ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில்”விடுதலை பாகம் 1” திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது

by Tamil2daynews
May 16, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில்”விடுதலை பாகம் 1” திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது

RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடித்த “விடுதலை பாகம் 1”  திரைப்படம், சமீபத்தில்  ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  கடந்த  2023 மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழ்த் திரை வரலாற்றில் முத்திரை பதித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 28, 2023, ZEE5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம்  பார்வையாளர்களிடம் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை உயர்த்துவதுடன், தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெற்றிமாறன். அந்த வகையில் அவரது புதிய திரைப்படமான ‘விடுதலை பாகம் 1’  சமூகத்திற்கு அவசியமான படைப்பாகவும்,  ரசிகர்கள் கொண்டாடும்  படைப்பாகவும் அமைந்துள்ளது.
இதுவரையிலும் காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி முதன்முறையாக, மாறுபட்ட தோற்றத்தில் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். திரை வாழ்வின் முக்கியமான பாத்திரத்தில், வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்கள் காணாத பல காட்சிகளுடன்  இயக்குநரின் முழுமையான பார்வையில் அன்கட் வெர்ஷனாக இப்படம் ZEE5 தளத்தில் வெளியாகியுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
2023  ஆம்  ஆண்டு கடந்த ஆண்டைப் போலவே  தளத்திற்கு மிகவும்  வெற்றிகரமான ஆண்டாக அமைந்து வருகிறது, இந்த வருடம் சிறந்த ஒரிஜினல் தொடர்கள், திரைப்படங்கள், பிளாக்பஸ்டர் படங்கள், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் விமர்சன ரீதியிலும் பாராட்டப்பட்ட பல அட்டகாசமான  திரைப்படங்களை ZEE5 வழங்கி வருகிறது. ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி, செங்களம், ஒரு கோடை மர்டர் மிஸ்டரி மற்றும்  ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் என அனைத்து வெளியீடுகளும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, வெற்றிபெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது விடுதலை பாகம் 1 திரைப்படமும் இணைந்துள்ளது.
எண்ணற்ற வெற்றிப்படைப்புகளை கொண்டிருக்கும் ZEE5 தளம்  புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய வெப் சீரிஸ்களுடன் கூடிய தனது அடுத்த கட்ட படைப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளது. ZEE5 உடன் இணைந்திருங்கள் கோடையைக் கொண்டாடுங்கள்.
ZEE5 நிறுவனம் குறித்து; ZEE5 என்பது இந்தியாவின் இளமையான ஓடிடி தளம் மற்றும் பொழுதுபோக்கை தேடும்மில்லியன் கணக்கிலானவர்களுக்கு சிறந்த பன்மொழி கதைசொல்லியாகும். ZEE5 ஆனதுஉலகளவிலான வலுவான தளமாகும், ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில்இருந்து உருவான நுகர்வோருக்கு விருப்பமான ஒரு மறுக்கமுடியாத வீடியோ ஸ்ட்ரீமிங் தளம்இது 150க்கும் மேற்பட்ட வலைத் தொடர்கள் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானமணிநேரங்கள் தேவைக்கேற்ப உள்ளடக்கம் கொண்ட விரிவான மற்றும் மாறுபட்ட உள்ளடக்கநூலகத்தை வழங்குகிறது. 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) உள்ளடக்கம்வழங்குகிறது. சிறந்த ஒரிஜினல்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள் இதில் உள்ளன , கல்விதொழில்நுட்பம், திரை, நேரடி செய்தி தொலைக்காட்சி மற்றும் ஹெல்த்  & லைஃப்ஸ்டைல்ஆகியவற்றையும் வழங்குகிறது. உலகளாவிய தொழில்நுட்பவல்லுநர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான ஆழமான தொழில்நுட்பஅடுக்கு, எந்த தடையுமின்றி தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தைவழங்கும் வசதியை  ZEE5  செயல்படுத்தியுள்ளது.
Previous Post

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்- பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Next Post

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு

Next Post

'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு

Popular News

  • ‘போர் தொழில்’ விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நினைவுப்பாதையில் ஒரு பயணம் ; ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘டக்கர்’ விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விமானம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சித்தார்த்தின் புதிய அவதாரம், திவ்யன்ஷாவின் தைரியமான கதாபாத்திரம் மற்றும் ஹிட் பாடல்களின் தொகுப்பு என இன்று திரையரங்குகளில் ‘டக்கர்’ திரைப்படம் வெளியாகி உள்ளது!

June 10, 2023

விமானம் – விமர்சனம்

June 10, 2023

‘டக்கர்’ விமர்சனம்

June 10, 2023

எம் சினிமா பத்ரி தயாரிப்பில் சாஜிசலீம் இயக்கத்தில் விதார்த் -சுவேதா டோரத்தி நடிக்கும் புதுமையான சஸ்பென்ஸ் திரில்லர் ‘லாந்தர்’

June 10, 2023
பெல்-விமர்சனம்

பெல்-விமர்சனம்

June 9, 2023

நினைவுப்பாதையில் ஒரு பயணம் ; ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

June 9, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!