ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கலகத் தலைவன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

by Tamil2daynews
November 16, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கலகத் தலைவன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில்
நடிகர் கலையரசன் பேசியதாவது…,
“நான் சின்ன பாத்திரத்தில்  தான் நடித்து இருக்கிறேன். ஆனால் அது முக்கியமான பாத்திரமாக இருக்கும். இயக்குனர் மகிழ் சொல்லித்தரும் விதம் புது அனுபவமாக இருந்தது. உதயநிதி சார் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் இதில் புது பரிணாமத்தில் இருப்பார். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை.”
நடிகை நிதி அகர்வால் பேசியதாவது..,
“இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கும், நடிகர் உதயநிதி சார் அவர்களுக்கும் நன்றி. அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் பங்கேற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்.”
நடிகர் ஆரவ் பேசியதாவது..,
“ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு இந்த படத்திற்காக நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த படத்தின் இசை ஈர்க்கும் படி அமைந்துள்ளது. இயக்குனர் மகிழ் உடைய ரசிகனாக இருந்த எனக்கு வாய்ப்பளித்த மகிழ் திருமேனி சாருக்கு நன்றி. அவரிடம் நிறைய கற்று கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னை இந்தப் படத்தில் முழுவதுமாய் அவர் தான் மெருகேற்றியுள்ளார். அடுத்தாக இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த உதயநிதி சாருக்கு நன்றி.”
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசியதாவது…,
“இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த உதயநிதி அவர்களுக்கு நன்றி. இந்த திரைப்படத்தில் பணியாற்றிய  நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பான பணியை கொடுத்துள்ளனர். இயக்குனர் மகிழ் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது, நிறைய கற்றுக்கொண்டேன். படம் வெற்றியடைய உங்கள் ஆதரவு தேவை. நன்றி
பாடலாசிரியர் கார்கி பேசியதாவது…
இயக்குனர் மகிழ் எனது மிகச்சிறந்த நண்பர். அவர் படங்களில் பாடல் எழுதுவது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். அவர் பாடலுக்கு தரும் தருணங்கள் வித்தியாசமாக இருக்கும். இந்த படத்தில் பாடல் எழுதிய அதே நாளில் தமிழக அரசுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கு பெறும் பாடல் ஒன்றையும் எழுதினேன். அப்பாவிற்கும் மகனுக்கும் ஒரே நாளில் பாடல் எழுதிய பெருமை கிடைத்தது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருக்கு இது திருப்புமுனை படமாக இருக்கும். படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவாளர் தில் ராஜு பேசியதாவது..
ரெட் ஜெயன்ட், உதயநிதி ஸ்டாலின், மகிழ் திருமேனி உடன் இணைந்தது மகிழ்ச்சி. என்னுடைய பாணியை மாற்றி, இதில் பணியாற்ற வைத்த இயக்குனருக்கு நன்றி.
நடிகர் பாபி சிம்ஹா பேசியதாவது…
“படத்தின் விஷுவல்ஸ் மிகவும் ஆழமாக இருக்கிறது. காட்சிகளை பார்க்கும் போது உதயநிதி சார் ஸ்டைலாக இருக்கிறார். படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.”
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,
“லவ்  டுடே படத்தின் வெற்றிக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றிகள்  இந்த படத்தின்  டிரெய்லர் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மகிழ் திருமேனி சாருடைய படத்திற்கு நான் எப்பொழுதும் ரசிகன். இந்த படம் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.”
இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியதாவது..,
“இயக்குனர் மகிழ் திருமேனி உடைய திரைப்படங்கள் எப்போதும்  ஆழமான கதையுடன் இருக்கும். கதாபாத்திரங்களில் எப்போதும் ஒரு அமைதி இருக்கும். அவரது படத்தின் காதல் காட்சிகள் சிறப்பானதாக இருக்கும். இந்த படத்திலும் அது இருக்கும் என்று நம்புகிறேன். உதயநிதி சார் உடன் பயணித்த அனுபவம், எனக்கு முக்கியமான அனுபவமாக இருந்தது. படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றிகள்.  இந்த படம் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.”
நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது..,
“உதய் அண்ணா தொடர்ந்து சீரியஸான படங்களை செய்து வருகிறார். அதற்கு எனது வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். படத்தின் டிரெய்லர் சிறப்பாக இருக்கிறது. படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.”
இயக்குனர் சுந்தர் சி பேசியதாவது..,
இயக்குனர் மகிழ் திருமேனி உடைய  திரைக்கதைக்கு நான் பெரிய ரசிகன். அவரது தடம் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். உதய் சார் உடன் பணியாற்ற முயற்சித்து இருக்கிறேன்,  ஆனால் அது நடைபெறவில்லை. அவருடைய திரைப்பயணத்துக்கு எனது வாழ்த்துகள், அவர் தொடர்ந்து சினிமாவிற்கு பல நன்மைகளை செய்து வருகிறார். இந்த படம்  மாபெரும் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.”
நடிகர் அருண் விஜய் பேசியதாவது..,
