• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

திமுக பிரமுகரின் காம லீலைகள்

by Tamil2daynews
March 11, 2020
in செய்திகள்
0
திமுக பிரமுகரின் காம லீலைகள்
0
SHARES
177
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பெண் விவகாரம்.. கள்ளக்காதல்.. மொத்தம் 9 கேஸ்.. வாணியம்பாடி சாரதிகுமார் மீது.. அதிர்ச்சியில் திமுக!
சென்னை: பெண் விவகாரம், கள்ள தொடர்பு, முறைகேடு, நில அபகரிப்பு இப்படி பல விவகாரங்களில் சிக்கி உள்ள வாணியம்பாடி திமுக பிரமுகர் மீது மொத்தம் 9 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. இது திமுக வட்டாரத்தையே பெரும் சலசலப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
சென்னை, அடையாறை சேர்ந்தவர் ரம்யா.. 28 வயதாகிறது.. இவர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அந்த மனுவிலும் செய்தியாளர்கள் முன்னிலையிலும் சொன்னதாவது:
“சாரதிகுமாரை நான் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், 2016 பிப்ரவரி 10ல் கல்யாணம் செய்தேன்.. 2 வயசில் பெண் குழந்தை உள்ளது. ஆனால் என்னை கல்யாணம் செய்வதற்கு முன், சாரதிகுமார், சேலம் சட்ட கல்லுாரியில் படித்தபோது, அவரை விட, 15 வயது மூத்தவரான, சத்யபிரியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சத்யபிரியாவுக்கு கல்யாணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர். படுப்பது கூட பார்த்தீங்கன்னா, எனது கணவர் நடுவில் படுத்தால், நான் இந்த பக்கம் படுக்கணும், அந்த அம்மா அந்த பக்கம் படுக்கணும். அவங்க 2 பேரும்தான் கட்டிப்பிடிச்சிட்டு படுப்பாங்க. ஒரு சினிமாவுக்கு போனால்கூட, அவர் நடுவில் இருப்பார். இதை பற்றி பலமுறை கேட்டு தகராறு வெடித்துள்ளது.
சத்யபிரியாவுடன் சேர்ந்து, என் கணவர் கும்மாளம் போடுவதை பற்றி, இம்மாதம், 19ம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் தந்தேன்.. அவர் நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்.. உடனே என் கணவர், தாலியை கழற்றி தருமாறு கேட்டு, கழுத்தில் கத்தியை வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் புகாரிலும் செய்தியாளர்கள் மத்தியிலும் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும், சாரதி குமார் சேலம் அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த போட்டோ , வீடியோ , ஆடியோ உரையாடல் போன்ற ஆதாரங்களையும் ரம்யா போலீசாரிடம் ஒப்படைத்தார். அதையடுத்து , வாணியம்பாடி நகரப் பொறுப்பிலிருந்து சாரதி குமார் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் சாரதிகுமார் மீது மேலும் ஒரு புகார் கிளம்பி உள்ளது.. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்த புகாரிலும் சிக்கியுள்ளார் சாரதி குமார்.
இதுதொடர்பாக வாணியம்பாடியைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் திருப்பத்தூர் எஸ்பி ஆபீசில் புகார் தந்தார். அதில், “யோகம்மாள் என்ற 42 வயது மனநலம் பாதிக்கப்பட்டவர்.. அவர் ஆதரவற்றவரும்கூட.. தங்கையின் பராமரிப்பில் இருந்தார்.. ஆனால் கடந்த 2015-ல் அவரது தங்கையும் மாரடைப்பால் இறந்துவிட்டார்.. அதனால் யோகம்மாள் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டார். பிறகு என் வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளேன். யோகம்மாளுக்கு செட்டியப்பனூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை, சாரதி குமார் அபகரித்து கொண்டார்.. இதைபற்றி கேட்டால் மிரட்டல் விடுக்கிறார்” என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையிலும், வாணியம்பாடி தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி திமுக பிரமுகர் சாரதி குமார், அவரது நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, ஜோசப் செல்வகுமார், சரவண பாபு ஆகியோர் மீது கொலை மிரட்டல் உட்படப் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர். ஏற்கனவே மனைவி தந்த புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவாகி உள்ளன.. இப்போது 6 வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் சாரதிகுமார் மீது பாய்ந்துள்ளது.. இது சம்பந்தமான தொடர் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Previous Post

Kaavalthurai Ungal Nanban Stills

Next Post

Plan Panni Pannanum Stills

Next Post
Plan Panni Pannanum Stills

Plan Panni Pannanum Stills

Popular News

  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.