொண்ட தமிழ் திரைப்படம் 'பம்பர்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Actress Shirin Kanchwala Photos

    0 shares
    Share 0 Tweet 0
  • ”இயக்குநர் ராமின் ’பறந்து போ’ மிகப்பெரிய வெற்றிப் படம்!”- ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • Turmeric Mantra an artisanal pickles and podis brand was launched by social activist and columnist Apsara Reddy.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்…அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

July 5, 2025

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு

July 5, 2025

ஃபீனிக்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

பறந்து போ – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

3 BHK விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

July 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.