• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!

by Tamil2daynews
May 13, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!

 

ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.

விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.

வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது..,
புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது..,
நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ-டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ZEE5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது…
“ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சமீப காலங்களில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது”. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது. ஆனால் அதன் உள்ளே பல கதைகளும், பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம். அது தனி உலகமாக மாறியது. 2023-இலேயே இந்தக் கதையை உருவாக்க நினைத்தோம். தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை. அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும். ‘விலங்கு 2’-இல் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’. ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது” “பிரசாந்தை முதல் முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும், இது தனித்துவமான பயணமாக இருக்கும்” அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…,
பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் கவின் பேசியதாவது…,
பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…,
பாண்டிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும். நல்ல உழைப்பாளி. விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ். மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் மதன் பேசியதாவது…,
விலங்கு, கேம், அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம். இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல, சினிமாவை விட இது கடினமானது. படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன். நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கிய காரணம். ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளுக்கு தர வேண்டும். பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை, ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள். விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது…,
தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த். அவன் என் நண்பன். இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகை கௌசல்யா பேசியதாவது..,
இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது” அனைவருக்கும் நன்றி.

நடிகை மீனா பேசியதாவது,
“ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. “நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” அனைவருக்கும் நன்றி.

நடிகர் அருள்ஜோதி பேசியதாவது,
“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். பிரசாந்த் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் திரையிலும் மிகவும் சிறப்பாகத் தெரிகிறார். இனிமேலும் அவரை ஹீரோவாக பல படங்களில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்”. “இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தை பெரிய திரையிலும் பார்க்க வேண்டும்” என்றார்.

நடிகை சாயாதேவி பேசியதாவது,
“முதலில் இந்த சீரிஸில் நடிக்க மறுத்தேன். ஆனால் ‘நான் ஹீரோவாக நடிக்கிறேன், நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா?’ என்று பிரசாந்த் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது உண்மையிலேயே அவர் இந்த சீரிஸின் ஹீரோவாக மிளிர்கிறார்” வாழ்த்துக்கள்.“‘விலங்கு’ மற்றும் ‘மாமன்’ எப்படி கொண்டாடப்பட்டதோ, அதேபோல ‘வாரண்ட்’ கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும். நல்லா இருந்தாலும், இல்லையென்றாலும் உங்கள் கருத்துக்களை நேரடியாக பிரசாந்திடம் சொல்லுங்கள்” அனைவருக்கும் நன்றி: நகைச்சுவையுடன் பேசினார்.

நடிகர் வையாபுரி பேசியதாவது,
“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். இந்த யூனிட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – எல்லோரும் நண்பர்களாக வேலை செய்ததுதான். எந்த ஈகோவும் இல்லாமல் மிக ஜாலியாக வேலை பார்த்தார்கள்”. “ZEE5-ல் தொடர்ந்து இதுபோன்ற நல்ல சீரிஸ்களில் வேலை செய்ய ஆசை” அனைவருக்கும் நன்றி.

நடிகர் அருள்தாஸ் பேசியதாவது ,
“‘விலங்கு’ பிரசாந்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதன் தொடர்ச்சியாக ‘வாரண்ட்’ உருவாகியுள்ளது. இது ஒரு போலீஸ் கதை என்றாலும், சினிமாவில் வழக்கமாக பார்க்காத போலீஸ் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டுகிறது” என்றார். “பிரசாந்த் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக இயல்பாக நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் அவரோடு எளிதில் கனெக்ட் ஆக முடியும். நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார். “இந்தக் குழுவிடம் போலீஸ் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் உள்ளன. அதனால் ‘வாரண்ட்’ அடுத்தடுத்த பாகங்களாகவும் வர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது.
“ஹீரோ மெட்டீரியல் என்று எதுவும் கிடையாது. ஒரு கதையை யார் முன்னின்று கொண்டு செல்கிறார்களோ அவர்கள்தான் ஹீரோ. அந்த திறமை பிரசாந்த் சாருக்கு இருக்கிறது”, “ஆஃப் ஸ்கிரீனிலேயே பெண்களுக்கு மிகவும் பிடித்தவர் பிரசாந்த் சார். இந்த சீரிஸ் வெளியான பிறகு ஆன் ஸ்கிரீனிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகும்”.எதிர்பார்ப்பை உயர்த்திய “வாரண்ட்” முழு விழாவும் படக்குழுவினரின் நட்பு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் பிரசாந்த் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘விலங்கு’ உலகத்தின் விரிவாக்கமாக உருவாகும் இந்த “வாரண்ட்” வெப் சீரிஸ், ரியலிஸ்டிக் போலீஸ் கதையுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியது. என்றார்.

