• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

43 இடங்களில் நடந்த உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவான “ஜோதி” படத்தின் முதல் பாடல் வெளியீடு..!

by Tamil2daynews
June 21, 2022
in சினிமா செய்திகள்
0
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
43 இடங்களில்  நடந்த உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவான “ஜோதி” படத்தின் முதல் பாடல் வெளியீடு..!

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடத்தில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான “ஜோதி” திரைப்படத்தின் முதல் பாடல் “போவதெங்கே” நேற்று SRM  கல்லூரியில் ஆயிரம் மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் “SP ராஜா சேதுபதி”, இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா”, (மண்டேலா) படத்தின் நாயகி “ஷீலா ராஜ்குமார்”, இசையமைப்பாளர் “ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்”, பாடலாசிரியர் “கார்த்திக் நேத்தா”, துணை நடிகர் “ஹரி க்ரிஷ்” ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி அனைத்து மாணவ மருத்துவகள் முன்னிலையில் தயாரிப்பாளர் வீடியோ எடுக்க, “Let’s launch Povathengea from JOTHI” என்று மாணவர்கள் கரகோஷமிட படத்தின் முதல் பாடல் காட்சி திரையிடப்பட்டது.இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று shots ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். அதன்பின் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று படத்தின் முதல் பத்து நிமிட காட்சியை மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. காட்சி முழுவதும் அதிர்ச்சியில் உரைந்திருந்த அரங்கு “ஜோதி ஜூலை வெளியீடு” என்று நிறைவு பெற்றவுடன் விசில் சத்தம் அரங்கு முழுவதும் நிறைந்திருந்தது. இந்த ஆரவாரம் போன்றே மக்கள் மத்தியிலும் நிகழும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இப் படத்தை பற்றி தயாரிப்பாளர் “SP ராஜா சேதுபதி” கூறியதாவது.

சதுரங்க வேட்டை  படத்தொகுப்பாளராகிய நான் இந்த படத்தை தயாரித்தற்கு முக்கிய காரணமே சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சதுரங்க வேட்டை படத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டது, அதுபோலவே ஜோதி படத்தின் கரு சாமானிய பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டிருந்ததால் சமூக அக்கறை உள்ள நல்ல திரைப்படங்களை மக்கள் எப்போதும் கைவிட்டது இல்லை.இதன் கருவும், நடந்த சம்பவமும், இதன் பின்னணியும் என் தூக்கத்தை தொலைத்தது. இதனால் ஜோதி திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன். என்று கூறினார்.

இப்படத்தை பற்றி இயக்குனர்  “AV கிருஷ்ண பரமாத்மா” கூறியதாவது. 
சமூக அக்கறைகொண்ட கதை கருவை விறுவிறுப்பான திரைக்கதையுடனும்,எதார்த்தமான வசனங்களுடனும் எடுக்கப்பட்ட “ஜோதி ” திரைப்படம் எமோஷனல்  கலந்த கிரைம் திரில்லராக  வந்திருக்கிறது. இப்படத்தின் முதல் பாடலாகிய போவதெங்கே பாடலை மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்து திரையில்காணும்படி கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.
இப்படத்தைப் பற்றி பாடலாசிரியர் “கார்த்திக் நேத்தா” கூறியதாவது. 

இப்படத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, எனது சொந்த வாழ்வின் நிகழ்வை இப்படம் பிரதிபலிப்பதால் அனைத்து பாடல் வரிகளும் மிகவும் ஆழமாகவும், அற்தமுள்ளதாகவும் அமைக்க முடிந்தது. படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் என் வரிகளுக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது.முதல் பத்து நிமிட காட்சியை கண்டு மிரண்டு விட்டேன். இப்படத்தையும்,பாடல்களையும் மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன் என கூறினார்.

இப்படத்தைப் பற்றி இசையமைப்பாளர் “ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்” கூறியதாவது. 
அர்ஜுன் ரெட்டி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் போலவே இந்த படமும் பெரிய ஹிட்டாகும். இந்த படத்துல நாலு பாடல்கள் இருக்கு, ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு டைப்ல  இருக்கும், அதுல முதல் பாடலா இருக்கற போவதெங்கே சாங் “கார்த்திக்” பாடியிருக்கிறாரு. இந்த படத்துக்கு background music அமைக்கும் போது musicians எல்லாருக்கும் அழுதுட்டாங்க. அதன் தாக்கம் ரொம்ப நாள் இருந்திச்சுனு சொன்னாங்க.என கூறினார்.
இப்படத்தை பற்றி துணை நடிகர் “ஹரி க்ரிஷ்” கூறியதாவது. 
ஜோதி படத்துல முக்கியமான கேரக்டர் ஒன்னு பண்ணியிருக்கேன். அது ரொம்ப நல்ல கேரக்டர்.படம் ரிலீஸ் க்கு அப்புறம் ரொம்ப பேசப்படும் கேரக்டரா இருக்கும். அது எந்தளவுக்கு நல்ல கேரக்டர்னா நடிச்சிக்கிட்டு இருக்கும்போது என்னோட கால் ஒடைஞ்சிருச்சி, ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் சொல்லிட்டாரு, பட் நா ரெஸ்டே எடுக்காம அடுத்த நாளே சூட்டிங்கு  வந்துட்டேன்.அந்த கேரக்டர்  உங்க எல்லாருக்கும் பிடிச்ச கேரக்டராவும்  இருக்கும் என பேசினார்.
இப்படத்தைப் பற்றி நடிகை “ஷீலா ராஜ்குமார்” கூறியதாவது
முழு ஜோதி படத்தையும் நா பாத்தது இல்ல, இப்பதான் ஃபஸ்ட் டைமா படத்தோட ஃபஸ்ட் பத்து நிமிஷம் பாக்குறேன். ஸ்கிரிப்ட்ல என்ன இருந்ததோ அதைவிட விஷூவலா பாக்கறப்ப ரொம்ப நல்லா வந்திருக்கு, உடனே முழு படமும் பாக்கணும் போல இருக்கு,  AV கிருஷ்ண பரமாத்மா ரொம்ப நல்லா இயக்கிய இருக்காரு.ஜோதி படத்துல எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும்  மிக்க நன்றி என கூறினார்.
Previous Post

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக இயக்குனர் திரு . ராஜேஷ் கண்ணா வின் புதிய முயற்சி..!

Next Post

செம்ம உற்சாகத்தில் “02” பட ஒளிப்பதிவாளர்..!

Next Post
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’

செம்ம உற்சாகத்தில் "02" பட ஒளிப்பதிவாளர்..!

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.