நடிகர் சந்தானத்தின் குடும்பத்திலிருந்து மற்றும் ஒரு தயாரிப்பாளர்..!
NN pictures சார்பில் தயாரிப்பாளர்கள் தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோரின் முதல் தயாரிப்பாக, இயக்குநர் விவேக் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிக்கும், ரொமான்ஸ் காமெடி திரைப்படத்தின் பூஜை சென்னையில் இனிதே நடைபெற்றது.
நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் அவர்கள், தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார். NN pictures சார்பில் இவர் தயாரிக்கும் “Production No 1 திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, PVR மீனா, Divo தலைமை அதிகாரி விசு ஆகியோருடன் 4you கம்பெனி நிறுவனர் R. பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொள்ள, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் வருவது அரிதாகிவிட்டது, அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் முழுக்க முழுக்க இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாகவுள்ளது.

