ஏற்கனவே சுந்தர் சி தலைநகரம் 2 அதை மனதில் வைத்து ‘நகரம்’ என்கிற படத்தை தயாரித்தார் சுந்தர்.சி. அந்த படம் மக்கள் மத்தியில் சரியா வரவேற்பு பெறல .ஆனா இயக்குனர் v.z.துரை திரும்பவும் தலைநகரம் 2 என்கிற பெயரிலேயே ஒரு படம் எடுத்திருக்கிறார் படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.
வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா, ‘பாகுபலி’ பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் என பலரும் நடித்துள்ள ‘தலைநகரம் 2’. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.எம். பிரபாகரன் தயாரித்துள்ளார்.


அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அந்த மூன்று பெண்கள் அவர்களைப் பார்த்தாலே படம் பார்ப்பவர்களுக்கு பயத்தை உண்டாக்குவது நிஜம் .
அதிலும் நடன இயக்குனர் விஜி அவர்கள் கண்ணில் வரும் அந்த ஆக்ரோஷமும் அந்த கோவமும் பழித்தீர்க்க காத்திருக்கும் வஞ்சமும் எப்பப்பா நடன இயக்குனர் விஜி அவர்களே உங்களுக்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் காத்திருக்கிறது வாருங்கள்.
முகவரி மூலம் வந்த துரை தொட்டி ஜெயா படத்தின் மூலம் தன்னால் ஆக்ஷன் படமும் இயக்க முடியும் என நிரூபித்த வி.இசட்.துரைக்கு இந்த படம் என்ன சொல்லவா வேண்டும். பக்கா ஆக்ஷன் பேக்கேஜை கொடுத்துள்ளார். காட்சிகளில் இருக்கும் மெனக்கெடல்கள் திரைக்கதையில் ஆங்காங்கே இல்லாமல் போவது மைனஸாக உள்ளது. குறிப்பாக சுந்தர்.சியை பழிவாங்க நினைக்கும் காட்சிகள் பெரும்பாலும் வசனங்களோடு கடந்து போகிறது. ஆக்ஷன் படங்கள் என்றால் ரசிகர்களை அப்படியே ஒன்ற வைக்க வேண்டும். படத்தில் அத்தனை கொலை நடக்கிறது. போலீஸ் எங்கேயுமே வரவில்லை.
முதல் பாகத்தில் எப்படி ரவுடிகளை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் போலீஸ், திருந்த நினைப்பவனை தடுக்கும் போலீஸ் என இருவேறு கேரக்டர்கள் காட்டப்பட்டிருக்கும். ஆனால் இதில் அப்படியான காட்சிகளே இல்லை. அதேபோல் பழிவாங்கும் காட்சிகளை அப்படியே கொடூரமாக காட்டுவதை தவிர்த்திருக்கலாம்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு உதவியுள்ளது.
கதாநாயகி ஒரு நடிகையாக வருவதால் அவ்வளவு ஆபாசம் கலந்த கிளாமர் தேவையா என்று சிந்திக்க வைக்கிறது.
ஆனாலும் முதல் பாகத்தை விட பெட்டராக இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என சொதப்புபவர்கள் மத்தியில் தலைநகரம் 2 தப்பியுள்ளது என சொல்லலாம்.
மொத்தத்தில் இந்த தலைநகரம் -2 பெரும் நகரம்…









