ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு..!

by Tamil2daynews
June 28, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு  குறும்படம் வெளியீடு..!

 

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்  கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட குறும்படங்கள் சமூகத்தில் மக்களிடமும் பார்வையாளர்களிடமும் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பல்துறைகளில் சிறந்து விளங்கும்  முன்னணி நட்சத்திரங்கள், நம்பிக்கைக்குரிய திறமையாளர்கள்  கொண்ட குழுவிலிருந்து அப்படிப்பட்ட படைப்பு வரும்போது, அது கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது உறுதி. ‘போதைக்கு எதிரான போர்’ என்ற குறும்படமும் அப்படித்தான். போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்த இந்த குறும்படத்தை வேலூர் இன்று காலை தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை டிஐஜி டாக்டர் Z ஆனி விஜயா ஐபிஎஸ் & டாக்டர் கே.எஸ். பாலகிருஷ்ணன் BVSc ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

போதைப்பொருள் பழக்கம் நம் இளைய சமுதாயத்தை முற்றிலுமாக அழித்து கொண்டிருக்கிறது. சிறிதாக ஆரம்பமாகும் இப்பழக்கம் நம்மை அடிமையாக்கி நம் வாழ்வையே முற்றிலுமாக அழித்து விடுகிறது. போதைப்பழக்கத்தில் சிக்கிகொள்வோரை மீட்க அரசும் காவல்துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு முயற்சியாக போதைப்பொருள் பயன்பாட்டின் கெடுதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த குறும்படம் உருவாகியுள்ளது.

‘போதைக்கு எதிரான போர்’ எனும் இந்த குறும்படத்தில் நட்சத்திர நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்துள்ளார். திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்தின் முன்னாள் இணை இயக்குனரான திரு. காகா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை RKG குரூப்பின் திரு. ஜி.சந்தோஷ் குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கேபி இசையமைக்க, ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தொழில்நுட்பக் குழுவில் தமிழ் அரசன் (எடிட்டர்), வி ஆர் ராஜவேல் (கலை), தியாகராஜன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வில்பிரட் தாமஸ் (கிரியேட்டிவ் குழு), M J ராஜு (ஒலி வடிவமைப்பாளர்), வீர ராகவன் (டிஐ கலரிஸ்ட்), வசந்த் (கன்ஃபார்மிஸ்ட்) , வி வேணுகோபால் (தயாரிப்பு மேலாளர்), திலக்ராஜ் எம் (தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்), வினோத் குமார் (ஒருங்கிணைப்பாளர்), சதீஷ் (விஎஃப்எக்ஸ்), சஜித் அலி (வசனங்கள்), யுவராஜ் (வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை & RKG Infotainment இணைந்து பொதுமக்கள் நலன் கருதி இந்த குறும்படத்தினை  வெளியிட்டுள்ளனர்.
Previous Post

நாடக குழுவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் ..!

Next Post

உருவ கேலியும் ஒருவகை வன்முறைதான் – இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன்

Next Post

உருவ கேலியும் ஒருவகை வன்முறைதான் - இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • பேருந்துகளில் அதிகளவு இடம் பெற்றிருக்கும் திருக்குறள் தான் ‘அடங்காமை’யின் கதை இயக்குநர் விளக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ஐமா ‘சர்வைவல் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Turmeric Mantra an artisanal pickles and podis brand was launched by social activist and columnist Apsara Reddy.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்..!

February 2, 2023

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ .

February 2, 2023

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

February 2, 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

February 2, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

February 2, 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

February 2, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!