• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மெல்லிசை – விமர்சனம்

by Tamil2daynews
January 30, 2026
in விமர்சனம்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மெல்லிசை – விமர்சனம் 

பள்ளியில் பி.டி ஆசிரியராக இருக்கிறார் ராஜன் (கிஷோர் குமார்). அவரது மனைவி வித்யா (சுபத்ரா) அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். ராஜனுக்கு டிவியில் நடக்கும் பாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வருகிறது. அதில் பிரபலமாகிறார். போட்டியில் அவர் வெல்வாரா, இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதனால் பி.டி. மாஸ்டராக இருக்கும் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டி இருக்கிறது. இது அவரது ஆசிரியர் வேலையை பறிக்கிறது. பின்னர் குடும்பத்தில் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கும் போது அவரது இரண்டு பிள்ளைகள் கதி என்னவாகிறது என்பதே கதை.

கிஷோர் குமார் பல படங்களில் வில்லனாக நடித்திருப்பவர், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார். அவர் முழுக்க முழுக்க ஒருஹீரோவாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவரது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதை ஒப்புக்கொள்ள தயக்கம் இருந்தாலும் நல்ல வேலையாக காதல் டூயட் எதுவும் வைக்காமல் மேடையில் மட்டுமே அவர் பாடுவது போல் காட்டி இருப்பது கதாபாத்திரத்தை சிதைக்காமல் இருக்கிறது.

கிஷோர் இதுவரை படங்களில் அதிகமாக பாடல் பாடி நடித்ததுபோல் பார்த்த ஞாபகம் இல்லை, இந்த படத்தில் அவர் பாடகராக மாறி அதற்கு ஏற்ப தனது நடிப்பை அலட்டிக் கொள்ளாமல் வழங்கி இருக்கிறார், அவ்வப்போது அவருக்கு காஸ்டியூம் மாற்றம் செய்திருப்பது புத்திசாலித்தனம்உச்சகட்ட சாயல் பாடலுக்கு கிஷோர் அழுத்தம் கொடுத்து நடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

கிஷோர் மனைவியாக வரும் சுபத்திரா இயல்பான நடிப்பால் கவர்கிறார். கணவரிடம் கோபித்துக் கொள்வது, சிணுங்குவது, பிள்ளைகளிடம் பாசம் காட்டுவது என கதாபாத்திரத்தோடு வாழ்ந்திருக்கிறார்.

கிஷோர் பிள்ளைகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன் இருவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்தில் சில இடங்களில் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் போட்டி பாடலுக்கு உச்ச சாயலில் இசையமைத்து ஒரு பாடலை மனதில் பதிய வைக்கிறார் இசை அமைப்பாளர் சங்கர் ரங்கராஜன்.

தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு பளிச்.

ஒரு மென்மையான கதையை இசை லயத்துடன் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் திரவ். இவரே படமும் தயாரித்திருக்கிறார். ஆக்சன், அதிரடி, மர்மம், பேய் கதை என்று பல்வேறு ஜர்னர்களில் படங்கள் வந்து கொண்டிருக்கும் போட்டியான இந்த நிலையில் மெல்லிசை என்ற மென்மையான கதையை எந்த நம்பிக்கையில் இயக்குனர் கையில் எடுத்தார் என்பது புரியவில்லை. அன்பை பரப்புவதற்காக படம் எடுத்ததாக இயக்குனர் குறிப்பிடுகிறார். அந்த அன்பு ரசிகர்களிடம் ஒர்க்கவுட் ஆகுமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன.

மிடில் கிளாஸ் கதையை கவனமாக கையாண்ட இயக்குனருக்கு ஒரு வாழ்த்துக்கள்.

இந்த மெல்லிசை அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் – 3.5 / 5
Previous Post

காந்தி டாக்ஸ் – விமர்சனம்

Next Post

ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!

Next Post

ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!

Popular News

  • ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

    0 shares
    Share 0 Tweet 0
  • இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • முத்து என்கிற – காட்டான் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சாத்தான் தி டார்க்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நீ Forever – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

March 29, 2026

சாத்தான் தி டார்க்’ – விமர்சனம்

March 29, 2026

முத்து என்கிற – காட்டான் விமர்சனம்

March 29, 2026

இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

March 29, 2026

ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல்!

March 29, 2026
நீ  Forever – விமர்சனம்

நீ Forever – விமர்சனம்

March 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.