• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்

by Tamil2daynews
August 30, 2020
in சினிமா செய்திகள்
0
ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர். இப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவது ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. அதே போல் ஆங்கிலத்தில் ஆல்பம் என்பது நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். எப்போது நம்ம ஆட்கள் இப்படியெல்லாம் ஆல்பம் தயாரித்து வெளியிடுவார்கள் என்ற ஏக்கம் இருந்தது.

அதையும் இப்போது ஒருவர் செய்து முடித்துள்ளார். ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் ஜி.வி;பிரகாஷ். ‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ என இசைகளத்தில் அசுரப் பாய்ச்சலில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், இப்போது இந்த ஆல்பத்தின் மூலம் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் கால்பதித்து புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.

‘கோல்ட் நைட்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.  இந்தப் பாடல்  ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல்.  ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.

எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும்.  ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.

இந்தப் பாடல் ஜிவி பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், யெஹோவாசன் அல்காரால் கலவை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.   ஒரு நடிகராக, இசையமைப்பாளராக, பாடகராக இருக்கும் ஜிவி, தனது கலை மூலமாக சர்வதேச அளவில் தனது ரசிகர்களிடம் தனக்கான ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளார்.

அசல் இசை மற்றும் கூட்டு முயற்சியைக் காட்டும் இந்தப் பாடல்கள் மூலம் தனது தாய்நாட்டுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட விரும்புகிறார் ஜிவி பிரகாஷ்.

Previous Post

ஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து  நடத்திய ஆன்லைன் நடனம் கவனத்தை ஈர்க்கிறது !

Next Post

திரைத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஜதுரா”

Next Post
திரைத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஜதுரா”

திரைத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஜதுரா"

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • சுழல் மற்றும் வதந்தி முதல் எக்ஸாம் வரை: தமிழ் இணையத் தொடர் கதையாடலுக்கு புதிய முகம் கொடுக்கும் புஷ்கர் – காயத்ரி !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.