• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின்!

by Tamil2daynews
March 16, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின்!

 

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கக்கூடிய கதைகள் வித்தியாசமானதாகவும் பார்வையாளர்களை படத்தில் ஒன்றக்கூடிய வகையிலும் அமைந்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான கதைகள் அவர் நடிக்கக்கூடியப் படங்களின் எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கின்றன. அந்த வகையில், மார்ச் 17, 2023 அன்று உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கக்கூடிய ‘கண்ணை நம்பாதே’ படத்தின் எதிர்ப்பார்ப்பும் அதிக அளவில் இருக்கிறது.
Ananda Vikatan - 31 August 2022 - நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்! | director m maran interview about Kannai Nambathey movieஇந்தப் படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து உதயநிதி பகிர்ந்திருப்பதாவது, ‘’கண்ணை நம்பாதே’ திரைப்படம் உருவான விதம் என்பது ரொம்பவே ஸ்பெஷல் மற்றும் சவாலான ஒன்று. எதிர்பாராத பல சவால்களுக்கு மத்தியில் இதை படமாக்கியுள்ளோம். அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தைப் பார்த்தப் பிறகு மு. மாறன் இயக்கத்தில் நடிக்கலாம் என்று அவரை சந்தித்தேன். முதலில் அவர் என்னிடம் ஒரு எமோஷனலான லவ் ஸ்டோரியை சொன்னார். வெவ்வேறு ஜானர்களில் படம் முயற்சிக்க விரும்பியதையும் கூறினார். ஆனால், அவருடைய முதல் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதைப் போன்றே ஒரு க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லருடன் நிமிடத்திற்கு நிமிடம் ஆச்சரியமும் ட்விட்ஸ்ட்டும் இருக்கும்படியான கதையை உருவாக்க அவருக்கு வேண்டுகோள் வைத்தேன். அதன் பிறகு ‘கண்ணை நம்பாதே’ படத்தின் கதையை சொன்னதும் எனக்குப் பிடித்திருந்தது. உடனே படப்பிடிப்பிற்கு கிளம்பினோம். ஆனால், கொரோனா, என்னுடைய அரசியல் பயணம் ஆகிய காரணங்களால் இந்தப் படத்தின் பணிகளில் தாமதமானது. மு. மாறனுக்கும் ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மிகவும் பொறுமையாகவும் தேவையான ஆதரவையும் கொடுத்தார்கள். எல்லாருமே இதில் கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். இந்தப் படத்தின் பெரும்பகுதி இரவு நேரத்தில் சாலை ஓரங்களில் படமாக்கப்பட்டது.
இத்தனை கஷ்டங்களைத் தாண்டி இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 17 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தின் தூண். மிஸ்ட்ரி த்ரில்லர் கதைக்குத் தேவையான விஷயங்களை இதில் கொடுத்துள்ளனர். ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைக்கும்படியான எதிர்பாராத ட்விஸ்ட் மற்றும் ஆச்சரியங்களுடன் இருக்கும்” என்றார்.
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினும், ஆத்மிகாவும் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ கருப்பையா, சென்ட்ராயன், மற்றும் கு. ஞானசம்பந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

LIPI Cine Crafts சார்பில் விஎன் ரஞ்சித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை மு. மாறன் எழுதி இயக்கியுள்ளார்.

இசை: சித்து குமார்,
ஒளிப்பதிவு: ஜலந்தர் வாசன்,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்,
கலை: என்.கே. ராகுல் பி.எஃப்.ஏ,
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: பிரபாகரன், வினோத் குமார் சி,
தயாரிப்புக் கட்டுப்பாடு: சுந்தரம் & கார்த்திக்,
சண்டைப்பயிற்சி: ஆர். சக்தி சரவணன்,
ஆடை வடிவமைப்பாளர்: ஆர். திலகப்ரியா சண்முகம்,
ஒப்பனை: முனியராஜ்,
படங்கள்: ராமசுப்பு,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை மார்ச் 17, 2023 அன்று வெளியிடுகிறது.


Previous Post

வெங்கட் பிரபுவின் கஸ்டடி டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

Next Post

‘நாட்டு நாட்டு…’ பாடல் ஆஸ்கார் விருது பெற்றது குறித்து ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் பெருமகிழ்ச்சி

Next Post

'நாட்டு நாட்டு...' பாடல் ஆஸ்கார் விருது பெற்றது குறித்து 'குளோபல் ஸ்டார்' ராம் சரண் பெருமகிழ்ச்சி

Popular News

  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்

    0 shares
    Share 0 Tweet 0
  • “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தில் நடிப்பில் மிரட்டிய விருமாண்டி அபிராமி!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

July 28, 2026

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

July 28, 2026

‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

July 28, 2026

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

July 28, 2026

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

July 28, 2026

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.