“இயக்குனர் மகிழ் திருமேனி உடைய எழுத்துக்கு நான் எப்பொழுதும் ரசிகன். அவர் நிறைய நுணுக்கங்களை படத்தில் சேர்ப்பார். இந்தப் படம் கண்டிப்பாக அவருடைய அர்பணிப்புக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். உதயநிதி சாருக்கு இந்த படம் புது பரிணாமமாக இருக்கும். அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிபடமாக அமையும். அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குனர் அருண் ராஜா காமராஜ் பேசியதாவது..,
“படத்தில் ஆக்சன் காட்சிகள் நன்றாக இருக்கிறது. அதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இந்த கலகத் தலைவன், நிறைய கலகத்தை உருவாக்கி, அதை தீர்க்கும் தலைவனாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.”
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியதாவது..,
“இந்த படத்தின் டிரெய்லர் ஒரு நல்ல படத்திற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. படத்தின் டிரெய்லர் சிறப்பாக இருக்கிறது . உதயநிதி சார் உடைய திரைப்பயணத்தில் இது முக்கிய படமாக அமைய எனது வாழ்த்துக்கள். படத்தில் பங்கேற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.”
இயக்குனர் M ராஜேஷ் பேசியதாவது…,
“உதயநிதி ஸ்டாலின் காமெடி படங்கள் செய்வார் என நினைத்தேன், தற்போது நிறைய சீரியஸான படங்களை செய்து கொண்டு இருக்கிறார்.  இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது அட்டகாசமாக  இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி பேசியதாவது..,,
” திரைக்கதைக்கு மகிழ் திருமேனி கொடுக்கும் ஆழமான தகவல்கள் தான் அவரது பலம். அது இந்த படத்திலும் இருக்கிறது. உதயநிதி அவர்களுக்கு சினிமா மேல் அதிக பற்றுள்ளது. அவர் சினிமாவிற்கு பல நன்மைகளை செய்துவருகிறார். படம் சிறப்பாக வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.”
இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது..,
“உதய் உடன் பயணித்தது  மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு இருந்தது. உதயநிதி ஸ்டாலின் திரையில் அறிமுகப்படுத்த வேண்டியது நான் தான்.  ஆனால் அது நடக்கவில்லை. அவருடன் சைக்கோவில் பணிபுரிந்தேன், அவர் பணிவில் மிகச்சிறந்த நபர். அவருடன் வேலை பார்ப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். அவர் அர்ப்பணிப்பான நபர். அவர் தொடர்ந்து படங்கள் செய்ய வேண்டும். படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது, இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும்  என்று தோன்றுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குனர் மகிழ் திருமேனி பேசியதாவது..,
” படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த விழாவிற்கு வந்த முக்கிய பிரபலங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.  கலையரசன், ஆரவ் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். உதயநிதி சார் எப்பொழுதும் பணிவாக இருக்க கூடிய நபர், அதனால் தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார். இந்த 10 வருடத்தில் அவர் தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான பல கதாபத்திரங்களை ஏற்று அதை நம்பும் படி உருவாக்கியுள்ளார். இந்த படமும் அப்படி தான் இருக்கும், இந்த படம் உங்களை ஏமாற்றாது. எனக்கு இந்த வாய்ப்பளித்த உதயநிதி அவர்களுக்கு நன்றி. “
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது..,
“கலகத் தலைவன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் எனது நன்றிகள்.  மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை செதுக்கி இருக்கிறார். அவர் நிறைய நேரம் செலவழித்து, சிறப்பான காட்சிகளை தொகுத்து உருவாக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு பெரிய உழைப்பும், அர்பணிப்பும் கொடுத்துள்ளோம். இயக்குனர் மகிழ் திருமேனி சிறப்பான படத்தை உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. “
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Previous Post

‘ ஐமா ‘சர்வைவல் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்

Next Post

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கொன்றால் பாவம்’ படபிடிப்பு நிறைவு பெற்றது..!

Next Post

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் 'கொன்றால் பாவம்' படபிடிப்பு நிறைவு பெற்றது..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ZEE5 announces first ever virtual reality based thriller series “PUBGOA”

    0 shares
    Share 0 Tweet 0
  • சில சௌகரியங்களை இழந்தால் மாற்றங்களை ஏற்படுத்தலாம் – சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • ரிலீஸுக்கு முன்பாக வெற்றி விழா கொண்டாடிய ” பேய காணோம்” படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆரி நடிக்கும் ”எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாவீரன் பிள்ளை படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..

March 23, 2023

பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

March 23, 2023

39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து – சித்ரா !

March 23, 2023

தமிழக அரசு செயலால் கார்த்தி மகிழ்ச்சி.

March 23, 2023

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

March 23, 2023

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!