ஒரு மாநில முதல்வர்! அவர்தம் அமைச்சருடன் நடைப்பயிற்சியின் போது எவ்விதமான அதிகாரமிக்க தோரணை இல்லாமல் எதிர்கண்ட எளிய மக்களிடம் மிக இயல்பாக பேசியது கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்தோம். நான் இங்கே பகிர்வது பொய்யுரை அல்ல! புகழுரை அல்ல! மெய்யுரையே! இந்த சிறப்பு மிக்க பொன்மொழி கூட நீங்கள் உதித்ததே. வேண்டியவர் வேண்டாதவர் என்ற நிலை கொள்ளாது நடுநிலையாக நல்லவைகளை மட்டும் இனம்கண்டு உடனுக்குடன் செய்கின்ற செயல்பாடு, பகுத்தறிவுக்கும் மக்களின் நம்பிக்கையான பக்திக்கும் மதிப்பளிப்பது எதிர்ப்பாளர்களை கூட இன்முகம் காட்ட செய்கிறது. பெரியாரின் சமூக சிந்தனை!பசும்பொன்னாரின் ஆன்மீக நோக்கு! பெருந்தலைவரின் பொதுநல தூய்மை! பேரறிஞர் அண்ணாவின் அரசியல் கோட்பாடு! கலைஞரின் மொழியினக் காப்பு அத்துணையும் கலந்த எத்தகைய முதல்வர் எங்களுக்கு…! முதல்வரே! எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
இப்படிக்கு,
கலைப்புலி g சேகரன்
தலைவர்
தமிழ் இலக்க திரைப்பட ,குறும்பட, ஆவணப்பட தயாரிப்பாளர்கள் நலச்சங்கம். சென்னை .பதிவு எண் 380/2011













