• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்

by Tamil2daynews
October 22, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்

 

பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ மற்றும் அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ போன்ற வெற்றிப் படங்களைத்  தயாரித்த அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு இதை தயாரிக்கிறார்.

அமெரிக்காவில் வசிக்கும் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தை தயாரித்து மிக பிரம்மாண்டமான வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து, பாலாவின் உதவி இயக்குநர் அமீரை சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்து, அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கத்தில், புதிய படம் ஒன்றை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் அபராஜீத் பிலிம்ஸ் பேனரில் கணேஷ் ரகு தற்போது தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
Imageஇப்படத்தின் தொடக்க விழா நிகழ்வில், சேரன் clap – in சொல்ல, சசிக்குமார் camera on செய்ய, அமீர் clap அடித்து, பாலா action சொல்ல, முதல் காட்சியை இயக்குநர் பாலா படமாக்கினார்

இயக்குனர் SA சந்திரசேகர், நடிகர் சிவக்குமார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, திருமதி் பூர்ணிமா பாக்யராஜ மற்றும் இயக்குனர் கரு பழனியப்பன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நந்தா-மௌனம் பேசியதே படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் முதன்முறையாக இசைஞானி’ இளையராஜா நெகிழ்ச்சியான கதைக்களமும், ஊக்கமளிக்கும் திரைக்கதையும் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு,  இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Imageஇன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு, வாஞ்சி முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, பரதன் வசனம் எழுத, பாலுமகேந்திரா கலை இயக்கத்தில், பூபதி வேதகிரி படத்தைத் தொகுக்க, மீரா ஆடை வடிவமைக்க,  பாலு ஸ்டில்ஸ் எடுக்க, பழநி அமாவாசை உடைகள் வடிவமைக்க, ஒலிக்கலவையை ஹரிஷ் கவனிக்க, மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிக்க, கோபி பிரசன்னாவின் விளம்பர வடிவமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பை விஜயகுமார் R S, காசி வர்மன் கவனிக்கின்றனர்.

இப்படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அபராஜீத் பிலிம்ஸ் தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களை அடையாளப்படுத்தி ஊக்குவித்து வரும் தனது திரைப் பயணத்தை இந்த திரைப்படத்தின் மூலம் தொடர்கிறது.

Previous Post

காந்தாரா படத்தைத் தொடர்ந்து தெய்வீக மர்மத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’ – ஜனவரியில் படப்பிடிப்பு தொடக்கம்!

Next Post

‘எல்லம்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 5, 2027 அன்று வெளியாகிறது!

Next Post

'எல்லம்மா' திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 5, 2027 அன்று வெளியாகிறது!

Popular News

  • ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

    ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu) 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

October 22, 2026

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

October 22, 2026

டி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல்!

October 22, 2026

சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu) 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு!

October 22, 2026

ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் நடைபெறுகிறது!

October 22, 2026

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

October 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.