• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பலி..

by Tamil2daynews
March 18, 2020
in செய்திகள்
0
8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பலி..
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

      8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பலி… 3 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணம்.
உலக அளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இத்தாலியில் கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாலியில் தொடர்ந்து 3வது நாளாக 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதால் 3 நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதனால் இத்தாலி மட்டுமின்றி ஒட்டு மொத்த உலக நாடுகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இத்தாலிக்கு அடுத்தபடியாக நேற்று ஒரே நாளில் மட்டும் ஸ்பெயினில் 190 பேரும், ஈரானில் 135 பேரும் கொரோனாவின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் முறையே 27 பேரும், 14 பேரும் இறந்துள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் தொற்று நோயால் ஏற்பட்ட முடக்கத்தையடுத்து பல்வேறு சலுகைகளை அந்நாடு அறிவித்துள்ளது. அதன்படி தொழிலாளர்கள் 3 மாதங்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
மேலும் பப்கள் மற்றும் உணவங்களில் ஒரு ஆண்டுக்கு வரி வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பணிக்கு வராத தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்றும் நிறுவனங்களுக்கு ரிஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தாக்குதலில் இருந்து இங்கிலாந்தை மீட்டெடுக்க 330 பில்லியன் பவுண்டுகளை அவர் ஒதுக்கியுள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்தில் தடையை மீறி நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்த ஸ்பெயின் நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனாவால் பொது இடங்களில் குளிப்பது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சீனா மற்றும் ரஷ்யாவைத் தொடர்ந்து ஜெர்மனியும் அவசரகாலத்தில் மருத்துவமனை ஒன்றினை கட்டத் தயாராகி வருகிறது. சீனாவில் கொரோனா பரவியதையடுத்து அங்கு ஒரு வாரத்திற்குள் இரு மிகப்பெரும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இரண்டாவது மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. போர்க்கால அடிப்படையில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் இருக்கும் என்றும் 12 வாரங்களில் கட்டி முடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவைத் தொடர்ந்து ஜெர்மனியும் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன மருத்துவமனையை கட்டத் தீர்மானித்தது. இதையடுத்து அதற்கானப் பூர்வாங்கப் பணிகளையும் அந்நாடு தொடங்கியுள்ளது.
Previous Post

படம் பார்க்க A Cube புதிய மொபைல் ஆப் கண்டுபிடித்திருக்கும் நடிகர் ஜெய் ஆகாஷ் !

Next Post

சேலத்தில் மனு கொடுக்க வந்த போது இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர்

Next Post
சேலத்தில் மனு கொடுக்க வந்த போது இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர்

சேலத்தில் மனு கொடுக்க வந்த போது இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.