• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

முகமூடி அணிந்த கலைஞர் தி ஆர்ட்டிஸ்ட் 404 ‘ஜான் டோ’ படத்திலிருந்து ‘நான் போதுமா’ பாடலை வெளியிட்டார்

by Tamil2daynews
November 4, 2026
in Uncategorized
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

முகமூடி அணிந்த கலைஞர் தி ஆர்ட்டிஸ்ட் 404 ‘ஜான் டோ’ படத்திலிருந்து ‘நான் போதுமா’ பாடலை வெளியிட்டார்

 

‘ஜான் டோ’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘நான் போதுமா’ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. நடிகர் அர்ஜுன் தாஸின் ராப் குரலில் உருவாகியுள்ள இந்த முதல் பாடல், இயக்குநர் மதுமிதாவின் வரவிருக்கும் திரில்லர் படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு முன்பாக, தி ஆர்ட்டிஸ்ட் 404-இன் சுவாரஸ்யமான இசையுலகை அறிமுகப்படுத்துகிறது.

உலகளாவிய இசை உலகில், ஒரு கலைஞரின் முகத்தை விட அவரது அடையாளம் சில சமயங்களில் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். மார்ஷ்மெல்லோ (Marshmello), டிராஃப்ட் பன்க் (Daft Punk) முதல் எம்.எஃப். டூம் (MF DOOM) வரை பல புகழ்பெற்ற சர்வதேச கலைஞர்கள் தங்கள் முகங்களை மறைத்து, முகமூடிகளை தனித்துவமான அடையாளங்களாக மாற்றி, தங்களது முகத்தை காட்டாமலேயே ரசிகர்களுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். அதே சுவாரஸ்யமான உத்தியைத் தமிழ் சினிமாவிற்கு கொண்டுவருகிறார் முகமூடி அணிந்த இசை ஆளுமை ‘தி ஆர்ட்டிஸ்ட் 404’.

வரவிருக்கும் ‘ஜான் டோ’ படத்தின் முதல் பாடலான ‘நான் போதுமா’ மூலம் இவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.இப்பாடலின் சிறப்பம்சமாக, இதன் குரல் கூட்டணி அமைந்துள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் முதன்மை ராப் குரலில் கலக்கியுள்ளார், மேலும் மாளவிகா பாடலுக்கு தன் குரலை வழங்கியுள்ளார். ராப் வரிகளை அர்குஸ் அரியன் (Arcus Aryian) மற்றும் தி ஆர்ட்டிஸ்ட் 404 இணைந்து எழுதியுள்ளனர். இசையமைத்து, ஏற்பாடுகளையும் தி ஆர்ட்டிஸ்ட் 404 செய்துள்ளார். இதன் தனித்துவமான படைப்பாற்றல் மற்றும் வித்தியாசமான இசைக்கூட்டமைப்பு மூலம் ‘நான் போதுமா’ பாடல் ‘ஜான் டோ’ படத்தின் இசை உலகிற்கான ஒரு சிறந்த அறிமுகத்தை வழங்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் நடிகர் அர்ஜுன் தாஸ் தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், ‘ஜான் டோ’ அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக மாறியுள்ளது.

‘தி ஆர்ட்டிஸ்ட் 404’ ஐ சுற்றியுள்ள மர்மமும் படத்தின் விளம்பர பயணத்தில் பேசுபொருளாகியுள்ளது. படத்தின் முன்னோட்ட விழாவில் தனது முகத்தை வெளிப்படுத்தாமல் முகமூடியுடன் தோன்றி அனைவரையும் வியக்க வைத்தார் இந்த கலைஞர். தற்போது ‘நான் போதுமா’ பாடலின் வெளியீட்டின் மூலம் இசை முன்னணிக்கு வந்துள்ளது, அதே நேரத்தில் முகமூடிக்கு‌ பின்னால் இருப்பவர் பற்றிய மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.

மதுமிதா எழுதி இயக்கியுள்ள ‘ஜான் டோ’ படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, அனுபமா குமார், அர்ச்சனா சந்தோக், படவா கோபி, ஸாரா வினீத் சந்தோக் மற்றும் நீரவ் எஸ். ஆகியோர் அடங்கிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை பிரசாத் தேவினேனி மற்றும் சோபு யர்லகா தயாரித்துள்ளனர். கிஷோர் கேடாரி மற்றும் மதுமிதா இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். கதை மற்றும் திரைக்கதையை மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் எழுதியுள்ளனர், சௌம்யா சர்மா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக உள்ளார்.
பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய, அஸ்வினி காலே தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் வெங்கட்ராமன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

‘நான் போதுமா’ பாடல் தற்போது வெளிவந்துள்ள நிலையில், ‘ஜான் டோ’ படம் தனது இசை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. முகம் வெளிப்படும் முன்பே இசையை பேச வைக்கும் இந்த கலைஞருடன், ‘தி ஆர்ட்டிஸ்ட் 404’-ன் மர்மம் நாளுக்கு நாள் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது.

‘ஜான் டோ’ திரைப்படம் வரும் நவம்பர் 13, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) – எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!

Next Post

ஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5-ல் வெளியாகிறது!

Next Post

ஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5-ல் வெளியாகிறது!

Popular News

  • ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

November 4, 2026

ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

November 4, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

November 4, 2026

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 4, 2026

‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

November 4, 2026

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

November 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.