ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘டாடா’ – விமர்சனம்

by Tamil2daynews
February 10, 2023
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘டாடா’ – விமர்சனம்

 

பொறுப்பற்ற மாணவராகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் கவின், மாணவி அபர்ணாதாஸ் இருவரும் ஒரே கல்லூரியில் படித்துக்கொண்டு காதலிக்கின்றனர். இவர்கள் காதல் கர்ப்பம் வரை சென்று விடுகிறது. இந்த கர்ப்பத்தை கலைக்க கவின் கூற அதை மறுக்கிறார் அபர்ணாதாஸ். இதனால் இருவரும் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டு சிறிய வாடகை வீட்டில் வசிக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் கவின் மனைவி பேச்சைக் கேட்காமல் குடித்துவிட்டு ஊதாரியாகவே திரிகிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அபர்ணாதாஸ் குழந்தையைப் பெற்று அதை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு கண்காணாமல் பெற்றோருடன் சென்று விடுகிறார். அதுவரை குடிகாரனாகவும் பொறுப்பற்றும் திரிந்து கொண்டிருந்த கவின் தனது மகனுக்காக நல்ல அப்பாவாக இருக்க முயற்சி செய்து குழந்தையைத் தனி ஆளாக வளர்க்கிறார். இதையடுத்து சில பல ஆண்டுகள் கழித்து மகன் வளர்ந்த சமயம் நாயகி அபர்ணாதாஸை கவின் மீண்டும் எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்கிறது. இதையடுத்து இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா? அபர்ணா தாஸ் ஏன் இவர்களை விட்டு பிரிந்து சென்றார்? இவர்களின் குழந்தையின் நிலை என்னவானது? போன்ற கேள்விகளுக்கு விடையாக வந்துள்ளது ‘டாடா’ திரைப்படம்.

Dada Tamil Full Movie Starring Kavin And Aparna Das Review

மிகவும் அரதப்பழசான ஒரு கதையை அதுவும் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகும் என்று எளிதில் யூகிக்கக் கூடிய வகையில் உள்ள ஒரு கதையை சிறப்பான திரைக்கதை மூலம் இரண்டே கால் மணி நேரம் அயற்சி இல்லாமல் கூறி வெற்றி அடைந்துள்ளார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு. இவரது ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளும், மனதின் ஆழம் வரை சென்று வருடும் அழகான சென்டிமென்ட் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தை கரை சேர்த்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாகத் தந்தைக்கும் மகனுக்குமான சென்டிமென்ட் காட்சிகளும், நாயகனுக்கும் நாயகிக்குமான காதல் காட்சிகளும், மிக தத்ரூபமாக அமைந்து அதே சமயம் எதார்த்தமாகவும் அமைந்து பார்ப்பவர்களுக்கு நல்ல ஃபீல் குட் மூவியை கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகும் என்று முன்கூட்டியே ஆடியன்ஸ்க்கு தெரிந்திருந்தாலும் காட்சிகளுக்கு இடையே எந்த வகையிலும் போர் அடிக்காமல் அதேசமயம் உருகவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து இந்த ஆண்டின் கவனிக்கத்தக்க ஒரு படமாக இப்படத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு. இவருக்கு விருதுகள் நிச்சயம்.

Dada will be a film for everyone: Kavin and Aparna

நாயகன் கவின் எப்போதும் போல் தனது எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக காதல் காட்சிகளிலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் சின்ன சின்ன முக பாவனைகள் மற்றும் அழகான வசன உச்சரிப்புகள் மூலம் கவனம் பெற்றுள்ளார். இவரைப் போலவே தனக்கு அதிக ஸ்பேஸ் இப்படத்தில் இல்லை என்றாலும் கொடுத்த கொஞ்ச நஞ்ச இடங்களிலும் சிறப்பாக ஸ்கோர் செய்து நடித்திருக்கிறார் நாயகி அபர்ணா தாஸ். இவரது மென்மையான நடிப்பு பார்ப்பவர்களுக்கு அனுதாபம் ஏற்படுத்துகிறது. பீஸ்ட் படத்தில் சிறிது நேரமே வந்து மனம் கவர்ந்த இவர் இப்படத்திலும் கவனம் பெற்றுள்ளார். நாயகன் கவினின் நண்பர்களாக வரும் அருவி, வாழ் பட நாயகன் பிரதீப் ஆண்டனி மற்றும் முதல் நீ முடிவும் நீ புகழ் ஹரிஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து மனதில் பதிகின்றனர். குறிப்பாக முதல் பாதியை ஹரிஷும் இரண்டாம் பாதியை பிரதீப் ஆண்டனியும் தங்களது தோள் மேல் சுமந்து படத்தை தூண் போல் நின்று தாங்கிப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு மிகவும் பிளஸ் ஆக அமைந்து பார்ப்பவர்களை சில முக்கியமான ட்ராஜடியான காட்சிகளைக் கூட சிரிக்க வைத்து அயற்சியை தவிர்க்கச் செய்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் பிரதீப் ஆண்டனி ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றுள்ளார்.

