• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்

by Tamil2daynews
September 9, 2020
in சினிமா செய்திகள்
0
ஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

புதிய முயற்சி எடுக்கும் போது, சிலர் பக்கபலமாக இருந்தால் கூடுதல் பலம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால், திரைத்துறையில் புதிய முயற்சிகள் எடுக்கும் போது  “ஏன் இவருக்கு இந்த வேலை” என்று பேசுவதற்கே பலர் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே புதிய முயற்சிக்கு நாங்கள் கைக் கொடுக்கிறோம் என்பார்கள். அப்படியொரு கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது.

‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’  என்று தொடரும் ஜி.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்தது ஹாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது.  ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் தனது தடத்தை வலுவாக பதிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.  ‘கோட் நைட்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷின் இந்த ஹாலிவுட் பாய்ச்சலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இணைந்துள்ளனர். ஆம்ல், 17-ம் தேதி இந்தப் பாடலை இருவரும் வெளியிடவுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் ஜி.வி.பிரகாஷுக்காக ஒன்றிணைகிறார்கள். ஒவ்வொருவருடைய பெயராக அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

இந்தப் பாடல்  ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல்.  ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.

எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும்.  ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.

இந்தப் பாடல் ஜிவி பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், ஜெஹோவாசன் அல்காரால் கலவை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

Previous Post

Rebel Star Prabhas adopts Khajipalli Urban Forest

Next Post

“நீங்கள் ப்ராவில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்க” என்று கேட்ட ரசிகருக்கு நடிகை அனுப்பிய புகைப்படம் !! நீங்களே பாருங்க !!

Next Post
“நீங்கள் ப்ராவில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்க” என்று கேட்ட ரசிகருக்கு நடிகை அனுப்பிய புகைப்படம் !! நீங்களே பாருங்க !!

“நீங்கள் ப்ராவில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்க” என்று கேட்ட ரசிகருக்கு நடிகை அனுப்பிய புகைப்படம் !! நீங்களே பாருங்க !!

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.