• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா, தில்ராஜு மற்றும் ரவி கிரண் கோலா கூட்டணியில் டிசம்பர் 2026-ல் வெளியாகும் ‘ரவுடி ஜனார்தனா’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது!

by Tamil2daynews
December 24, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய் தேவரகொண்டா, தில்ராஜு மற்றும் ரவி கிரண் கோலா கூட்டணியில் டிசம்பர் 2026-ல் வெளியாகும் ‘ரவுடி ஜனார்தனா’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது!

 

மதிப்புமிக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி காரு’ மூலம் பாராட்டுகளைப் பெற்ற ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை, தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

ஹைதராபாத்தில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்வில் படத்தின் இரத்தம் தோய்ந்த உலகத்தை அறிமுகப்படுத்தியதுடன் ‘ரவுடி ஜனார்த்தனா’ என்ற கிளிம்ப்ஸூடன் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. படம் பற்றிய ஆர்வத்தையும் பல கேள்விகளையும் பார்வையாளர்களுக்கு இந்த கிளிம்ப்ஸ் எழுப்புகிறது. புதிய இடம், புதிய பேச்சுவழக்கு, வித்தியாசமான தோற்றம் மற்றும் இதுவரை பார்த்திராத உலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை இந்தப் படத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
Imageதற்போது வெளியாகியுள்ள இந்த கிளிம்ப்ஸ் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு டைட்டில் குறித்தான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக்கியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தீவிரமான திரை இருப்பு, கத்தி ஏந்தியிருப்பது, அவரது இரத்தக்கறை படிந்த, வலிமையான உடலமைப்பு, மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்துவது என இந்தப் படத்தில் புது அவதாரம் எடுத்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் கடுமையான தோற்றம், அற்புதமான வசன உச்சரிப்பு மற்றும் இரண்டு நிமிட கிளிம்ப்ஸில் அவரது அதிரடியான நடிப்பு ஆகியவை படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை மற்றும் ஆனந்த் சி. சந்திரனின் ஒளிப்பதிவு, சுப்ரீம் சுந்தரின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் தீவிரத்தை மேலும் அதிகமாக்கும். 1980 களில் கிழக்கு கோதாவரியை களமாகக் கொண்ட இந்தப் படம் டிசம்பர் 2026 இல் உலகளவில் திரையரங்குகளில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
பேனர்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்கள்: தில் ராஜு, ஷிரிஷ்
கதை மற்றும் இயக்கம்: ரவி கிரண் கோலா
ஒளிப்பதிவு: ஆனந்த் சி சந்திரன்
இசை: கிறிஸ்டோ சேவியர்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: டினோ ஷங்கர்
கூடுதல் திரைக்கதை: ஜனார்தன் பசுமார்த்தி
ஆக்‌ஷன்: சுப்ரீம் சுந்தர்
கலை இயக்குனர்: சத்யநாராயணா DY
மக்கள் தொடர்பு: ஜிஎஸ்கே மீடியா (சுரேஷ் – ஸ்ரீனிவாஸ்)
மியூசிக் பேனர்: டி சீரிஸ்

Previous Post

45 – திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

Next Post

“பல்ஸ்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா;

Next Post

“பல்ஸ்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா;

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0
  • *‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது*  

    0 shares
    Share 0 Tweet 0
  • பாசத்தில் போட்டிபோடும் அண்ணன் தங்கை கதை…

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.