• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இளைஞர்களின் சாகசங்களும், பேய்களின் அட்டகாசமும் நிறைந்த ‘கஜானா’!

by Tamil2daynews
December 24, 2021
in சினிமா செய்திகள்
0
இளைஞர்களின் சாகசங்களும், பேய்களின் அட்டகாசமும் நிறைந்த ‘கஜானா’!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சினிமா என்பது மிகப்பெரிய காட்சி ஊடகம் என்றாலும், அதனுடைய முதல் நோக்கம் மக்களை மகிழ்விப்பது தான். அதனை சரியாக புரிந்துக்கொண்ட
படைப்பாளிகள், மக்களை மகிழ்விக்க என்றுமே தவறியதில்லை. அந்த வகையில், பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்குமான கலகலப்பான காமெடி, திகில் மற்றும் சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகி வருகிறது ‘கஜானா’.

போர் ஸ்கொயர்
ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரிப்பதோடு ,படத்தின் கதையும் அவரே எழுதியுள்ளார்.
ஜோதிகா நடித்த ’ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம் ராஜ் திரைக்கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார்.

இயக்குநர் வேலுபிரபாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகசப் பயத்தையும், அந்த கஜனாவை காப்பாற்றும் பேய்களின் அட்டகாசங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களுடன், திகில் மற்றும் காமெடியோடு சொல்லப்பட்டிருக்கும் இப்படம் பெண்கள் மற்றும் குழந்தைகளை வெகுவாக கவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் யானை, புலி, கரடி, குரங்கு மற்றும் பாம்பு போன்ற விலங்குகளை குழந்தைகள் ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர். குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக விலங்குகளை வைத்து காட்சிகளை படமாக்கிய படக்குழு, இதற்காக விலங்கு நல அமைப்பின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்றியுள்ளனர்.

கலகலப்பான காமெடி படமாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணி படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும் பாராட்டு பெறும் விதத்திலும் இருக்கும், என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் ‘கஜானா’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.

Previous Post

கிறிஸ்துமஸ் நாளில் நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்பட டீசர்  !

Next Post

தடைகளைக் கடந்து ‘நீ  சுடத்தான் வந்தியா ‘ படம் இம்மாதம் டிசம்பர் 31 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது !

Next Post
தடைகளைக் கடந்து ‘நீ  சுடத்தான் வந்தியா ‘ படம் இம்மாதம் டிசம்பர் 31 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது !

தடைகளைக் கடந்து 'நீ  சுடத்தான் வந்தியா ' படம் இம்மாதம் டிசம்பர் 31 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது !

Popular News

  • *மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், அமேசான் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  மாறா ட்ரெய்லர்,

    *மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், அமேசான் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  மாறா ட்ரெய்லர்,

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0
  • படம் எடுப்பதை விட புரமோட் செய்வது தான் முக்கிய வேலையாக உள்ளது – ‘வள்ளிமலை வேலன்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் V சேகர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் ருத்ரா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.