• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தியேட்டரில் பொறி பறக்கும்!  “ஈஸ்வரன்” படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன்.

by Tamil2daynews
January 15, 2021
in சினிமா செய்திகள்
0
தியேட்டரில் பொறி பறக்கும்!  “ஈஸ்வரன்” படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன்.
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகள் கோலகலத்திற்கு தயாராகி வருகிறது. புத்தம் புதிய தோற்றத்தில் மிக இளமையாக சிம்பு கலக்கியிருக்கும் “ஈஸ்வரன்” பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. கிராமத்து பின்னணியில் ஒரு அசத்தலான கதையுடன் குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.


படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது…
ஈஸ்வரன் படத்தின் முதல் பொறி
என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பால் உருவானதுதான். ஒரு முறை, ஜோசியர் ஒருவர் எங்கள் குடும்பத்தில் ஒரு எண்ணிக்கை குறையும் என்று கூறிய சம்பவத்தின் தாக்கம்..  அதனால் என் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள்.. அது கதையாக என்னுள் ஈஸ்வரனாக உருவானது. இதை நடிகர் சிம்புவிடம் கதை சொல்ல வாய்ப்பு வந்தபோது , நான் ஒரு பழிவாங்கும் கதையை வைத்திருந்தேன். ஆனால் அவருக்கு பழிவாங்கும் கதை மேல பெரிய ஈர்ப்பு இல்லை. பிறகு இந்த கதையை சொன்னேன், அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. இது அவருக்கு ஒரு திருப்புமுனையாக அட்டகாசமான கம்பேக்காக இருக்கும் என நம்பினார். உடனே ஒத்துக்கொண்டார். படப்பிடிப்பில் வெகு சுறுசுறுப்பாக இருந்தார். அவரது ஒத்துழைப்பால் தான் படத்தை வேகமாக முடிக்க முடிந்தது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இது  எனக்கு நான்காவது படம். அவருடன்  பணியாற்றும் போது எப்போதும் பிரம்மிப்பாகவே  இருக்கும். இத்தனை சாதனைகளுக்கு பிறகும் மிகவும் எளிமையாக இருப்பார். என்னுடைய படங்கள் வேகமாக படப்பிடிப்பு முடிவதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு காரணம் நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான். படப்பிடிப்பு என்றாலே எனக்கு
ரொம்ப பிடிக்கும். அதுனால வேகமாக ஓடிக்கிட்டு இருப்பேன்.
படத்தின் தரம் குறைய கூடாது என்பது மட்டும் தான் குறிக்கோள் ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான வகையிலும் அதே நேரத்தில் தரத்திலும் சிறந்த படங்களை தர வேண்டும். இந்தப்படம் திரையுலகிற்கு ஒரு புத்துணர்ச்சி தரும். சிம்பு ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக, குடும்பங்களோடு கொண்டாடும் படமாக இருக்கும். இப்படம் தியேட்டரில் பொறி பறக்கும் அனுபவத்தை தரும். படத்தை ரசிகர்கள் ரசிக்க நானும் ஆவலோடு வெளியீட்டிற்காக காத்திருக்கிறேன் என்றார்.

மாதவ் மீடியா தயாரித்திருக்கும் “ஈஸ்வரன்” படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். சிம்பு, நித்தி அகர்வால் நாயகன் நாயகியாக நடிக்க பாரதிராஜா, ஸ்டன் சிவா  மிக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜனவரி 14,2021 உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

Previous Post

நடிகர் ஜெகன் புது பொங்கல்..!

Next Post

பல உண்மைகளை உடைக்கும் பாப்பி லோன்..!

Next Post
பல உண்மைகளை உடைக்கும் பாப்பி லோன்..!

பல உண்மைகளை உடைக்கும் பாப்பி லோன்..!

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.