• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வளரும் பாடலாசிரியர் தரனின் பலமான நம்பிக்கை..!

by Tamil2daynews
June 21, 2022
in சினிமா செய்திகள்
0
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’
0
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வளரும் பாடலாசிரியர் தரனின் பலமான நம்பிக்கை..!

 

அண்மையில் நயன்தாரா நடித்த ஓ2 படத்தில்  பயணம் குறித்தான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில் வரும் வரிகள்தான் இது.

காத்தோடுதான் காத்தாக மெதப்போம்
நீரோடுதான் நீராக கலப்போம்
இயற்கையின் மடியில் கொஞ்சம்

வா சோம்பல் முறிப்போம்…

இதை எழுதியவர் வளர்ந்து வரும் பாடலாசிரியர் தரன். இலக்கிய தரத்தோடு சினிமா பாடல்கள் வர வேண்டும். அதே நேரத்தில் எளிதான வரிகளை உள்ளடக்கியும் இருக்க வேண்டும் என்கிற முனைப்போடு பாடல்களை எழுதி வருகிறார் இவர்.

தமிழில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தரன், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் எழுதிய ‘பக்கா மிடில் கிளாசுடா’ என்ற பாடல் மிடில் கிளாஸ் இளைஞர்களின் மோட்டிவேசன் பாடலாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இவர் ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு, திரிஷாவின் பரம்பத விளையாட்டு, எஸ் எஸ் குரமன் இசையில் பட்டதாரி உள்ளிட்ட சில படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கான தனியிசை ஆல்பங்களும் எழுதியிருக்கிறார்.

அயல்நாடுகளில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள் தமிழில் பேசுவதோடு நின்றுவிடக் கூடாது. தமிழ் இலக்கண இலக்கியங்களை அறிந்து கொள்வதோடு, பிழையின்றி எழுத படிக்கவும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் தரன். அதற்காக கணிணி வழியாக அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதைக் கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாகவும் செய்து வருகிறார்.

பாடலாசிரியர்களில் வைரமுத்துவையும் பட்டுக்கோட்டையையும் அதிகம் நேசிக்கும் தரன், தன் பாடல்களிலும் அப்படி ஒரு தரம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஓ2 படத்தைத் தொடர்ந்து யங் மங் சங், ரஜினி, சண்டக்காரி, சூப்பர் ஸ்டார், ஒன் டூ ஒன், எம்.ராஜேஷ் இயக்கத்தில் வரவிருக்கும் படம் என கைவசம் கணிசமான வாய்ப்புகளை வைத்திருக்கிறார் தரன். பாடலோடு மட்டுமல்லாமல் தற்பொழுது சன்னி லியோன், பிரியா மணி நடிக்கும் Quotation gang திரைப்படத்தில் வசனமும் எழுதிவருகிறார்.
Previous Post

தேசிய விருது பெற்ற ஜல்லிக்கட்டு படத்தை தமிழில் வெளியிட்ட பிரபலம்..!

Next Post

“வேழம்” படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா மேனன்..!

Next Post
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’

"வேழம்" படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா மேனன்..!

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.