• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

by Tamil2daynews
June 20, 2022
in சினிமா செய்திகள்
0
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Lights On  Media  வழங்கும், இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”. ‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’  எனும் கருத்தில், இளைஞர்கள் குழுவின் புது முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகும் “பருந்தாகுது ஊர்க்குருவி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டுவதோடு, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இளம் படக்குழுவினரை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி “பருந்தாகுது ஊர்க்குருவி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக்கொள்ளும் சிக்கலான சூழலில், ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார், அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில்,  சர்வைவல் திரில்லர் பாணியில் சொல்வதே இப்படம். புத்தம் புதிய இளம் திறமையாளர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி வருகின்றனர். நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கூடலூர்  மண்வயல் கிராமம் அருகே  மனிதர்கள் நடமாடாத இருள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் படக்குழு கடும் உழைப்பில் படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளது. இதுவரை திரையில் கண்டிராத புது அனுபவமாக இத்திரைப்படம் இருக்கும்.
இயக்குநர் ராம் அவர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கோ.தனபாலன் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும்  Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா.P, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
தொழில் நுட்ப குழுவில் 
ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர் – ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன், இசை – ரெஞ்சித் உண்ணி (ஜிமிக்கி கம்மல் புகழ்), சண்டை காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
Previous Post

இந்து அறநிலையத் துறை அமைச்சரும், கவிப்பேரரசும் திறந்துவைத்த ஐஏஎஸ் அகாடமி..!

Next Post

பார்வையாளர்களை பரவசமடைய செய்த “காரி” இப்படத்தின் ட்ரெய்லர்..!

Next Post
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’

பார்வையாளர்களை பரவசமடைய செய்த "காரி" இப்படத்தின் ட்ரெய்லர்..!

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.