தயாரிப்பாளர் குமார் பேசியதாவது…
நான் இந்தக் கதையை முழுதாக படித்து விட்டேன். விக்னேஷ் இயக்குநராக சிறக்க வாழ்த்துக்கள். பிரசாந்தை மாமன் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இந்தக் கதையை படிக்க சொல்லி மிகவும் வற்புறுத்தினார். இவர்தான் நடிக்கப் போகிறார் என்பது அப்போது தெரியாது. மிகச்சிறந்த கதை. அடுத்தடுத்து நான்கு படங்கள் கமிட்டாகியுள்ளார். எனக்கும் படம் தர கேட்டுக்கொள்கிறேன். அவர் பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள்.

நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது..,
ஹீரோவுக்கு தனி உருவம், வடிவம் எல்லாம் கிடையாது. கதைதான் ஹீரோ. அதை சரியாக செய்யும் திறமை பிரசாந்திடம் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ராம்குமார் பேசியதாவது..,
பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர், நல்ல இயக்குநர், இப்போது நடிகராக மாறியிருக்கிறார். அவரிடம் எப்போதும் தனித்துவம் இருக்கும். அவரை என் பார்க்கிங் படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் இருந்தது. இயக்குநராக ஜெயித்தது போல நடிகராகவும் ஜெயிப்பார். விலங்கு சீரிஸை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல வாரண்ட் எல்லோரையும் கவரும். அதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசியதாவது..,
பிரசாந்த் என் நண்பர், என் படத்திலும் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் அவர் நடிக்கவில்லை என நினைக்கிறேன். விலங்கு தமிழில் அனைவரையும் கவர்ந்த சீரிஸ். ஒரு படம் எவ்வளவு டீடெய்லிங் எப்படி பண்ண வேண்டும் என்பதை விலங்கு கற்றுத்தந்தது. வாரண்ட் அதே போல மிகச்சிறந்த சீரிஸாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.

கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், காவல் துறையின் மறுபக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், மன அழுத்தம், அதிகார துஷ்பிரயோகம், மனித மன மாற்றங்கள் ஆகியவற்றை தீவிரமாக பதிவு செய்யும் வகையில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக “கோட்டை கருப்பசாமி” என்ற காவலர் வருகிறார். சாதாரண காவலராக தனது வாழ்க்கையை தொடங்கும் அவர், சமூக அவமானங்கள், அதிகார அழுத்தங்கள் மற்றும் பல்வேறு குற்றவியல் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார். பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது, மெதுவாக அவரது மனநிலையும் செயல்பாடுகளும் மாறத் தொடங்குகின்றன. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒருவன், சட்டத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் தருணங்களே இந்த தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

ஒரு லாக்கப் டெத் சம்பவம் கதையை முற்றிலும் திருப்பி விடுகிறது. அதன் பின்னர் உண்மை, பொய், அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதலே கதையின் மையமாக நகர்கிறது. ஒரு காவலரின் உளவியல் மாற்றத்தை மிகவும் ரியலிஸ்டிக்காக பதிவு செய்யும் முயற்சியாக “வாரண்ட்” பார்க்கப்படுகிறது.

இந்த சீரிஸில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா MV, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அசோக் குமார், எடிட்டிங் பணிகளை R ராமர் செய்துள்ளனர்.

கிராமத்து காவல் நிலையங்கள், உள்ளூர் அரசியல், அதிகார மிரட்டல்கள் மற்றும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களை மிக நெருக்கமாக காட்டும் இந்த தொடர், “விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“வாரண்ட்” வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.

Trailer Link 🔗https://youtu.be/3j0NBortZ3k?si=M16Q53p10TWuu4dH

Previous Post

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டது ப்ரைம் வீடியோ !!

Next Post

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!

Next Post

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.