• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஏகே புரொடக்ஷன்ஸ் தளபதி ஆர். ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிம்பிளிக்கி பிலாப்பி’ திரைப்படத்தின் டீஸர் கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டது

by Tamil2daynews
May 25, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஏகே புரொடக்ஷன்ஸ்  தளபதி ஆர். ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில்  உருவாகியுள்ள ‘பிம்பிளிக்கி பிலாப்பி’ திரைப்படத்தின் டீஸர் கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டது

 

ஏகே புரொடக்ஷன்ஸ்  தளபதி ஆர். ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிம்பிளிக்கி பிலாப்பி’ படத்தின் டீஸர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்ட ‘பிம்பிளிக்கி பிலாப்பி’ டீசரை பார்த்த உலகெங்கிலும் இருந்து வந்திருந்த இயக்குநர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர்  வெகுவாக பாராட்டினர்.
பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் உள்ள அழகான பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் தீனா மற்றும் மரிய செல்வம் ஆவர்.
ஹாரர்-டார்க் காமெடி படமாக உருவாகியுள்ள ‘பிம்பிளிக்கி பிலாப்பி’ பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 2,000 கோடி வரை பரிசாக வெல்லக் கூடிய லாட்டரி முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி சீட்டை தேடி செல்லும் கும்பல் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொள்கிறது. அதன் பின்னர் என்ன ஆகிறது என்பதே படத்தின் மையக்கதை.
இயக்குநராக அறிமுகமாகும் ஆண்டனி ‘எல்ஸா’ என்கிற பிரெஞ்சு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படம் சில வருடங்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றுள்ளது.
‘பிம்பிளிக்கி பிலாப்பி’ முதன்மை கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். கதாநாயகர்களாக வெங்காராஜ், ராஜேந்திரன், கதாநாயகிகளாக நர்மதா, ஆன் சாமுவேல் ஆகியோர் நடித்துள்ளனர். ஆண்டனி படத்தின் வில்லனாக நடித்துள்ளார். தியரி, கிருஷ்ணகாந்த், ஜீவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த குவாகு என்பவர் தமிழில் பேசி நடித்துள்ளார்.
படத்தொகுப்பு பணிகளை ராம் மற்றும் சதிஷ் ஆகியோர் மேற்கொள்கின்றனர். இயக்குநர் ஆண்டனி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கிறார். கலரிஸ்டாக வீரராகவன் பணியாற்றுகிறார். இப்படத்திற்கு ஜோகன் சிவனேஷ் இசையமைக்க, சாண்டி மாஸ்டர் நடன இயக்கத்தை மேற்கொள்கிறார்.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஏகே புரொடக்ஷன்ஸ்  தளபதி ஆர். ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிம்பிளிக்கி பிலாப்பி’ படத்தின் டீஸர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் விரைவில் வெளியாக இப்படம் தயாராகி வருகிறது.
Previous Post

‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

Next Post

ரியல் எஸ்டேட் மோசடிகள் பற்றிப் பேசும் படம் ”உன்னால் என்னால்’

Next Post

ரியல் எஸ்டேட் மோசடிகள் பற்றிப் பேசும் படம் ''உன்னால் என்னால்'

Popular News

  • இதயம் முரளி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவ் பஹதூர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இதயம் முரளி – விமர்சனம்

July 12, 2026

வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

July 12, 2026

‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

July 12, 2026

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

July 12, 2026

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

July 12, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.