Dada Movie Review | Dada Filmy Rating 2023கவினின் தாய் தந்தையாக வரும் பாக்கியராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் எந்தெந்த இடங்களில் எவ்வளவு முக்கியத்துவம் தேவையோ அதை தங்களது அனுபவ நடிப்பால் கொடுத்து படத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளனர். இவர்களது ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளது. கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதியும்படி நடித்துவிட்டு சென்றிருக்கிறார் விடிவி கணேஷ். இவருக்கும் கவினுக்குமான கெமிஸ்ட்ரி லைட்டாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ஞாபகப்படுத்துகிறது. அது நன்றாகவும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. கவினின் மகனாக நடித்திருக்கும் குழந்தை ஆத்விக் படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக மாறி இருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பும் அழகான தமிழ் உச்சரிப்பும் படம் பார்ப்பவர்களை நெகிழச் செய்திருக்கிறது. அதேசமயம் இவருக்கும் கவினுக்குமான அப்பா மகன் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்து அதுவே படத்தையும் கரை சேர்த்திருக்கிறது.

ஜென்மார்ட்டின் இசையில் ‘கிருட்டு கிருட்டு’ பாடல் ஆடல் ரகம். பின்னணி இசை மனதை வருடி உள்ளது. குறிப்பாக காதல் காட்சிகளைக் காட்டிலும் சென்டிமென்ட் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜென்மார்ட்டின். எழிலரசு ஒளிப்பதிவில் காதல் காட்சிகளும் சென்டிமென்ட் காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இன்டீரியர் காட்சிகள் அழகான ஒளி அமைப்புகள் மூலம் அழகாகத் தெரிகிறது.

ஒரு எளிமையான கதையை எடுத்துக்கொண்டு அதை தன் சிறப்பான, எதார்த்தமான, ஜனரஞ்சக திரைக்கதை மூலம் அடுத்தடுத்து நடக்கப் போகும் விஷயங்களை முன்கூட்டியே யூகிக்கும்படி இருந்தாலும் அதைக் கொஞ்சம் கூட அயற்சி ஏற்படாதவாறு அழுத்தமான காட்சி அமைப்புகள் மூலம் சிரிக்கவும், ரசிக்கவும், உருகவும் வைத்து பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு. மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் ஃபீல் குட் மூவியாக மாறி இருக்கிறது ‘டாடா’ திரைப்படம்.

Previous Post

வார்னர் மியூசிக் இந்தியா நிறுவனத்துடன் இணைகிறது டிவோ நிறுவனம் !!!

Next Post

விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

Next Post

விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

Popular News

  • பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • படவாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை நாசம் செய்த இயக்குனர்கள்! அதையும் சலிக்காமல் செய்தேன்.. டிக்டாக் இலக்கியா பகீர் தகவல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • 15 வருடங்களுக்குப் பிறகு ஊர்வசி – கலாரஞ்சனி சகோதரிகள் இணைந்து நடித்துள்ள ‘யோசி’

    0 shares
    Share 0 Tweet 0
  • 83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் ” அஸ்திவாரம்”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாவீரன் பிள்ளை படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..

March 23, 2023

பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

March 23, 2023

39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து – சித்ரா !

March 23, 2023

தமிழக அரசு செயலால் கார்த்தி மகிழ்ச்சி.

March 23, 2023

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

March 23, 2023

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!